search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roger Federer"

    ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. #ATPFinal #RogerFederer #NovakDjokovic
    லண்டன்:

    டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சேர்க்கப்பட்டார்.

    முன்னாள் வீரர்கள் குகா குயர்டன், லெய்டன் ஹெவிட் ஆகிய இரு முன்னாள் வீரர்களின் பெயரில் குரூப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘குயர்டன்’ பிரிவில் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), மரின் சிலிச் (செர்பியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), ‘ஹெவிட்’ பிரிவில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் திம் (ஆஸ்திரியா), நிஷிகோரி (ஜப்பான்), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரர்களும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    விம்பிள்டன் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் சூப்பர் பார்மில் உள்ளார். அதனால் இந்த முறை அவர் வாகை சூடுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

    கவுரவமிக்க இந்த போட்டியில் 16-வது முறையாக களம் காணும் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 7-வது முறையாக பட்டத்தை வெல்வதில் தீவிரம் காட்டுகிறார். கோப்பையை வென்றால், சர்வதேச போட்டியில் அது அவரது 100-வது பட்டமாக அமையும்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.61 கோடியாகும். போட்டி கட்டணமாக ரூ.1½ கோடி, லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.1½ கோடி வீதம் வழங்கப்படும். இறுதிப்போட்டி வெற்றிக்கு ரூ.9¼ கோடி அளிக்கப்படும். ஆக, தோல்வியே சந்திக்காமல் கோப்பைக்கு முத்தமிடும் வீரர் மொத்தம் ரூ.19½ கோடியை பரிசாக அள்ளலாம். அத்துடன் 1,500 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும்.

    இன்றைய முதல் நாளில் ஆண்டர்சன்-டொமினிக் திம் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி), பெடரர்-நிஷிகோரி (நள்ளிரவு 1.30 மணி) ஆகியோர் மோதுகிறார்கள்.

    இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறது. இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா, லியாண்டர் பெயஸ் உள்ளிட்டோர் தரவரிசையில் பின்தங்கி இருப்பதால் இந்த போட்டிக்கு தகுதி பெறவில்லை.
    பிரான்ஸில் நடைபெற்று வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். #RogerFederer
    பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் 3-ம்நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் இத்தாலி வீரர் பெபினோ போக்னிஸியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டங்களில் ரோஜர் பெடரர்- நிஷிகோரி (ஜப்பான்), ஜோகோவிச் (செர்பியா)- மரீன் சிலிச் (குரோஷியா), ஜாக் சாக் (அமெரிக்கா)- டொமினிக் தீயெம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வேரேவ் (ஜெர்மனி)- கரேன் காசநோவ் (ரஷியா) மோதுகிறார்கள்.
    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்-ஐ வீழ்த்தியதன் மூலம் ஜோகோவிச் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். #Djokovic
    டென்னிஸ் விளையாட்டில் நடால், ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் முன்னணி வீரர்களாக திகழ்ந்து வருகிறார்கள். டென்னிஸ் தரவரிசையில் நடால் முதல் இடத்திலும், ரோஜர் பெடரர் 2-வது இடத்திலும், நோவக் ஜோகோவிச் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    தற்போது ஷாங்காய் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதி ஒன்றில் நோவக் ஜோகோவிச் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ்-ஐ எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-2, 6-1 என நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.



    இதன்மூலம் ஜோகோவிச் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ரோஜர் பெடரரை பின்னுக்குத் தள்ளி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். திங்கட்கிழமை அதிகாரப்பூர்வ தரவரிசை வெளியிடப்பட இருக்கிறது.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். #USOpen2018 #NovakDjokovic
    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் பெடரர், ஜோகோவிச் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். முன்னணி வீராங்கனை ஜெர்மனியின் கெர்பர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 6-வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.



    ஆண்கள் பிரிவில் 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசை தோற்கடித்து 17-வது முறையாக அமெரிக்க ஓபனில் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். பெடரர் அடுத்து ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட்டை எளிதில் வீழ்த்தினார்.

    முன்னாள் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச், ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் அலெக்ஸ் டி மினாருடன் மல்லுகட்டினார். இதில் முதல் இரு செட்டுகளை பறிகொடுத்த (4-6, 3-6) மரின் சிலிச் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு எஞ்சிய மூன்று செட்டுகளை 6-3, 6-4, 7-5 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார்.

    பெண்கள் பிரிவில் 5-ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 5-7, 1-6 என்ற நேர் செட்டில் 20-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவிடம் (பெலாரஸ்) மண்ணை கவ்வினார். இதன் மூலம் சபலென்கா, கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல்முறையாக 4-வது சுற்றை எட்டியுள்ளார்.

    இதே போல் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், விம்பிள்டன சாம்பியனுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரும் 3-வது சுற்றை தாண்டவில்லை. அவரை 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சுலோவக்கியாவின் சிபுல்கோவா விரட்டினார். இதே போல் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் பிரான்சின் கரோலின் கார்சியா 7-5, 4-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் 24-ம் நிலை வீராங்கனை சுவாரஸ் நவரோவிடம் (ஸ்பெயின்) 2 மணி 24 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் ரஷியாவின் மரிய ஷரபோவா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) துவம்சம் செய்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஜப்பானின் நவோமி ஒசாகா தன்னை எதிர்த்த சாஸ்னோவிச்சுக்கு (பெலாரஸ்) ஒரு கேம் கூட விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி கண்டு மிரட்டினார்.  #USOpen2018 #NovakDjokovic
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பைரேவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர். #USOpen2018 #RogerFederer
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரரும் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பைரேவும் மோதினர்.

    ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெடரர் சிறப்பாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7 -5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-4 என்ற கணக்கிலும்  பெடரர் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், ரோஜர் பெடரர் பெனோயிட் பைரேவை 7-5, 6-4. 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னணி வீரரான பெடரர் மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோசுடன் மோதுகிறார். #USOpen2018 #RogerFederer
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர், நிஷியாகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #RogerFederer
    நியூயார்க்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று இந்திய நேரப்படி அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் நிஷியாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். பெடரர் அடுத்து பிரான்சின் பெனோய்ட் பேரை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 7-6 (5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் மார்கரிட்டா காஸ்பர்யனை (ரஷியா) 1 மணி 45 நிமிடங்கள் போராடி விரட்டியடித்தார். இதே போல் முன்னாள் சாம்பியன் மரிய ஷரபோவா (ரஷியா) 6-2, 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் 39 வயதான பட்டி ஷின்டரை (சுவிட்சர்லாந்து) சாய்த்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் சாம்பியனான மோனிகா பிய்க் (பியூர்டோரிகோ), தன்னை எதிர்த்த ஸ்டெபானி வோஜிலிக்கு (சுவிட்சர்லாந்து) எந்த ஒரு கேமையும் விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் துவம்சம் செய்தார்.
    அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச் #Federer #Djokovic
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், 10-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4-6, 4-6 என ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் 1-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தரநிலை பெறாத கிகி பெர்ட்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-2 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் பெர்ட்டென்ஸ் கடுமையான அளவில் பதிலடி கொடுத்தார். இரண்டு பேரும் மாறிமாறி கேம்ஸை கைப்பற்ற ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது.



    இறுதியில் கிகி பெர்ட்டென்ஸ் 7(8) - 6(6) என சிமோனா ஹாலெப்பை வீழ்த்தினார். இதனால் 1-1 என இருவரும் சமநிலை பெற்றதால் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டை கைப்பறியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு களம் இறங்கினார்கள்.

    ஆனால் சிமோனா ஹாலெப் 2-6 என எளிதில் சரணடைந்தார். இதனால் பெர்ட்டென்ஸ் 2-6, 7(8) - 6(6), 6-2 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். #CincinnatiMasters
    அமெரிக்காவின் ஒஹியோ சின்சினாட்டி அருகே உள்ள மேசன் என்ற இடத்தில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஒன்றில் 10-ம் நிலை வீரர் ஜோகோவிச் - 7-ம் நிலை வீரர் மரின் சிலிச் ஆகியோர் மோதினார்கள்.

    இதில் ஜோகோவிச் 6-4, 3-6, 6-3 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் - 11-ம் நிலை வீரரான கோபின் ஆகியோர் மோதினார்கள்.



    இதில் 20-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் முதல் செட்டை 7(7) - 7(3) என கைப்பற்றினார். 2-வது செற்றில் இருவரும் 1-1 என சமநிலையில் இருக்கும்போது கோபின் ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.



    இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கும் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் - ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த இருக்கிறார்கள்.
    விம்பிள்டனில் அட்டகாசமான ஃபார்வர்டு டிஃபென்ஸ் கிரிக்கெட் ஸ்ட்ரோக் வைத்து ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடித்தார் பெடரர். #Wimbledon2018
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் 1-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 22-ம் நிலை வீரரான அட்ரியன் மன்னரினோவை எதிர்கொண்டார்.

    இதில் 6-0, 7-5, 6-4 என ரோஜர் பெடரர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ரோஜர் பெடரர் 2-0 என முதல் செட்டில் முன்னிலையில் இருக்கும் இருக்கும்போது வேடிக்கையான விஷயம் ஒன்று நடந்தது.

    பெடரர் செய்த சர்வீஸ் தவறாக சென்றது. வந்த பந்தை வேகத்தில் அட்டிரியன் பெடரரை நோக்கி திருப்பி அடித்தார். அந்த பந்தை கிரிக்கெட் ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது ஃபார்வர்டு டிஃபென்ஸ் ஸ்ட்ரோக் வைப்பதுபோல், பெடரர் ஸ்ட்ரோக் வைத்தார்.

    இதை கவனித்த விம்பிள்டன் அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, பெடரரின் இந்ந்த ஃ.பார்வர்டு டிஃபென்ஸ்-க்கு ஐசிசி என்ன ரேங்க் கொடுக்கும்?’’ என்று கேள்வி கேட்பதுபோன்று டுவிட் செய்திருந்தது.

    இதற்கு பெருமூச்சு விட்டதுபோன்று, ஐசிசி ஓகே என்று சொல்லி நம்பர் ஒன் என்று பதில் டுவிட் செய்திருந்தது.

    இதற்கிடையே சச்சின் தெண்டுல்கரும் விம்பிள்டன் டுவிட்டிற்கு பதில் டுவிட் செய்திருந்தார்.

    சச்சின் டுவிட் செய்ததும். ஜாம்பவான் ஜாம்பவானை ஆதரிக்கும்போது... என படத்தை வெளியிட்டு ஐசிசி அசத்தியுள்ளது.
    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogerFederer #MarinCilic
    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை சந்தித்தார். இதில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில், கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான மரின் சிலிச் (குரோஷியா) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அஜ்லா டாம்ஜனோவிச்சை(ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  #RogerFederer #MarinCilic #tamilnews
    ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் நம்பர் ஒன் இடத்தை இழந்துள்ளார் ரோஜர் பெடரர். #RogerFederer
    ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - குரோசியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார்.

    இந்த போட்டியின் முதல் செட்டை 7(8) - 6(6) என கோரிச் போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பெடரர் 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் கோரிச் அதிரடியாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய கோரிச் இந்த செட்டை 6-2 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்ற கோரிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.



    முன்னணி வீரரான ரோஜர் பெடரர் புல்தரையில் தொடர்ச்சியாக 20 வெற்றிகள் பெற்றிருந்தார். கோரிச் அந்த சாதனைக்கு இறுதிப் போட்டியில் முற்றுப்புள்ளி வைத்தார். இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்ததன் மூலம் பெடரர் நம்பர் ஒன் இடத்தையும் இழந்துள்ளார்.

    நடால் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றியுள்ளார். இருவருக்கும் இடையில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. பிரெஞ்ச் ஓபனை வென்று நம்பர் ஒன் இடத்தில் இருந்த நடாலை, ஸ்டட்கார்ட் தொடரை வென்ற பெடரர் முதல் இடத்திற்கு முன்னேறினார். தற்போது 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.
    ஜெர்மனியில் நடைபெற்ற ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி குரோசியா வீரர் போர்னா கோரிச் சாம்பியன் பட்டம் வென்றார். #HalleOpen2018 #BornaCoric #RogerFederer

    ஜெர்மனியில் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வந்தது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் - குரோசியாவின் போர்னா கோரிச்சை எதிர்கொண்டார். 

    இந்த போட்டியின் முதல் செட்டை 7-6 (8-6) என கோரிச் போராடி கைப்பற்றினார். இரண்டாவது செட்டை பெடரர், 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.

    மூன்றாவது செட்டில் கோரிச் அதிரடியாக விளையாடினர். இந்த செட்டை அதிரடியாக விளையாடிய கோரிச், 6-2 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட்களில் வெற்றி பெற்ற கோரிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #HalleOpen2018 #BornaCoric #RogerFederer
    ×