search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road blockage"

    பெண்ணாடம் அருகே நள்ளிரவில் விடுதலை சிறுத்தை கட்சி பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது வெண்கரும்பூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் வாழ்த்து பேனர் வைத்திருந்தனர்.அதன் அருகே கட்சி கொடிக்கம்பமும் நட்டு கொடி ஏற்றப்பட்டது.

    இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் திடீரென விடுதலை சிறுத்தை பேனரை கிழித்து சேதப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை இது பற்றிய தகவல் அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பேனரை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே அங்கு பா.ம.க. வினர் வந்தனர். அவர்கள் பா.ம.க. கொடி கம்பம் அருகே விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் வைத்ததை அகற்றி விட்டு அதை வேறு இடத்தில் நட வேண்டும் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 கட்சியினரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதையொட்டி வெண்கரும்பூர் கிராமத்தில் ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நெய்வேலியில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச்கேட் அருகே மாற்று குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள பி-1 பிளாக்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

    இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் ஆர்ச்கேட் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
    சத்தியமங்கலத்தில் சீரான குடிநீர் வசதி கோரி 100-க்கும் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அத்தாணி ரோடு பகுதியில் இந்திரா நகர், வீனஸ் நகர், ரோஜா நகர் ஆகிய 3 பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 3 மாதமாக சீரராக குடிநீர் வரவில்லையாம்.

    ஆகவே சீரான குடிநீர் வசதி கோரி அந்த பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண் கள் காலி குடங்களுடன் இன்று காலை 10.30 மணிக்கு சத்தி- அத்தாணி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்றனர்.

    அவர்கள் சாலை மறியல் நடத்திய பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனத்துறை அலுவலகம் முன்பு துணிக்கடை, பழக்கடை, சிக்கன் கடை என 30-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் வனத்துறை அலுவலக குடியிருப்பு பகுதியில் புதிதாக குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக வனத்துறை அலுவலகம் முன்பு உள்ள கடைகளை அகற்றும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்ற விடாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அப்பகுதியில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து தாங்களாகவே கடைகளை அகற்றிக்கொள்கிறோம், அதிகாரிகள் அகற்ற வேண்டாம் என கடை உரிமையாளர்கள் போலீசாரிடம் கூறினர்.

    இதைத் தொடர்ந்து அவர்களே கடைகளை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மின் கம்பத்தை ரோட்டின் குறுக்கே போட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    மீஞ்சூர்:

    மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு ஊராட்சிக்குட்பட்ட கரையான் மேடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 10ஆணடுக்கு மேலாக கரையான் மேடு பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சேதமடைந்த சாலையால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் அப்பகுதி பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காரடையான் மேடு-அத்திபட்டு ரெயில்வே சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென சாலை ஓரம் கிடந்த மின் கம்பத்தை ரோட்டின் குறுக்கே போட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி ராஜேந்திரபாபு, அத்திபட்டு ஊராட்சி செயலாளர் பொற்கொடி ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது
    கரூரில் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கரூர்: 

    கரூர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு அண்ணாநகரில் பா.ஜ.க. சார்பில் 30 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடி பறக்கவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்த கொடி கம்பத்தை சாய்த்து சேதப் படுத்திவிட்டு, கட்சி கொடியை கிழித்து அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை இதனை பார்த்த பா.ஜ.க.வினர் இதுகுறித்து கரூர் நகர தலைவர் செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செல்வன் சம்பவ இடத்திற்கு சென்று கொடி கம்பம் சேதப்படுத்தப்பட்டு இருந்ததை பார்த்தார்.

    பின்னர் கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செல்வன் தலைமையில் பா.ஜ.க.வினர் அண்ணாநகர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

    இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    அதியமான்கோட்டை அருகே குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி அருகே அதியமான் கோட்டையை அடுத்த தேவரசம்பட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் நிலத்தடிநீரை பயன்படுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் குழி தோண்டினர். அப்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை சரிசெய்யாமல் அவர்கள் அப்படியே குழியை மூடி விட்டனர். இதனால் அப்பகுதியில் சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

    குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படாததை குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை தேவரசம்பட்டி அருகே உள்ள சாலையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகிக்க உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 32 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சத்தியமங்கலம்:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று காலை தூத்துக்குடியில் நடந்த போலீசாரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது.

    சத்தியமங்கலம் பஸ் நிலையம் எதிரே அந்த கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இதனால் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சத்தியமங்கலம் போலீசார் ஸ்டாலின் குணசேகரன் உள்பட 32 பேரை கைது செய்தனர்.

    மத்தூர் அருகே குடிநீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் சாலைமறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ளது நாகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடும் குடிநீர் பிரச்சினை கடந்த 2 மாதமாக நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலிக்குடங்களுடன் இடும்பன் கோவில் அருகில் சாலை மறியல் செய்வதற்காக நேற்று திரண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் பொதுமக்கள் கூட்டமாக இருந்ததை கண்டு என்ன பிரச்சினை என விசாரித்தார். அப்போது குடிநீர் பிரச்சினை காரணமாக சாலை மறியல் செய்ய போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சண்முகம், நாகம்பட்டி ஊராட்சி செயலாளர் சண்முகம், ஊர் முக்கிய பிரமுகர்கள் மாதையன், கதிர்வேல் உள்பட பலரிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், ஆழ்துளை கிணறு உள்ள இடத்தை பார்வையிட்டார்.

    அங்கிருந்து சிறு மின்விசை நீர்தேக்க தொட்டிக்கு உடனடியாக பைப்லைன்கள் அமைத்து நீரை ஏற்றும்படியும், அதன் மூலம் குடிநீர் வினியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 
    ×