search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க அரை நிர்வாண கோலத்தில் நின்ற பெண்கள்- உடுமலை அருகே பரபரப்பு
    X

    பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க அரை நிர்வாண கோலத்தில் நின்ற பெண்கள்- உடுமலை அருகே பரபரப்பு

    • தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.
    • பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜோத்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கவி. இவர் அங்குள்ள தோட்டத்து பகுதியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டைப்பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    அப்போது அங்கு 4 பெண்கள் வந்துள்ளனர். அவர்களில் 2 பேர் வெளியே நின்று கொண்டு நோட்டமிட மற்ற 2 பெண்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

    இந்தநிலையில் அங்கு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் பெண்களை பார்த்து சந்தேகமடைந்து சங்கவி வீட்டிற்கு விரைந்து சென்றார்.

    அப்போது பெண்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன் அவர்களை பிடிக்க முயன்றார். இதையடுத்து அந்த விவசாயியிடம் இருந்து தப்பிக்க வீட்டிற்குள் சிக்கிய 2 பெண்களும் தங்களது ஆடைகளை களைந்து அரை நிர்வாண கோலத்தில் நின்றனர். மேலும் விவசாயியின் கவனத்தை திசை திருப்பி தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர்.

    அப்போது வீட்டின் உரிமையாளரான சங்கவி அங்கே வந்துள்ளார். இதையடுத்து 2 பெண்களையும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கிப் பிடித்து கணியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பெண் போலீசாருடன் அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பார்வதி (வயது 32), சித்ரா( 30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 2 பேரும் ஆட்கள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு திருடுவதும், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களுடன் வந்த பெண்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×