search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sand robbery"

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
    குருபரப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் கும்மனூர் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த 3 லாரிகளில் சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல காவேரிப்பட்டணம் பகுதியில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது கெட்டூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்றிருந்த 2 லாரிகளை சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
    மணலூர்பேட்டை அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருக்கோவிலூர்:

    மணலூர்பேட்டை அருகே பள்ளிசந்தல் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 மோட்டார் சைக்கிள்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவி்ட்டு தப்பி ஓடிவிட்டார். இன்னொருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் பள்ளிச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் அய்யனார்(வயது 21), தப்பி ஓடியவர் ஏழுமலை மகன் பாலாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரை கைது செய்த போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பாலாஜியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்திய 3 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரை செல்வி தலைமையிலான போலீசார், சின்னபூங்குந்தி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, சின்னபூங்குந்தி பகுதியில் இருந்து தேசப்பள்ளிக்கு, ஒரு யூனிட் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சூளகிரி போலீஸ் நிலைய ஏட்டு அசோகன் மற்றும் போலீசார், காலிங்கவரம் கூட்டுரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் பஸ்தலப்பள்ளி பகுதியில் இருந்து, கர்நாடக மாநிலத்திற்கு லாரியில் 2 யூனிட் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மல்லப்புரம் பகுதியை சேர்ந்த டிரைவர் வேலு (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார், அஞ்செட்டி ஏரி அருகே ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தினர். ஆனால் வேனில் வந்த நபர்கள் வண்டியை நிறுத்தி விட்டு தப்பியோடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில் சோதனை செய்தனர்.

    அதில் அரை யூனிட் மணல் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மணலுடன் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டிரைவர் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பேரணாம்பட்டில் மணல் கடத்த பயன்படுத்திய மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    செங்கம்:

    செங்கம் அடுத்த மேல்புழுதியூர் முறையாறு பாலம் அருகே 4 மாட்டு வண்டிகளில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினர்.

    மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் செங்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மாட்டு வண்டிகளில் பயன்படுத்தப்பட்ட 8 மாடுகளை திருவண்ணாமலையிலுள்ள ஒரு கோசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலாற்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு மாதனூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது அனுமதியின்றி பாலாற்றில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரி உரிமையாளர் திருமலை குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது31). லாரி டிரைவர் மாதனூர் அடுத்த ஆர்பட்டியை சேர்ந்த பாரத்(28) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஆம்னிகாரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் மூட்டைகள் இருந்தது. மணல் மூட்டைகள் கொண்டு வருவதற்கான அனுமதி சீட்டை கேட்டனர். அப்போது காவிரி ஆற்று பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து புஞ்சை கடம்பன்குறிச்சியை சேர்ந்த சசிகுமார் (34), கேசவன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்து, ஆம்னி காரை பறிமுதல் செய்தனர்.

    தேனி அருகே மண் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே மண் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் விவசாய தேவைக்காக மண்எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனை பயன்படுத்தி சிலர் அனுமதியின்றி வேறு தேவைகளுக்கு மண் கடத்தி வருகின்றனர்.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல் காளவாசல் உள்ளிட்டவைகளுக்கு மர்மகும்பல் மண் கடத்தி வருகிறது. போலீசார் இவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் கடத்தலை தடுக்கமுடியவில்லை.

    சப்-இன்ஸபெக்டர் பவுன்ராஜ் தலைமையில் கோம்பை போலீசார் கருவேலம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மேற்குபகுதியில் உள்ள ஓடையில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு டிராக்டர் வேகமாக வந்தது. அந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது ஓடையில் மணல் திருடியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் தீபன்(28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் மணல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் வெங்கிளி, ஜமீன் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிரே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து லாரி டிரைவர் அமரேசன் (வயது 30). என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சத்தியமங்கலம் அருகே ஆற்று மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் சதுமுகையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நடுப்பாளையத்தில் இருந்து சதுமுகை நோக்கி ஒரு டிராக்டர் வந்தது. அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த டிராக்டரில் ஆற்று மணல் இருந்தது. அந்த மணல் ஆற்றில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்டதாகும்.

    அந்த மணலை கொண்டு வருவதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து அந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    டிராக்டரை ஓட்டி வந்த சதுமுகை, நடுப்பாளையத்தை சேர்ந்த ரவியை (வயது 43) போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தினர். டிராக்டரில் 1 யூனிட் ஆற்று மணல் இருந்தது. அந்த மணலுடன் டிராக்டர் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியவில்லை.

    இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த பள்ளிபுரம் கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கொசஸ்தலை ஆற்றின் கரையை உடைத்து லாரியில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    அவர்களில் கொண்டக்கரையை சேர்ந்த முனுசாமி, மகேந்திரன், சுப்பாரெட்டிபாளையத்தை சேர்ந்த வாசு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில் மணல் திருடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
    தனியார் நிறுவனத்தில் இருந்து 24 லாரிகளில் கடல் மணல் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #sandrobbey

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், ஜீவன்லால் நகர் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்று பல ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. இந்த கம்பெனிக்கு சொந்தமான இடம் பல ஏக்கரில் அங்கு உள்ளது. கடல் அருகில் இருப்பதால் அப்பகுதி முழுவதும் கடல் மண்ணாக இருந்தது.

    இந்த நிலையில் அங்குள்ள கடல் மண்ணை மர்ம கும்பல் லாரியில் கடத்துவதாக திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது தனியார் கம்பெனி இடத்தில் இருந்து 24 லாரிகளில் கடல் மணல் கடத்தப்படுவது தெரிந்தது. உடனடியாக போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து 24 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் லாரிகளில் இருந்த 37 பேரும் சிக்கினர்.

    பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை சென்னை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். பிடிபட்ட 37 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    கடல் மண்ணை கடத்தி செல்லும் கும்பல் அதனை தனி இடத்தில் கொட்டி வைத்து ஆற்று மணலுடன் கலந்து குறைந்த விலைக்கு விற்று வந்தது தெரிந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்குன்றம் பகுதியில் குடோனில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 150 டன் கலப்பட மணல் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தேவதானப்பட்டி அருகே மஞ்சளாற்றில் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மஞ்சளாற்று படுகையில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீருக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கொள்ளையர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    போலீசாரும் மணல் திருடும் கும்பலை பிடித்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. தேவதானப்பட்டி போலீசார் கெங்குவார்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு ஒருவர் டிராக்டரில் மணல் கடத்திக் கொண்டு இருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் கண்ணன் என தெரிய வந்தது. மேலும் அனுமதியின்றி மணல் அள்ளியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து கண்ணனை கைது செய்து டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×