search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே  ஆற்றில் மணல் அள்ளிய மினிலாரி பறிமுதல்
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்றில் மணல் அள்ளிய மினிலாரி பறிமுதல்

    ரோந்து பணியில் இருந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு இவர்களை மடங்கி பிடித்து விசாரணை செய்ததில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டில் மலட்டாறு ஒன்று உள்ளது. இந்த ஆற்றில் நேற்று இரவு 2 பேர் மினி லாரியில் அனுமதி இன்றி மணல் அள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு இவர்களை மடங்கி பிடித்து விசாரணை செய்ததில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியது தெரிய வந்தது.

    உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து இதற்கு காரணமான பண்ருட்டி வட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மினிலாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் தப்பி ஓடிய காரப்பட்டு பகுதியை சேர்ந்த குமார் என்பவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×