search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rent"

    • ரூ.1160 மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை எந்திரங்களுக்கு ரூ.1880 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    • வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏக்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.625 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக விவசாய நிலங்களை சமன் செய்யும் புல்டோசர்கள் மணிக்கு ரூ.1230, உழவுப் பணிகளை மேற்கொள்ள டிராக்டர் உடன் கூடிய இணைப்பு கருவிகளான நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம், வரப்பு செதுக்கி சேறும் பூசும் கருவி, தென்னை மட்டை தூளாக்கும் கருவி, ரோட்டவேட்டர், 5 வரிசை கொத்து கலப்பை, சட்டிக் கலப்பை மற்றும் 9 வரிசை கொத்து கலப்பை ஆகியன மணிக்கு ரூ.300ம், நெல் அறுவடைப் பணிகள் மேற்கொள்ள டயர் வகை இயந்திரங்களுக்கு ரூ.1160 மற்றும் பெல்ட் வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.1880 என்ற குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் மேற்காணும் கருவிகளுக்கு செலுத்தப்படும் வாடகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது. இவற்றை விவசாயிகள் பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகப ட்சமாக 5 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 5 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏக்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.1250 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.

    பாசன நினங்களில் உழவுப் பணிகள் மேற்கொள்ளும் சிறு, குறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2.5 ஏக்கர் வரை பணிகளை மேற்கொள்ள அல்லது 2.30 மணி நேரத்திற்கு வேளாண் கருவிகளை பயன்படுத்திட ஏங்கர் மணிக்கு 250 வீதம் அதிகபட்சமாக ரூ.625 மட்டும் வருடத்திற்கு ஒருமுறை வழங்கப்படும்.

    மேற்கண்ட வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவை ப்படும் விவசாயிகள் இ-வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்யும் சமயம் சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் பதிவு செய்து பயன் பெறலாம்.

    செலுத்திய வாடகையில் மானியத்தொகையினை பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இதேபோல் கும்பகோ ணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம் -612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டா ரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறி யாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
    • ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    இந்த நிலையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    அதனால் பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சி செயலர் மகேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல ஆண்டுகளாக இவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டு நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டவுன் காவல்பிறை தெருவில் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான பணியாளர் குடியிருப்பு உள்ளது.

    இங்கு உள்ள ஒரு வீட்டில் டவுன் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் வசித்து வந்தனர். பல ஆண்டுகளாக இவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கான பாக்கி தொகை ரூ.7,63,530 உள்ளது. பல ஆண்டுகளாக வாடகை பாக்கியை திருப்பி செலுத்தாத காரணத்தினால் அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று குடியிருப்பில் வசித்து வந்த பெண்கள் வெளியேற்றப்பட்டு ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டு நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் நிலம் மீட்கப்படும் போது , செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கண்காணிப்பாளர் சுப்புலெட்சுமி,மேற்கு பிரிவு ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி, நெல்லை வருவாய் ஆய்வாளர் லெட்சுமணபாண்டியன், நெல்லை கிராம நிர்வாக அதிகாரி பொன் அய்யப்பன், தலையாரி முண்டசாமி ,டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • கோவில் நிா்வாகத்தின் நடவடிக்கையால் 7 போ் வாடகை செலுத்தினா்.
    • 14-ந் தேதி கடைகளை ஜப்தி செய்யஉள்ளதாக கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்,

    திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 28 மளிகைக் கடைகள், தேநீா் கடைகள் செயல்பட்டு வந்தன.இவை கடந்த 2017ம்ஆண்டு காலி செய்யப்பட்டது.இருப்பினும் வாடகை பாக்கி ரூ.1 கோடியே 70 லட்சம் கோவிலுக்கு செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

    கோவில் நிா்வாகத்தின் நடவடிக்கையால் 7 போ் வாடகை செலுத்தினா். 21 போ் ரூ.1 கோடியே 45 லட்சத்து 96ஆயிரத்து 841 செலுத்தாமல் உள்ளனா்.இதையடுத்து, வாடகை செலுத்தாத கடைகள் ஜப்தி செய்யப்படும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.இருப்பினும் கடை உரிமையாளா்கள் வாடகை பாக்கி செலுத்தாததால் நாளை 14-ந் தேதி கடைகளை ஜப்தி செய்யஉள்ளதாக கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டு தற்போது அது இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக அமைக்கப்பட்டுள்ளது. #PotatoHouse #PotatoAirbnb
    நியூயார்க்:

    அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2012-ம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது.

    28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையுடன் விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறியப்பட்டது. அதன் பின்னர் மக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் சுற்றிவந்தது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த சுற்றுப்பயணம் முடிந்தது.



    இந்த நிலையில், தற்போது இந்த உருளைக் கிழங்கு இரட்டை படுக்கை கொண்ட சிறிய தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கை குடைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில், சொகுசு இருக்கைகள், படுக்கை மற்றும் கழிவறை என அனைத்து வசதிகளும் உள்ளன. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.



    இந்த விடுதியில் ஒரு நாள் தங்குவதற்கு 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.14 ஆயிரம்) வசூலிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் மே மாதம் முழுவதும் இந்த விடுதி முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  #PotatoHouse #PotatoAirbnb
    துரைபாக்கத்தில் வக்பு வாரிய இடத்தை வாடகைக்கு விட்டு ரூ.8 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஆடு, கோழி இறைச்சி வியாபாரம் செய்து வரும் நான் கடந்த 2015-ம் ஆண்டு வாடகைக்கு இடம் பார்த்தேன். அப்போது அன்வர் பாட்ஷா என்பவர் ஒரு டிரஸ்டின் தலைவராக இருப்பதாக கூறி அணுகினார்.

    ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஆலிமா காலனி மெயின் ரோட்டில் 18 கிரவுண்டு இடம் உள்ளதாக கூறினார். அதில் 4800 சதுரஅடி இடத்தை வாடகைக்கு விடுவதாக கூறினார். இதற்காக முன் பணமாக ரூ.6 லட்சம் கொடுத்தேன். பின்னர் காலி இடத்தை சமன் செய்து கூரை போடுவதற்காக ரூ.40 லட்சம் செலவு செய்தேன். 11 மாதத்துக்கு பின்னர் வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அப்போது அன்வர் பாட்ஷாவிடம் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தேன்.

    இந்த நிலையில் அந்த இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி கேட்டபோது அன்வர் பாஷா முறையாக பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து கடந்த 24-ந்தேதி நீலாங்கரை போலீசில் புகார் அளித்தேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே அன்வர்பாஷா மீதும் இதற்கு உடந்தையாக இருக்கும் வக்பு வாரிய அதிகாரி சாதிக் பாட்ஷா மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். நான் இழந்த பணத்தையும் மீட்டு தருமாரும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அலகாபாத்தில் இயங்கி வரும் காங்கிரஸ் அலுவலகம் மாதம் ரூ.35 வாடகையை கூட கட்டாததால் அதன் உரிமையாளர் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். #Congress
    அலகாபாத்:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள சவுக் லொக்காலிட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் அலுவலகம் உள்ளது.

    இது, கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் அலுவலகமாக செயல்படுகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே காங்கிரஸ் அலுவலகமாக மாறி இருந்தது. இது, 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது.

    காங்கிரஸ் முதுபெரும் தலைவர் தாண்டன், நேரு மனைவி கமலா, இந்திரா காந்தி ஆகியோர் இந்த அலுவலகத்துக்கு பலமுறை வந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த அலுவலகம் தனியாருக்கு சொந்தமானதாகும். அதை காங்கிரஸ் அலுவலகமாக வாடகைக்கு அமர்த்தி இருந்தனர்.

    தற்போது இந்த இடம் ராஜ்குமார் சரஸ்வத் என்பவருக்கு சொந்தமாக உள்ளது. அவர், கட்டிடத்துக்கு 35 ரூபாய் மாத வாடகையாக நிர்ணயித்து இருந்தார். அந்த வாடகையை கூட காங்கிரஸ் கட்சி முறையாக செலுத்தவில்லை.

    10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பைசா கூட வாடகை கொடுத்தது இல்லை. இவ்வாறு ரூ. 50 ஆயிரம் வரை வாடகை பாக்கி உள்ளது.

    கட்டிட உரிமையாளர் பல முறை கேட்டு பார்த்தும் யாரும் அந்த பணத்தை கொடுப்பதாக இல்லை. இதனால் அவர் வாடகையை கொடுங்கள் அல்லது இடத்தை காலி செய்யுங்கள் என்று கூறி காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார்.

    இந்த விவரங்களை காங்கிரஸ் கட்சியினர் கட்சி தலைவர் ராகுல்காந்திக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். கட்சி அலுவலகம் இருக்கும் இடம் அலகாபாத்தின் மிக நெருக்கடியான பகுதி ஆகும்.

    அந்த சொத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும். ஆனால் 35 ரூபாய் வாடகையை கூட காங்கிரஸ் கட்சி கொடுக்க முடியாமல் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. #Congress
    ×