search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Recovery of residence"

    • பல ஆண்டுகளாக இவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டு நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டவுன் காவல்பிறை தெருவில் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான பணியாளர் குடியிருப்பு உள்ளது.

    இங்கு உள்ள ஒரு வீட்டில் டவுன் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் வசித்து வந்தனர். பல ஆண்டுகளாக இவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கான பாக்கி தொகை ரூ.7,63,530 உள்ளது. பல ஆண்டுகளாக வாடகை பாக்கியை திருப்பி செலுத்தாத காரணத்தினால் அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று குடியிருப்பில் வசித்து வந்த பெண்கள் வெளியேற்றப்பட்டு ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டு நெல்லையப்பர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் நிலம் மீட்கப்படும் போது , செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கண்காணிப்பாளர் சுப்புலெட்சுமி,மேற்கு பிரிவு ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி, நெல்லை வருவாய் ஆய்வாளர் லெட்சுமணபாண்டியன், நெல்லை கிராம நிர்வாக அதிகாரி பொன் அய்யப்பன், தலையாரி முண்டசாமி ,டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ×