என் மலர்

  செய்திகள்

  டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்
  X

  டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது. #ATPFinal #RogerFederer #NovakDjokovic
  லண்டன்:

  டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 18-ந்தேதி வரை நடக்கிறது. 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக அமெரிக்காவின் ஜான் இஸ்னர் சேர்க்கப்பட்டார்.

  முன்னாள் வீரர்கள் குகா குயர்டன், லெய்டன் ஹெவிட் ஆகிய இரு முன்னாள் வீரர்களின் பெயரில் குரூப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ‘குயர்டன்’ பிரிவில் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), மரின் சிலிச் (செர்பியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), ‘ஹெவிட்’ பிரிவில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), டொமினிக் திம் (ஆஸ்திரியா), நிஷிகோரி (ஜப்பான்), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரர்களும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

  விம்பிள்டன் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான செர்பியாவின் ஜோகோவிச் சூப்பர் பார்மில் உள்ளார். அதனால் இந்த முறை அவர் வாகை சூடுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

  கவுரவமிக்க இந்த போட்டியில் 16-வது முறையாக களம் காணும் 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 7-வது முறையாக பட்டத்தை வெல்வதில் தீவிரம் காட்டுகிறார். கோப்பையை வென்றால், சர்வதேச போட்டியில் அது அவரது 100-வது பட்டமாக அமையும்.

  இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.61 கோடியாகும். போட்டி கட்டணமாக ரூ.1½ கோடி, லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.1½ கோடி வீதம் வழங்கப்படும். இறுதிப்போட்டி வெற்றிக்கு ரூ.9¼ கோடி அளிக்கப்படும். ஆக, தோல்வியே சந்திக்காமல் கோப்பைக்கு முத்தமிடும் வீரர் மொத்தம் ரூ.19½ கோடியை பரிசாக அள்ளலாம். அத்துடன் 1,500 தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும்.

  இன்றைய முதல் நாளில் ஆண்டர்சன்-டொமினிக் திம் (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி), பெடரர்-நிஷிகோரி (நள்ளிரவு 1.30 மணி) ஆகியோர் மோதுகிறார்கள்.

  இரட்டையர் பிரிவில் டாப்-8 ஜோடிகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறது. இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா, லியாண்டர் பெயஸ் உள்ளிட்டோர் தரவரிசையில் பின்தங்கி இருப்பதால் இந்த போட்டிக்கு தகுதி பெறவில்லை.
  Next Story
  ×