search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbery attempt"

    • நகைக்கடைக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • விசாரணையில் நகைக்கடைக்குள் புகுந்து கைவரிசை காட்ட முயன்றது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏ.சி மெக்கானிக் சிலம்பரசன் என்பது தெரியவந்தது.

    போரூர்:

    ராமாபுரம், ராயலா நகர் 1-வது மெயின் ரோட்டில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கேசியராக பரத்குமார் உள்ளார். நேற்று மாலை வழக்கம்போல் நகைக்கடையில் வியாபாரம் நடந்து கொண்டு இருந்தது. வாடிக்கையாளர்கள் சிலர் கடையில் இருந்தனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டு திடீரென நகைக்கடைக்குள் புகுந்தார். பின்னர் அவர் கேசியர் பரத்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி "கல்லாப்பெட்டியில் உள்ள பணத்தை கொடு" என்று மிரட்டல் விடுத்தார். இதனை கண்டு நகை கடையில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சுதாரித்துக் கொண்ட பரத்குமார் அருகில் கிடந்த கட்டையால் கொள்ளையனை தாக்கினார். உடனே மற்ற ஊழியர்களும் சேர்ந்து மர்மவாலிபரை மடக்கி பிடித்தனர். இதற்குள் சத்தம் கேட்டு பொதுமக்களும் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அவர்கள் கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனை ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் நகைக்கடைக்குள் புகுந்து கைவரிசை காட்ட முயன்றது சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏ.சி மெக்கானிக் சிலம்பரசன் (வயது32) என்பது தெரியவந்தது.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூரில் உள்ள நகைக்கடையின் ஷட்டரில் துளையிட்டு 9 கிலோ நகைகள் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் இன்னும் குற்றவாளிகள் சிக்கவில்லை.

    இந்த நிலையில் நகைக்கடைக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.
    • அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீஸ் சரகம் ஓசூர் வெங்கடேஸ்வரா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 13-ந்தேதி வெளியூர் சென்றிருந்தார்.

    நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து யாரோ மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளதாக செல்போன் மூலம் ரவிச்சந்திரனுக்கு அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனே ரவிச்சந்திரன் புறப்பட்டு வந்து பார்த்தபோது வீட்டுக்கு 3 ஆசாமிகள் புகுந்து திருட முயன்றுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து வீட்டுக்குள் செல்ல முயன்ற ரவிச்சந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி விடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்.

    பின்னர் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் உதவியுடன் அந்த மூன்று பேரையும் பிடித்து மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து முருகன் (வயது 38), சந்தோஷ்குமார் (26), யாரப்பாஷா (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.
    • பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜோத்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கவி. இவர் அங்குள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டைப்பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    அப்போது அங்கு 4 பெண்கள் வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் வெளியே நின்று கொண்டு நோட்டமிட மற்ற 2 பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

    இந்தநிலையில் அங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.

    அப்போது பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார். இதையடுத்து அந்த விவசாயியிடம் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் சிக்கிய 2 பெண்களும் தங்களது ஆடைகளை களைந்து அரை நிர்வாண கோலத்தில் நின்றனர். மேலும் விவசாயியின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது வீட்டின் உரிமையாளரான சங்கவி அங்கே வந்துள்ளார். இதையடுத்து 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பெண் போலீசாருடன் அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பார்வதி (வயது 32), சித்ரா( 30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 2 பேரும் ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருடுவதும், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களுடன் வந்த பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    • கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர்.
    • நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை, குன்னத்தூர் சாலை பிரிவில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த நகைக்கடையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. பின்னர் வியாபாரம் முடிந்ததும் இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர். கடையின் முன் பகுதியில் இரவு நேர காவலாளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    இந்த நகைக்கடையையொட்டி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கும், நகை கடைக்கும் இடையே சுமார் 10 அடி இடைவெளியில் மரச்செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

    இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் மர்மநபர்கள் அரசு ஆண்கள் பள்ளிக்குள் சென்று நகை கடையின் பின்பகுதிக்கு வந்துள்ளனர். சுமார் 3 அடி அகலத்துக்கு சுவற்றைத் துளையிட்டுள்ளனர். பின்னர் மர்மநபர்கள் நகைக்கடைக்குள் சென்று உள்ளனர்.

    கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது நகைக்கடையில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் திடீரென அடிக்க தொடங்கியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் தங்களது கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கடையின் இரவு நேர காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அப்போது கடையின் பின்பகுதி சுவற்றில் துளையிட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது குறித்து கடையின் உரிமையாளருக்கும் பெருந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையின் உரிமையாளர் பரமசிவம் கடைக்குள் சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. நல்ல வேளையாக அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் தப்பியது.

    சம்பவ இடத்திற்கு பெருந்துறை ஏ.எஸ்.பி. கவுதம் கோயல், டி.எஸ்.பி. ஆனந்தகுமார், பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடை மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் கடையை பற்றி நன்கு தெரிந்தவர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் பூஜைகள் முடிவடைந்து இரவு 9 மணி அளவில் கோவில் பூட்டப்பட்டது.
    • கோவிலின் பூட்டை மா்ம நபா்கள் அதிகாலை 2 மணி அளவில் உடைக்க முயன்றுள்ளனா்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளியில் அழகுநாச்சியம்மன் கோவில் உள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலில் பூஜைகள் முடிவடைந்து இரவு 9 மணி அளவில் கோவில் பூட்டப்பட்டது. இதனிடையே கோவிலின் பூட்டை மா்ம நபா்கள் அதிகாலை 2 மணி அளவில் உடைக்க முயன்றுள்ளனா். அப்போது கதவில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் அடித்ததால் கொள்ளை முயற்சியைக் கைவிட்ட மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • மேற்கூரை வழியே துளைபோட்டு பர்னிச்சர் கடையில் புகுந்த முகமூடி கொள்ளையன் பணம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தான்.
    • இதே கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.86ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-நத்தம் சாலையில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. இந்த கடையில் நேற்றிரவு மேற்கூரை வழியே துளைபோட்டு ஒரு மர்மநபர் உள்ளே நுழைந்தார். முகத்தை மறைத்தபடி வந்த அந்த நபர் கடையின் பல்வேறு பகுதிகளில் தேடினார்.

    ஆனால் கடையில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த ஆசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். இன்று காலையில் கடைக்கு வந்த உரிமையாளர் பொருட்கள் சிதறிகிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் கடையில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி மர்மநபர் கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது பதிவானது.

    அந்த காட்சிகளை கொண்டு நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேகடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லாவில் இருந்த ரூ.86ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் அந்த கொள்ளையில் இதுவரை யாரும் பிடிபடாத நிலையில் மீண்டும் ஒரு கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

    மெஞ்ஞானபுரம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தண்டுபத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். நேற்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. 

     இதேபோல் அப்பகுதியை சேர்ந்த லிங்கம், சுதாகர் ஆகியோர் வீடுகளிலும் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் கொள்ளை முயற்சி தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சமீப காலமாக இந்த பகுதி வீடுகளில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே இது குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் பி.எஸ்.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கடப்பாரையால் எந்திரத்தை உடைக்க முயன்றது. அரைமணி நேரத்திற்குமேல் போராடியும் அவர்களால் உடைக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியில் ஆட்கள் வருவதை உணர்ந்த கும்பல் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு பாதியிலேயே தப்பியது

    இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் சேதம் அடைந்து இருப்பதை கண்ட மக்கள் வங்கி அதிகாரிகளுக்கும், ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்

    இந்த நிலையில் போலீசார் ராஜபாளையம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கடப்பாரை மற்றும் ஆயுதங்களுடன் 3 பேர் சிக்கினர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    இண்டூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. நேற்றிரவு கலனி காட்டூர் கிராமத்தில் கொள்ளையர்கள் ஒரு வீட்டின் பூட்டை உடைக்க முயன்றனர். 

    அதனை பார்த்த ஒருவர் திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் எழுந்து ஓடி வந்து கொள்ளை கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

    தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாதவரம் அருகே கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல், பணம் இல்லாததால் கடைக்கு தீ வைத்து சென்றனர். இதனால் ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின.
    மாதவரம்:

    மாதவரம் தபால் பெட்டி பகுதி அருகே விளையாட்டு பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருபவர் ஷேக்முகமது.

    நேற்று இரவு அவர் விற்பனை முடிந்து கடையை பூட்டிச் சென்றார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஷேக் முகமதுவின் கடையில் இருந்து கரும்புகை வெளியே வந்தது. தீயும் பற்றி எரிந்தது.

    தகவல் அறிந்ததும் மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் எரிந்து நாசமானது.

    மாதவரம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பூட்ட உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்து இருப்பது தெரிந்தது.

    கடையில் பணம் இல்லாத ஆத்திரத்தில் கொள்ளை கும்பல் பொருட்களுக்கு தீ வைத்து தப்பி உள்ளனர்.

    இதேபோல் அப்பகுதியில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையிலும் கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்த கண்காணிப்பு காமிராவை திருடி சென்று உள்ளனர்.

    மேலும் 3 கடைகளிலும் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொள்ளையர்களின் உருவம் அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். #tamilnews
    போளூரில் இன்று காலை வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பஸ் நிலையம் அருகே உள்ள பஜார் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டிஎம். வழியாக தான் நகை கடை, ஜவுளி கடைகளுக்கு செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் காணப்படும்.

    இந்த நிலையில் இன்று காலை வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து ஏ.டி.எம். எந்திரத்தினை உடைக்க முயன்றார். அதற்குள் ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ஏ.டி.எம். மையத்தில் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டதை கண்ட பொதுமக்கள் போளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் ஏ.டி.எம். கண்ணாடியை உடைத்து வாலிபர் யார்? எதற்காக ஏ.டி.எம். மையத்தின் கண்ணாடியை உடைத்தார். திருடும் நோக்கில் வந்தாரா? அல்லது குடிபோதையில் உடைத்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை சோதனை செய்து வருகின்றனர். இந்த ஏ.டி.எம் மையத்திற்கு காவலாளி கிடையாது.

    உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் புகுந்த 2 பேர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #NatarajarStatue
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளகுங்வது உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில். மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகளை இந்த ஆலயம் கொண்டுள்ளது.

    நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காண முடியும்.

    ஆனால் இங்கு பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது. இது 6 அடி உயரம் உடையது. இந்த சிலையின் வீரியத்தை பக்தர்கள் தாங்க முடியாது என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் திருமேனி (சிலை) மீது சாத்தப்பட்ட சந்தனக்காப்பு களையப்படும்.

    இன்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் மரகதக்கல் நடராஜர் சிலையை கொள்ளையடிக்க முயன்றுள்ளது. வெளிப்புற கதவை உடைக்க முயற்சிக்கும்போது அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது.

    இதையடுத்து அங்கு படுத்திருந்த காவாலாளி செல்லமுத்து (வயது60) எழுந்து பார்த்துபோது 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை தடுக்க முயன்றார்.


    காயம் அடைந்த காவலாளி செல்லமுத்து

    அப்போது மர்ம நபர்கள் 2 பேரும் காவலாளி செல்லமுத்துவின் தலையில் கட்டைகளால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.

    அலாரம் சத்தத்தை கேட்டதும் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்தனர். கோவிலின் முக்கிய இடங்களில் 6 வீடியோ கேமரா பொருத்தப்பட்டும் சன்னதி அருகே கேமரா இல்லாததால் கொள்ளையர்களை கண்டு பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கோவில் திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-

    கோவிலில் மரகத நடராஜர் சிலையை திருட முயற்சித்துள்ளனர். மற்ற படி எதுவும் திருட்டு போகவில்லை. தடுக்க சென்ற காவலாளி செல்லமுத்துவுக்கு காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    அதிகாலை 3 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று மற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டேன். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.  #NatarajarStatue
    ×