search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விம்பிள்டன் டென்னிஸ் - பெடரர், மரின் சிலிச் வெற்றி
    X

    விம்பிள்டன் டென்னிஸ் - பெடரர், மரின் சிலிச் வெற்றி

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்றனர். #RogerFederer #MarinCilic
    லண்டன்:

    ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் உயரியதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது.

    இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), உலக தரவரிசையில் 57-வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசன் லாஜோவிச்சை சந்தித்தார். இதில் பெடரர் 6-1, 6-3, 6-4 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்றொரு ஆட்டத்தில், கடந்த ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான மரின் சிலிச் (குரோஷியா) 6-1, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் யோஷிஹிடோ நிஷிகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6-2, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஜோர்டான் தாம்சனை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் வர்வரா லெப்செங்கோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில், கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 1-6, 3-6 என்ற நேர்செட்டில் குரோஷியா வீராங்கனை டோனா வெகிச்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அஜ்லா டாம்ஜனோவிச்சை(ஆஸ்திரேலியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.  #RogerFederer #MarinCilic #tamilnews
    Next Story
    ×