என் மலர்
செய்திகள்

மெஞ்ஞானபுரம் அருகே 3 வீடுகளில் கொள்ளை முயற்சி
மெஞ்ஞானபுரம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தண்டுபத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியூருக்கு சென்றிருந்தார். நேற்று மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதேபோல் அப்பகுதியை சேர்ந்த லிங்கம், சுதாகர் ஆகியோர் வீடுகளிலும் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கு பணம் இல்லாததால் கொள்ளை முயற்சி தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்த சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சமீப காலமாக இந்த பகுதி வீடுகளில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இது குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






