search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assessment"

    • பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள்.
    • குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    புதிதாக பெற்றோர்களாகி இருப்பவர்களும் சரி, சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோராகி இருப்பவர்களும் சரி. அவர்கள் செய்ய நினைக்கும் ஒரே விஷயம், `தங்கள் குழந்தைகளை முறையாக வளர்க்க வேண்டும்' என்பதுதான். இதற்கு காரணம், நமக்கு பெற்றோர்களாக இருந்தவர்கள் செய்த தவறை நாம் நமது பிள்ளைகளுக்கு செய்து விட கூடாது எனும் எண்ணம் மேலோங்கி உள்ளதால் தான். சரி, இப்போதைய இளம் தலைமுறை பெற்றோருக்கு ஏற்ற சில டிப்ஸ்கள் என்னென்ன? இங்கே பார்ப்போம்.

    பெற்றோர்கள் அவர்களது உள்ளுணர்வை வைத்து குழந்தைகளை வளர்ப்பார்கள். இந்த முறையில் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் அவர்களுக்கு ரூல்ஸ் போடுவது,, சில பழக்க வழக்கங்களை அவர்களுக்கு சொல்லி கொடுப்பது போன்ற விஷயங்களை செய்வர். இந்த முறையில் பிள்ளைகளை வளர்ப்பது நண்மைதான் என்றாலும், குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கான சுய அடையாளத்தை மறந்து முழுக்க முழுக்க தங்களது பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடி ரூல்சில் வாழ வேண்டியதாக இருக்கும். ஆகையால், எதில் விதிமுறை இருக்க வேண்டும், எதில் குழந்தைகளை அவர்களாகவே வளர விட வேண்டும் என்பதில் பெற்றோருக்கு கவனம் தேவை.

    உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்படி வளர்த்திருக்கிறீர்களோ, அதை பொறுத்துதான் அவர்களது நம்பிக்கை அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குறிப்பாக, குழந்தைகளிடம் பேசும்போது எப்போதுமே எதிர்மறை கருத்துக்களை குறைத்து கொண்டு நேர்மறையான கருத்துக்களுடன் பேச வேண்டும். நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பிஞ்சு மனங்களில் உங்கள் வார்த்தைகள் ஆழமாக பதியும். ஆகவே, உங்கள் வார்த்தைகள் மதிப்பு மிகுந்தவையாக இருக்க வேண்டும்.

    குழந்தைகளை குறைத்து மதிப்பிதல் கூடாது

    உங்களுடைய குழந்தைகளுக்கும் உணர்வுகள் இருக்கும். உங்களை அவமானப்படுத்தும்பொழுது உங்களுக்கு எவ்வாறு வலிக்குமோ அதுபோல் தான் உங்களுடைய குழந்தைகளுக்கும் வலிக்கும். இதை தான் சைல்டு ஷேமிங் என்கிறோம். முதலாவது ஒரு குழந்தையை பார்த்து உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. உனக்கு ஒன்னும் தெரியாது. உனக்கென்ன தெரியும் என்று அவர்களை குறைவாக மதிப்பிடுவது.

    இரண்டாவது நல்ல குழந்தைகளுக்கு எல்லாம் தெரியும். உன்னைவிட உன்னுடைய நண்பர்கள் ஒரு செயலை நன்றாக செய்கின்றனர் என்று உங்கள் குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பார்த்து கூறுவது. அதற்கு அவர்கள் திருப்பி நம்மிடம் (பெற்றோர்) என் ஃபிரண்டோட அம்மா டாக்டர், என்ஜினீயர், வசதியாக இருக்கிறாங்க நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க என்று அவர்கள் கேட்டால் நம்மிடம் எந்த பதிலும் இருக்காது.

    மூன்றாவது வயதை வைத்து ஒப்பிட்டு காட்டுவது. அதாவது மற்ற குழந்தைகளுக்கு முன்னாள் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவது, 8 வயதாகிறது இதுகூட தெரியாதா? எருமைமாடு வயதாகிறது உனக்கு இதுகூட தெரியலையா? என்று வயதுக்கு மூத்தவர்களுடன் குழந்தைகளை ஒப்பிட்டு கூறுவது.

    பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது. ஆண்பிள்ளை அழக்கூடாது. பெண் குழந்தை தான் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என்று பாலினத்தை குறிப்பிட்டு குழந்தைகள் முன்னாள் பேசக்கூடாது.

    • முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணியம் ஆகியோர் வினாடிவினா தேர்வு, விடைத்தாள் தயாரிப்பு குறித்து பயிற்சிகளை வழங்கினர்.
    • மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 179 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.

    திருப்பூர்:

    பள்ளி கல்வித்துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 6முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்து மதிப்பீடு செய்ய கம்ப்யூட்டர் வழியில் வினாடி வினா தேர்வு வாரம்தோறும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பு தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் என்.சி.பி., மேல்நிலைப்பள்ளி தாராபுரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உடுமலை, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி ஆகிய மையங்களில் நடந்தது. திருப்பூர் குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், முதுநிலை விரிவுரையாளர் பாபி இந்திரா, கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை விரிவுரையாளர் சுப்ரமணியம் ஆகியோர் வினாடிவினா தேர்வு, விடைத்தாள் தயாரிப்பு குறித்து பயிற்சிகளை வழங்கினர்.

    மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 179 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் பக்தவச்சலம், மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் சங்கர் ஆகியோர் பயிற்சி நடக்கும் மையங்களில் ஆய்வு செய்தனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கூறுகையில், வருகிற 20ந் தேதி முதல் பள்ளி அளவில், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி - வினா தேர்வு நடத்தப்படும். நடுநிலைப்பள்ளி மாணவரின் கல்வித்தரத்தை மேம்படுத்த தேவையான முயற்சிகள் பள்ளிகல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
    • ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    இந்த நிலையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    அதனால் பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சி செயலர் மகேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
    • சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் கொத்த மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நேரடியாக கடிதம் எழுதி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய 10 கோரிக்கைகளை கேட்டுப் பெற்றுள்ளார்.

    அந்த வகையில் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகளில் முக்கியமாக, திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

    விரைவில் அது நிறைவேற்றப்படும். மேலும், இந்த ஊருக்கு அருகில் உள்ள திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.

    இந்த ஊராட்சியிலும் சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. உங்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதில் ஊராட்சி மன்றத் தலைவர் விவேகானந்தன், கிராம சபை மேற்பார்வையாளர் சுப்ரமணியன், திட்டச்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் ஆசிரியர்கள், அனந்தநல்லூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் சக்திவேல், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    • முன்னாள் இராணுவத்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி2022-2023-க்கானமாணவ- மாணவிகள்சேர்க்கை தஞ்சாவூர் மருத்துவக்க ல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டயச்சான்றிதழ், கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இந்த முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் சேருவதற்கு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று அத்தாட்சி பெற்ற சான்றிதழ்களின் நகழ்களை இணைத்து கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் ஆகஸ்டு 1-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ண ப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

    முதல்வர், சாமிய ப்பா கூட்டுறவு மேலா ண்மை நிலையம், மருத்து வக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613 007

    இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்ச்சியும், 01.08.2022 அன்று 17 வயது பூர்த்தியடை ந்தவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்ெதாகை பெற்று த்தரப்படும். முன்னாள் இராணுவ த்தினரின் வாரிசுகளுக்கு முன்னுரிமை அளிக்க ப்படும். பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டதாரிகளும் இப்பயிற்சி யை பெறலாம்.விபரங்களை பெறுவத ற்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் தொலைபேசி எண்: 04362- 238253, 237426 தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தெரிவித்து ள்ளார்.

    ×