search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saina Nehwal"

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் சாய்னா நேவால் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். #DenmarkOpen #SainaNehwal
    ஓடென்ஸ்:

    டென்மார்க் நாட்டின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் பட்ட போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற சாய்னா நேவால் ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் காலிறுதி போட்டியில் விளையாடினார்.

    இதில் முதல் செட்டை ஒகுஹராவிடம் பறிகொடுத்த நேவால் மீண்டு வந்து அடுத்த 2 செட்களிலும் கவனமுடன் விளையாடி தனது ஆதிக்கத்தினை செலுத்தி போட்டியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    இந்த போட்டியில் 21-17, 16-21, 12-21 என்ற செட் கணக்கில் ஒகுஹராவை நேவால் வீழ்த்தினார். இந்த போட்டி 58 நிமிடங்கள் நீடித்தது. #DenmarkOpen #SainaNehwal
    டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். #DenmarkOpenBadminton #SainaNehwal

    டென்மார்க் நாட்டில் பேட் மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கு ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால்- முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹாரா மோதினர்.

    இதில் முதல் செட்டை 17-21 என்ற கணக்கில் இருந்த சாய்னா அடுத்த இரண்டு செட்டுகளை தன் வசப்படுத்தினார்.

    முடிவில் சாய்னா நேவால் 17-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    அரை இறுதியில் சாய்னா, இந்தோனேஷியாவின் மாரீஸ்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

    இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் கால் இறுதியில் சக நாட்டு வீரர் சமீர் வர்மாவை 22-20, 19-21, 23-21 என்ற கணக்கில் வீழ்த்தினார். அரை இறுதியில் ஸ்ரீகாந்த், நம்பர் ஒன் வீரர் கென்டூ மோமொடாவுடன் (ஜப்பான்) மோதுகிறார். #DenmarkOpenBadminton #SainaNehwal 

    காதலன் காஷ்யப்பை டிசம்பர் 16-ந் தேதி கரம் பிடிக்க இருப்பதை சாய்னா நேவால் முதல்முறையாக உறுதி செய்துள்ளார். #SainaNehwal #Wedding #ParupalliKashyap
    ஐதராபாத்:

    ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சக வீரரும், தன்னுடன் ஒரே அகாடமியில் (கோபிசந்த் அகாடமி) பயிற்சி பெற்று வருபவருமான பாருபள்ளி காஷ்யப்பை வருகிற டிசம்பர் 16-ந் தேதி திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.



    ஆனால் இந்த திருமணம் குறித்து சாய்னா நேவால், காஷ்யப் ஆகியோர் தொடர்ந்து மவுனம் சாதித்து வந்தனர். இந்த நிலையில் காஷ்யப்பை டிசம்பர் 16-ந் தேதி கரம் பிடிக்க இருப்பதை சாய்னா நேவால் முதல்முறையாக உறுதி செய்துள்ளார். இது குறித்து சாய்னா நேவால் அளித்த ஒரு பேட்டியில், ‘2007-ம் ஆண்டு முதல் காஷ்யப்பை காதலித்து வருகிறேன். விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் தான் இருவரும் திருமணத்தை தாமதப்படுத்தினோம். போட்டி நிறைந்த உலகில் நாம் வசித்து வருகிறோம். ஒருவருடன் நெருக்கமாகுவது என்பது கடினமானதாகும்.

    ஆனால் நாங்கள் ஏதோ ஒருவிதத்தில் எளிதாக ஒருவருக்கொருவர் நெருங்கி பேசினோம். காதலை என்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லவில்லை. பெரும்பாலான நேரங்களில் போட்டிக்கு செல்லும் போது பெற்றோர்கள் என்னுடன் பயணம் செய்வது வாடிக்கையாகும். நான் யாருடன் நெருக்கமாக பழகுகிறேன் என்பதை வைத்து அவர்கள் எங்கள் காதலை புரிந்து கொண்டனர்’ என்று தெரிவித்துள்ளார். #SainaNehwal #Wedding #ParupalliKashyap
    கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியடைந்தார். #SainaNehwal
    கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடர் சியோல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் சாய்னா நேவால் ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

    5-ம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால் முதல் செட்டை 21-15 என எளிதில் கைப்பற்றினார். சாய்னாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 3-ம் நிலை வீராங்கனையான ஒகுஹாரா 2-வது செட்டை 21-15 எனக் கைப்பற்றினார்.



    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர். 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் சாய்னா 16-10 என முன்னிலைப் பெற்றிருந்தார். அதன்பின் 20-16 என முன்னிலை பெற்றிருந்தார்.

    ஒரு புள்ளி எடுத்தால் வெற்றி பெற்று விடலாம் என சாய்னா இருந்த நிலையில், ஒகுஹாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக 6 புள்ளிகள் பெற்று 22-20 என வெற்றி பெற்றார். கடும் போராட்டத்திற்குப் பிறகு சாய்னா தோல்வியடைந்து வெளியேறினார். சாய்னா இந்த தோல்வியின் மூலம் ஒகுஹாராவிற்கு எதிராக தொடர்ந்து மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளார்.
    கொரியா ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #SainaNehwal
    தென்கொரியா ஓபன் பேட்மிண்டன் சியோல் நகரில் நநடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் கொரியாவின் கிம் ஹியோ மின்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் சாய்னா நேவால் 21-11, 21-11 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் சமீர் வர்மா டென்மார்க் வீரரிடமும், வைஷ்ணவி அமெரிக்கா விராங்கனையிடமும் வீழ்ந்தனர்.
    10 ஆண்டுகளாக காதலித்து வந்த சாய்னா நேவால் தற்போது 32 வயதான காஷ்யப்பை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் டிசம்பர் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. #SainaNehwal #ParupalliKashyap #Badminton
    ஐதராபாத்:

    இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவர் சாய்னா நேவால்.

    ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் என சர்வதேச போட்டிகளில் பல வெற்றிகளை பதித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால் சக பேட்மின்டன் வீரரான காஷ்யப்பை காதலித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவர் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.

    10 ஆண்டுகளாக காதலித்து வந்த சாய்னா நேவால் தற்போது 32 வயதான காஷ்யப்பை திருமணம் செய்ய உள்ளார். இந்த திருமணம் டிசம்பர் 16-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. இரு வீட்டு பெற்றோரும் பேசி முடிவு செய்து இதை அறிவித்து உள்ளனர்.



    சாய்னா-காஷ்யப் திருமணத்துக்கு 100 பேருக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படும்.

    திருமண வரவேற்பை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 21-ந்தேதி திருமண வரவேற்பு நடக்கிறது. சாய்னா திருமணம் செய்ய இருக்கும் காஷ்யப்பும் முன்னணி பேட்மின்டன் வீரர் ஆவார். 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் வென்றவர்.

    தினேஷ் கார்த்திக்- தீபிகா பல்லிகல், இஷாந்த்சர்மா- பிரதீமா சிங், கீதா போகட்- பவன் குமார், ஷாக்சி மாலிக்- சத்யவர்த் காடியன் ஆகியோர் வரிசையில் சாய்னா நேவால்- காஷ்யப் இணைகிறார்கள். #SainaNehwal #ParupalliKashyap #Badminton
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார். #ChinaOpen2018
    ஜப்பான் ஒபன் பேட்மிண்டன் தொடர் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்நிலையில் சீனா ஓபன் பேட்மிண்டன் நடைபெற்று வருகிறது.

    இதில பிவி சிந்து, சாய்னா நேவால் கலந்து கொண்டார்கள். சாய்னா நேவால் முதல் சுற்றில் கொரியாவின் சங் ஜி ஹியூனை எதிர்கொண்டார். இதில் சாய்னா 22-20, 8-21, 14-21 என அதிர்ச்சி தோல்வியடைந்தார்.


    பிவி சிந்து

    மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான பிவி சிந்து ஜப்பானின் சயேனா கவாகாமியை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் மானு ஆத்ரி - பி சுமீத் ரெட்டி சீன தைபே ஜோடியிடம் 21-13, 13-12, 12-21 என தோல்வியடைந்தது.
    ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #SainaNehwal
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், முதல் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீன தைபே வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா, 17-21, 14-21 என்ற நேர்செட்களில் போராடித் தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய போட்டியில் சாய்னா பெறும் முதல் பதக்கம் இதுவாகும்.

    இதையடுத்து இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து, ஜப்பானின் அகானே யமகுச்சி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில் முதல் செட்டை பிவி சிந்து கைப்பற்றியிருப்பதால், போட்டியின் முடிவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். #AsianGames2018 #SainaNehwal
    பேட்மிண்டன் காலிறுதியில் தாய்லாந்து வீராங்கனையை 2-1 என வீழ்த்தி பிவி சிந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்கில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

    ஒரு காலிறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், மற்றொரு காலிறுதியில் பிவி சிந்து தாய்லாந்தின் நிட்சயோன் ஜிண்டாபோல்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை 21-11 என பிவி சிந்து எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் தாய்லாந்து வீராங்கனை சிறப்பாக விளையாடினார். இதனால் பிவி சிந்து 16-21 என இழந்தார்.



    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 21-14 என 3-வது செட்டை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார். பிவி சிந்துவிற்கு இந்த வெற்றியை பெற 61 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    அரையிறுதிக்கு முன்னேறியதால் சாய்னாவைத் தொடர்ந்து பிவி சிந்துவும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதனால் பேட்மிண்டனில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைக்கிறது.
    ஆசிய விளையாட்டு போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்கில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

    ஒரு காலிறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் இந்தோனேசியாவில் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-18, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.



    பேட்மிண்டனில் அரையிறுயில் தோல்வியடையும் வீராங்கனைகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும். இதனால் சாய்னா நேவால் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் 1982-ம் ஆண்டுடிற்குப் பிறகு இந்தியா ஆசிய விளையாட்டு போட்டி பேட்மிண்டனில் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்லப் போகிறது.
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார். #AsianGames2018 #SainaNehwal
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், இந்தோனேசிய வீராங்கனை பிட்ரியானியை எதிர்கொண்டார்.

    துவக்கத்தில் இருந்தே ஆட்டத்தை சாய்னா தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். முதல் செட்டை 21-6 என எளிதாக கைப்பற்றிய சாய்னா, 2வது செட்டை சற்று போராடி 21-14 என்ற கணக்கில் வென்றார். 31 நிமிடங்களில் 2-0 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்ற சாய்னா, காலிறுதியை உறுதி செய்தார்.



    இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் பி.வி. சிந்து, இந்தோனேசிய வீராங்கனை டங்ஜங் கிரிகோராவை சந்திக்க உள்ளார்.  #AsianGames2018 #SainaNehwal
    உலக பேட்மின்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் சாய்னா நேவாலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. #worldbadmintonrankings #SainaNehwal
    உலக பேட்மின்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்தியாவின் சாய்னா நேவாலுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதல் 10 இடத்துக்குள் இருந்த அவர் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் நடந்த உலக போட்டியில் கால்இறுதியில் சாய்னா தோற்று இருந்தார். இதனால் அவர் இந்த சறுக்கலை சந்தித்துள்ளார்.

    உலகபோட்டி இறுதி ஆட்டத்தில் தோற்று வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து 3-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டார். ஆண்கள் தரவரிசையில் கடாம்பி ஸ்ரீகாந்த் 8-வது இடத்திலும், பிரனாய் 11-வது இடத்திலும் உள்ளனர்.   #worldbadmintonrankings #SainaNehwal
    ×