search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டம்"

    • பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.
    • அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனில் சமையல்காரராக பணியாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்ட மேற்படிப்புக்கான உதவித்தொகை கிடைத்ததற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மற்றும் கலிபோர்னியா ஆகிய 2 பல்கலைக்கழகங்களில் முதுநிலை சட்ட படிப்பிற்கான உதவி தொகை கிடைத்துள்ளது.

    பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து தலைமை நீதிபதி சந்திரசூட் கௌரவித்தார்.  பிறகு அவர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான 3 புத்தங்களை அவருக்கு பரிசாக வழங்கினார்.

    பின்னர் பிரக்யாவிடம் அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு மீண்டும் நாட்டுக்கு சேவை செய்ய வர வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

    • மசோதாக்கள் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
    • குடியரசுத் தலைவர் திரெவுபதி முர்மு கடந்த டிசம்பர் 25ம் தேதி ஒப்புதல்.

    புதிதாக இயற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களும் வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அதிநியம், பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா ஆகிய சட்டங்கள் இயற்றப்பட்டன.

    இதற்கான மசோதாக்கள் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரெவுபதி முர்மு கடந்த டிசம்பர் 25ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

    • வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    • புகையிலை, கஞ்சா கடத்திய சம்பவத்தில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அழகம்மை தலைமையில் போலீசார் மூக்கம்பட்டி கடைவீதி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக காரில் புகையிலை, கஞ்சா கடத்தி வந்த ஆலங்குடி கே.வி.எஸ். தெருவை சேர்ந்த பாலு என்கிற பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 28 கிலோ புகையிலை மற்றும் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து ேபாலீசார் பாலகிருஷ்ணனை (வயது 36) ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்ேபரில், பாலகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். தொடர்ந்து பாலகிருஷ்ணனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை காண்பித்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது.
    • இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசியதாவது:- ஏற்காடு மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கஞ்சா, கள்ள சாராயம், அரசு மது பாட்டில் விற்பனையாளர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது தகவல் வருகிறது. எங்களது போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வழக்குகளும் செய்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கள்ளத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளது கண்டுபிடித்தால் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • அம்பர் கிரீஸ் வைத்திருப்பது சட்டப்படி குற்றமா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
    • வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது

    மதுரை

    அம்பர் கிரீஸ் என அழைக்கப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வைத்திருந்ததாக ஸ்ரீவில்லி புத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், வன துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

    இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி கூறுகையில், இது போன்ற வழக்குகளில் கைதான வர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளதால், மனுதா ரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, அரிய உயிரினமான திமிங்கலத்தை வேட்டை யாடுவது தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    மேலும் அதே நேரத்தில் திமிங்கலம் வாய் வழியாக உமிழும் அம்பர் கிரீஸ் என்ற பொருளை ஒருவர் வைத்திருப்பது சட்டபடி குற்றமாகுமா? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்துஅரசு தரப்பு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது
    • தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. தமிழகத்தில் விஷசாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:- தி.மு.க.ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளசாராயம், போலி மது, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூரில் பனியன் தொழில் நலிவடைந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 4-வது திட்ட குடிநீரை செயல்படுத்தினால் அ.தி.மு.க. அரசுக்கு பெயர் கிடைத்து விடும் என்று காலதாமப்படுத்துகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் வெகுண்டெழுந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கொண்டுவந்துள்ள 12 மணி நேரம் வேலை என்ற சட்டத்தை திரும்ப பெற கோரி தஞ்சையில் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

    அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கோதண்டபாணி, ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணை ப்பாளர் குருசாமி, சி.ஐ.டி.யூ விரைவு போக்குவரத்து சங்க மாநில துணை செயலாளர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் வடிவேலன் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்தி பேசினர்.

    இதில் சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி, சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் சாய்சித்ரா, அரசு போக்குவரத்து சிஐடியு சங்க பொருளாளர் ராமசாமி, டாஸ்மாக் சங்க மாவட்ட தலைவர் மதியழகன்,
    டி .ஆர். இ .யூ. சங்க தலைவர் ரஜினி, தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணி
    • வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை பகுதியில் சட்டவிரோதமாக எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் பெரிய பெரிய பாறாங் கற்களை உடைத்து கடத்துவதாக களியக்காவிளை போலீசாருக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து களியக்காவிளை போலீசார் குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது குழித்துறை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் ஜாக்கிஅமர் வாகனம் ஒன்று அனுமதி இல்லாமல் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளரும் நிலத்தின் உரிமையாளரும் தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத்தொடர்து பறிமுதல் செய்த வாகனத்தை போலீசார் காவல்நிலையம் கொண்டு சென்று வாகனத்தின் மீது வழக்கு பதிவு செய்தனர் மேலும் வாகனத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் உரிமையாளர் யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழித்துறை பகுதியில் சமூக விரோதிகள் அதிகாரிகள் உதவியுடன் பெரிய பெரிய பாறைகளை உடைத்து கடத்துவது தொடர்கதையாக நடந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.
    • 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வழிப்பறியில் ஈடுபடு–வோர், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை, கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, ரேஷன் அரிசி கடத்துவோர், விபசார தொழிலில் ஈடுபடுபவர் மீதும் குண்டர் சட்டம் பாய்கிறது.

    இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் ஓராண்டிற்கு சிறையில் இருந்து வெளியே வர முடியாது.

    தமிழக சிறைகளில் 1000-க்கும் மேற்பட்டோர் குண்டாசில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா உத்தரவின் பேரில் இந்த ஆண்டு 175 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 80 பேர் ரவுடிகள், 16 பேர் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்கள், 51 பேர் வழிப்பறி மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள்.

    கடந்த ஆண்டில் 129 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டு இருந்தனர். கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 46 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிவகங்கை நாலுகோட்டை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட சட்டஉதவி மையம், சிவகங்கை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுகள் இணைந்து சிவகங்கை வட்டம் நாலுகோட்டை கிராமத்தில் மனித உரிமைகள் கருத்தரங்கு மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவை பற்றி விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தியது.

    மாவட்ட வக்கீல் சங்க செயலர் சித்திரைசாமி, சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு புள்ளியில் ஆய்வாளர் கண்ணதாசன், நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் பேசினர்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராணி நன்றி கூறினார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், மஞ்சுளா, செல்வி, பெண் காவலர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    • 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
    • கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், குப்பம் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், அப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கல் குவாரிக்கு எதிராக போராடி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அவர் கொல்லப்பட்டார்.

    இதையடுத்து, குவாரி உரிமையாளர் செல்வக் குமார் (வயது 39), வேன் டிரைவர் சக்திவேல் (24), குவாரி ஊழியர் ரஞ்சித் (43) ஆகிய 3 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் செல்வக்குமார், ஏற்கனவே குண்டர் தடுப்பு, சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சக்திவேல், ரஞ்சித் ஆகியோரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சுந்தரவதனம், கலெக்டருக்கு பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மீதமுள்ள இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    குற்ற வழக்குகளில் கைதானவர்கள் நன்னடத்தையை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் இப்ராகிம் நகரைச் சோ்ந்தவா் முகமது ஜிப்ரி (வயது30). இவா் ஏற்கனவே பல வழக்குகளில் சிறை சென்றுள்ளாா். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்னடத்தை பிணைய  பத்திரம் அளித்திருந்தாா். 

    இந்த நிலையில் இவா் சித்தாா்கோட்டை சரவணகுமாா் (43) என்பவரை மிரட்டி கைப்பேசியைப் பறித்ததாக, சமீபத்தில் கைது செய்ய ப்பட்டாா். இவர் மீது ஏற்கனவே ஒரு ஆண்டுக்கான நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ள நிலையில், நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

    இதையடுத்து ஜிப்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.இனிவருங்காலங்களிலும் இது போன்ற நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ள நபர்கள், நன்னடத்தை பிணைய பத்திரத்தை மீறி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடரும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×