search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram nath Kovind"

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஜனாதிபதிக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. #IndianPresident #RamNathKovind
    சிட்னி:

    இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று சிட்னியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் ஜான் மோரிசனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.



    அதன்பின்னர் ஆஸ்திரேலிய கடற்படை தலைமையகத்திற்குச் சென்றார் ராம்நாத் கோவிந்த். அங்கு அவரை ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் வரவேற்றார். அப்போது ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். மேலும் 21 குண்டுகள் முழங்க வீரர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர். ஆஸ்திரேலியாவைப் பொருத்தவரை கான்பெராவில் உள்ள பாராளுமன்றத்தில் தான் இதுபோன்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை வழங்கப்படுகிறது. கடற்படை தலைமையகத்தில் இந்த மரியாதை அளிப்பது மிகவும் அரிது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடற்படை தலைமையகத்தில் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். #IndianPresident #RamNathKovind

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வழங்கினார். #RajivGandhiKhelRatna #ViratKohli #PresidentKovind
    புதுடெல்லி:

    விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கிரிக்கெட்  வீரர் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கணை மீராபாய் சானு ஆகிய இருவருக்கும் அறிவிக்கக்கப்பட்டது.

    இதே போல, தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், பளுதூக்கும் வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் விருதுகள் வழங்கும் விழா நடந்து வருகிறது. விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இதன் பின்னர், அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் தங்களது விருதுகளை பெற்று வருகின்றனர். 
    12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். #President #RamNathKovind #DeathPenalty
    புதுடெல்லி:

    காஷ்மீரின் கதுவாவில் சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், உத்தரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் 17 வயது சிறுமி ஒருவர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21-ந் தேதி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக புதிய சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது.



    குற்றவியல் சட்டம் (திருத்தம்) மசோதா 2018 என்ற இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இதன் மூலம் இந்த சட்டம் அமலில் வந்துள்ளது.

    குற்றவியல் (சட்ட திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டம், கடந்த ஏப்ரல் 21-ந் தேதி முதலே அமலுக்கு வந்ததாக கருதப்படும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் 1872, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் போக்சோ சட்டம் 2012 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்த புதிய சட்டம், கற்பழிப்பில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வழிவகுக்கிறது. குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்படும். இதில் குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டு அல்லது வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறை அல்லது மரண தண்டனையும் விதிக்க வகை செய்கிறது.

    16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை கற்பழிப்போருக்கான குறைந்தபட்ச சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டாக அதிகரிக்கப்படுகிறது. இது வாழ்நாள் சிறையாக அதிகரிக்கவும் வழி வகுக்கிறது. இந்த சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்வோருக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படும்.

    இந்த கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கவும் இந்த சட்டம் வழிவகுப்பது குறிப்பிடத்தக்கது.  #President #RamNathKovind #DeathPenalty
    மூன்றுநாள் அரசுமுறை பயணமாக கேரளா வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் அன்புடன் வரவேற்றனர். #ramnathkovind #pinarayivijayan
    திருவனந்தபுரம்:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்றுநாள் அரசுமுறை பயணமாக ராணுவ விமானத்தில் இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தார்.

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள கவர்னர் சதாசிவம், முதல் மந்திரி பினராயி விஜயன் அன்புடன் வரவேற்றனர்.

    சட்டமன்ற சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்,  எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்டோர் மலர்செண்டுகளை அளித்து அன்புடன் வரவேற்றனர். அங்கிருந்து விடைபெற்று கவர்னர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி இன்றிரவு அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார். 

    நாளை காலை நடைபெற உள்ள கேரள மாநில சட்டமன்ற வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவை குறிக்கும் வகையில் ‘ஜனநாயக திருவிழா’வை தொடங்கி வைக்கிறார். 

    இவ்விழாவில் மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

    பின்னர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்று தலைமையுரை ஆற்றுகிறார். ‘சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான அதிகாரங்களை பெறுவதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    ஆகஸ்ட் 7-ம் தேதி திரிச்சூரில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யும் ஜனாதிபதி அன்றிரவு டெல்லி திரும்புகிறார். #ramnathkovind #pinarayivijayan 
    தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். #Karunanidhi #DMK #Ramnathkovind #Rahulgandhi
    புதுடெல்லி : 

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும், உடல் நலிவு ஏற்பட்டிருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.

    தமிழிசை சவுந்தரராஜன், வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்டோர் இன்று கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் நலம் விசாரித்துள்ளார்.

    ‘தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல்நலன் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் விசாரித்தேன். அவர் விரைவில் பூரண நலம் பெற்று பொதுவாழ்க்கைக்கு வர வேண்டும்’ என ட்விட்டரில் ராம் நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலன் குறித்து விசாரித்தார். 

    #Karunanidhi #DMK  #Ramnathkovind  #Rahulgandhi

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உரையற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நமது அரசியலமைப்பு சட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். #RamNathKovind
    ராய்பூர் : 

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று சத்தீஸ்கர் மாநிலம் வந்தடைந்தார். அம்மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் முதற்கட்டமாக 
    அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழு பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினார்.

    அதைத்தொடர்ந்து, பயணத்தின் இரண்டாம் நாளான இன்று  பாஸ்தர் மாவட்டம், திம்ராபால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள லெப்டினட் பாலிராம் காஷ்யாப் நினைவு மருத்துவ கல்லூரியை ராம்நாத் கோவிந்த் நாட்டுக்கு அர்பணித்து வைத்தார். பின்னர் அங்கு உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    நாட்டின் சில பகுதிகளில் உள்ளவர்கள் நக்சலைட்டுகளால் தவறாக வழிநடத்தப்பட்டு சமூகத்தில் வனமுறையையும், பயத்தையும் உருவாக்குகிறார்கள். நமது கலாச்சாரம் பண்பாட்டில் மட்டும் அல்ல நமது அரசியலமைப்பு சட்டத்திலும் வன்முறைக்கு இடம் இல்லை.

    நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை செயலப்டுத்திய சத்தீஸ்கர் அரசுக்கும் அதற்கு ஆதரவாக இருந்த மக்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். 

    மாநில நிர்வாகமும் ’புத்திசாலித்தனமான மக்களும்’ வழிதவறிய இளைஞர்களின்(நக்சல்) நம்பிக்கையை முறியடித்தை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

    கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் நாட்டுக்காக தியாகம் செய்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #RamNathKovind
    இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி பிரதமர் மோடி ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். #President #RamNathKovind #Modi
    புதுடெல்லி:

    இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி பதவி ஏற்றார். அவர் ஜனாதிபதியாகி ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி, ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவருக்கு ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    அதில், சிறப்பான பணி, ஞானம் மற்றும் பணிவின் மூலம் இந்தியர்களின் அன்புக்குரியவராக விளங்கி, ஓராண்டு பதவி காலத்தை நிறைவுசெய்துள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். மேலும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரங்கள் கிடைப்பதற்கு ஜனாதிபதி பாடுபடுவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.   #President #RamNathKovind #Modi
    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #RamNathKovind #BhutanPM
    புதுடெல்லி:

    பூட்டான் நாட்டின் பிரதமர் டாஷோ ட்ஷெரிங் டோக்பே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜை நேற்று அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை  இன்று அவர் சந்தித்தார்.



    டோக்லாம் எல்லை விவகாரம் உட்பட இந்தியா - பூட்டான் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அவர்களுடன் ஆலோசனை  டாஷோ ட்ஷெரிங் டோக்பே நடத்தினார். #RamNathKovind #BhutanPM  
    2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர்களாக உயர்த்தும் வகையில் அரசு முயற்சித்து வருவதாக ஜனாதிபதி ராம் நாத்கோவிந்த் தெரிவித்துள்ளார். #RamNathKovind #GDP
    ஏதென்ஸ் :

    கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 16-ம் தேதி கிரீஸ் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் உள்ள புலம்பெயர் இந்தியர்களிடையே இன்று உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

    பழங்கால பண்பாடு மற்றும் கலச்சார கொள்கைகளை இந்தியா மற்றும் கிரீஸ் நாடுகள் இந்த உலகிற்கு வழங்கியுள்ளன. மிகவும் தொன்மையானதும் ஆழமானதுமான உறவு இவ்விரண்டு நாட்டுக்கும் இடையே நிலவுகின்றது. கிரேக்க வரலாற்று அறிஞர் மெகஸ்தேன்ஸ் ‘இண்டிகா’ எனும் புத்தகத்தின் வாயிலாக இந்தியாவை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவராவார்.

    புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சாதனைகளை பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். தற்போது இந்தியாவில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் உகந்த சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி தாய் நாட்டின் வளர்ச்சிக்காக புலம்பெயர் இந்தியர்கள் உதவுவார்கள் என நான் நம்புகிறேன்.

    இந்தியாவின் வளர்ச்சி சீரான வேகத்தில் அதிகரித்து செல்வதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வரும் 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 5 டிரில்லியன் டாலர் எனும் அளவிற்கு இருக்கும். அதாவது உலகின் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையை உடைய நாடாக இந்தியாவை முன்னேற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் தற்போதைய பொருளாதார மதிப்பு 2.5 டிரில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind #GDP
    கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். #RamNathKovind
    புதுடெல்லி :

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ், சுரினேம் மற்றும் கியூபா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு வரும் ஜூன் 16-ம் தேதி அரசுமுறை சுற்றுப்பயணம்  மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் அஷோக் மாலிக் இன்று தெரிவித்தார்.

    கிரீஸ் நாட்டின் பழங்கால தொல்லியல் பகுதிகள் மற்றும் காமன்வெல்த் போர் நினைவிடத்தை பார்வையிடும் அவர், அங்கு வாழும் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.

    கிரீஸை தொடர்ந்து சுரினேம் நாட்டுக்கு செல்லும் ராம் நாத்கோவிந்த், அங்கு, உலக யோகா தினம் கொண்டாடப்படும் ஜீன் 21-ம் தேதி அந்நாட்டு அதிபர் தேசி பவுட்டர்ஸ் உடன் யோகா நிகழ்சிகளில் பங்கேற்க உள்ளார். 

    இறுதியாக கியூபா செல்லும் அவர், அந்நாட்டு அதிபர் மிகியேல் தியாஸ்-கேனல் பெர்முடஸ் உடன் இருநாட்டு உறவுகள் குறித்து நீண்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். கியூபா புரட்சி நடைபெற்ற 1959-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ராம்நாத் கோவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind
    திரிபுராவின் மாநில பழமாக அன்னாசி பழத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். #RamNathKovind #StateFruitofTripura
    அகர்தலா :

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் பயணமாக விமானப்படை சிறப்பு விமானத்தின் மூலம் இன்று காலை 11 மணியளவில் திரிபுரா மாநிலத்தில் உள்ள உதய்பூர் வந்தடைந்தார். அங்கு, சப்ரூம் - உதய்பூர் இடையே புதிதாக போடப்பட்டுள்ள இருவழி தேசிய நெடுஞ்சாலையை அவர் திறந்து வைத்தார்.

    அதைத்தொடர்ந்து, அங்குள்ள மாதா திரிபுரேஷ்வரி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த ராம்நாத் கோவிந்த், அம்மாநில தலை நகர் அகர்தலாவில் உள்ள ரபிந்தர சதபர்ஷிகி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்நிகழ்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திரிபுரா மாநில பழமாக அன்னாசி பழத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

    திரிபுராவில் நிலவும் சிறந்த பருவ நிலைகள், வளமான மண் மற்றும் தாராளமான மழைப்பொழிவு ஆகியவை அம்மாநிலத்தில் தோட்டக்கலை துறை வளர்ச்சிக்காக மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகளை வழங்குகின்றன. 

    மற்ற பகுதிகளில் விளையும் அன்னாசி பழங்களை விட திரிபுராவில் விளையும் அன்னாசி பழங்களின் தரம் சிறந்தது என நாடு முழுவதும் பரவலாக கருதப்படும் நிலையில் இந்த அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RamNathKovind #StateFruitofTripura
    ரம்ஜான் நோன்பை ஒட்டி டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்படும் இப்தார் விருந்து இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்தாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. #Iftarparty
    புது டெல்லி :

    டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆண்டு தோறும் இப்தார் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இடையில் அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவி வகித்த 2002- 2007 காலகட்டத்தில் இப்தார் நோன்பு கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கைவிடார். இப்தார் நோன்பு நிகழ்சிக்கு ஆகும் செலவை ஆதரவற்றோர் நலனுக்காக அவர் அளித்து வந்தார்.

    இந்நிலையில், இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து அளிக்கப்படாது என இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் அசோக் மாலிக் கூறியதாவது :-

    ஜனாதிபதியாக ராம் நாத் கோவிந்த் பதவியேற்ற பின்னர் மத ரீதியான எந்த நிகழ்சிகளும் பொதுமக்களின் வரி பணத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடத்துவது இல்லை என அவர் முடிவு செய்துள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனும் கொள்கையின் அடிப்படையில் மதம் தவிர அனைத்து சமய நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும்.

    நிச்சயம் அனைத்து மத விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பார் என அசோக் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.  #Iftarparty
    ×