search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷரபோவா"

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், ஷரபோவா முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #AUSOpen
    இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் இன்று தொடங்கியது. உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டக்வொர்த்தை எதிர்கொண்டார். இதில் நடால் 6-4, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்று முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) 6-3, 5-7, 6-2, 6-1 என்ற கணக்கில் அட்ரியன் மனோரியாவை (பிரான்ஸ்) வீழ்த்தினார். டிமிட்ரோவ் (பல்கேரியா) வெர்ட்ஸ்கோவா (ஸ்பெயின்) ஆகியோர் முதல் சுற்றில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    2008 சாம்பியனும், தரவரிசையில் 30-வது இடத்தில் இருப்பவருமான ரஷிய வீராங்கனை மரியா ‌ஷரபோவா தொடக்க சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த ஹேரியட் டார்ட்டை எதிர்கொண்டார். இதில் ‌ஷரபோவா 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 5-வது வரிசையில் இருப்பவரான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த டெய்லர் டவுன்சென்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



    மற்ற ஆட்டங்களில் கார்சியா (பிரான்ஸ்) ஆர்யனா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். 14-வது வரிசையில் இருக்கும் ஜூலியா கோஜர்ஸ் (ஜெர்மனி) முதல் சுற்றிலேயே வெளியேறினார். அவர் 6-2, 6-7 (5-7), 4-6 என்ற கணக்கில் அமெரிக்க வீராங்கனை கோலின்சிடம் வீழ்ந்தார்.
    அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் சிலிச் 7-6, 8-6, 6-2, 6-4 என்ற கணக்கில் டேவிட் கோபினை வீழத்தி கால் இறுதிக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷரபோவா அதிர்ச்சிகரமாக தோற்றார். #USOpen
    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    7-வது வரிசையில் இருக்கும் சிலிச் (குரோஷியா) 7-6, (8-6), 6-2, 6-4 என்ற கணக்கில் 10-வது வரிசையில் இருக்கும் டேவிட் கோபினை (பெல்ஜியம்) வீழத்தினார். அவர் கால் இறுதியில் நிஷி கோரியை (ஜப்பான்) சந்திக்கிறார். நிஷிகோரி 6-3, 6-2, 7-5 என்ற கணக்கில் ஜெர்மனி வீரர் பிலிப்பை தோற்கடித்தவர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் சாம்பியனும், தர வரிசையில் 22-வது இடத்தில் இருப்பவருமான ‌ஷரபோவா (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.



    ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் அவரை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற கணக்கில் சிபுல்கோவாவையும் (சுலோவாக்கியா), நவ்மி ஒசாகா (ஜப்பான்) 6-3, 2-6, 6-4 என்ற கணக்கில் ‌ஷப்லென்காவையும் (பெலாரஸ்), லெசியா சுரென்கோ (உக்ரைன்) 6-7 (3-7), 7-5, 6-2 என்ற கணக்கில் வான்ட்ரோ கோவாவையும் (செக்குடியரசு) தோற்கடித்து கால் இறுதியில் நுழைந்தனர்.

    கால் இறுதி ஆட்டங்களில் சுராஸ்-கெய்ஸ், ஒசாகா- சுரென்கோ மோதுகிறார்கள். #USOpen
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர், நிஷியாகாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #RogerFederer
    நியூயார்க்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று இந்திய நேரப்படி அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 5 முறை சாம்பியனான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட்டில் நிஷியாகாவை (ஜப்பான்) தோற்கடித்தார். பெடரர் அடுத்து பிரான்சின் பெனோய்ட் பேரை சந்திக்கிறார். மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான ஜோகோவிச் (செர்பியா) 6-3, 3-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 7-6 (5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் மார்கரிட்டா காஸ்பர்யனை (ரஷியா) 1 மணி 45 நிமிடங்கள் போராடி விரட்டியடித்தார். இதே போல் முன்னாள் சாம்பியன் மரிய ஷரபோவா (ரஷியா) 6-2, 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் 39 வயதான பட்டி ஷின்டரை (சுவிட்சர்லாந்து) சாய்த்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஒலிம்பிக் சாம்பியனான மோனிகா பிய்க் (பியூர்டோரிகோ), தன்னை எதிர்த்த ஸ்டெபானி வோஜிலிக்கு (சுவிட்சர்லாந்து) எந்த ஒரு கேமையும் விட்டுக்கொடுக்காமல் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் துவம்சம் செய்தார்.
    அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா, ஷரபோவா, முர்ரே ஆகியோருக்கு தரநிலை வழங்கப்படவில்லை.
    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படுவது சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடராகும். இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டி நடைபெறும்.



    இந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், ஷரபோவா மற்றும் முர்ரே ஆகியோர் பங்கேற்று விளையாடுகிறார்கள்.



    ஆனால் இவர்களுக்கு இந்த தொடருக்கான தரநிலை வழங்கப்படவில்லை. ரபெல் நடால், சிமோனா ஹாலெப் முதல் இடத்தை பிடித்துள்ளனர். பெடரர் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் வரும் திங்கட்கிழமை (13-ந்தேதி) தொடங்குகிறது.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் நம்பர் ஒன் வீரரும், 10 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-2, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் 70-ம் நிலை வீரர்மேக்ஸ்மிலன் மார்ட்ரெரை (ஜெர்மனி) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 1-6, 2-6, 7-5, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து 7-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதியில் ரபெல் நடால்-டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் மோதுகிறார்கள்.

    இன்னொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ 6-4, 6-4, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 16-ம் நிலை வீராங்கனை எலிசி மெர்டென்சை (பெல்ஜியம்) எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-7 (5-7), 3-6 என்ற நேர்செட்டில் 14-ம் நிலை வீராங்கனை டாரியா கசட்கினாவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். வெற்றி பெற்ற டாரியா கசட்கினா கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் 7-வது இடத்தில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி கண்டார்.

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, உக்ரைன் வீராங்கனை லிசி சுரெங்கோவை சந்தித்தார். இதில் முகுருஜா முதல் செட்டில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது லிசி சுரெங்கோ காயம் காரணமாக விலகினார். இதனால் முகுருஜா வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். #FrenchOpen #RafaelNadal #SimonaHalep
    பிரெஞ்ச் ஓபனில் இன்று நடக்கும் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனைகள் செரீனா வில்லியம்சும் மரிய ஷரபோவாவும் களத்தில் இறங்குகின்றனர். #FrenchOpen #SerenaWilliams #MariaSharapova
    பிரெஞ்ச் ஓபனில் இன்று நடக்கும் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனைகள் செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா) - மரிய ஷரபோவாவும் (ரஷியா) கோதாவில் இறங்குகிறார்கள். பரம போட்டியாளர்களான இவர்கள் 2016-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக மோதுவதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    இருவரும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள். இதில் ஷரபோவா 19 ஆட்டங்களில் தோல்வி கண்டு இருக்கிறார். கடைசியாக மோதிய 18 ஆட்டங்களில் செரீனா வசமே வெற்றி கிட்டியிருக்கிறது. 14 ஆண்டுகளாக செரீனாவை வீழ்த்த முடியாமல் தவிக்கும் ஷரபோவா நீண்டகால ஏக்கத்தை தணிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு 36 வயதான செரீனா பங்கேற்றுள்ள முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. #FrenchOpen #SerenaWilliams #MariaSharapova  
    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்டாபென்கோவை வீழ்த்தி ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறினார். #ItalianOpen #Sharapova
    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) விரட்டினார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது தரவரிசையில் 40-வது இடம் வகிப்பவருமான ரஷியாவின் மரிய ஷரபோவா, 6-ம் நிலை வீராங்கனையும், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) எதிர்கொண்டார். 3 மணி 13 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் ஷரபோவா 6-7 (6-8), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்டாபென்கோவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் ஷரபோவா டாப்-10 வீராங்கனை ஒருவரை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.#ItalianOpen #Sharapova
    ×