search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் கடத்திய டிரைவர் உட்பட 2 பேர் மீது வழக்கு
    X

    மணல் கடத்திய டிரைவர் உட்பட 2 பேர் மீது வழக்கு

    • லாரி பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே கள்ள தனமாக மணல் கடத்திய லாரியை நாட்டறம்பள்ளி தாசில்தார் லாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீஷ் நிலையத்தில் ஒப்படைத்தில் லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது போலிசார் வழக்கு பதிவு.

    நாட்டறம்பள்ளி தாசில்தார் க. குமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு மண்டல துணை வட்டாட்சியர் வருவாய் அலுவலர் விக்னேஷ் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய வருவாய்த்துறையினர் கனிம கடத்தலை தடுக்கும் வகையில் பச்சூர் பஞ்சாயத்து கவுண்டர் வட்டம் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்திய போது அதில் இருந்த டிரைவர் டிப்பர் லாரியை ரோட்டில் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டார்.

    பின்பு அருகில் சென்று பார்த்தபோது டிப்பர் லாரியில் சுமார் 4 யூனிட் மணல் இருந்தது பின்பு விசாரித்த போது மேற்படி டிப்பர் லாரி வெலக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் நவமணி என்பவருக்கு சொந்தமானது அதன் டிரைவர் மேல்பச்சூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என தெரிய வந்தது இதனையடுத்து மாற்று டிரைவர் மூலம் டிப்பர் லாரியை நாட்டறம்பள்ளி போலீஷ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது சம்பந்தமாக பச்சூர் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் நேற்று நாட்டறம்பள்ளி போலிஷ் நிலையத்தில் மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தார் புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலிஷ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×