search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pollachi Jayaraman MLA"

    • வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும்.
    • தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

     திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட பாண்டியன்நகரில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் பட்டுலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார். முடிவில் வட்ட செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் சுந்தராம்பாள், பகுதி நிர்வாகிகள் இம்மானுவேல், ரேவதி, கலா, பகுதி துணை செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் ஆகியவை மக்களின் தலையில் மிகப்பெரிய பாரமாகும். இதைப்பற்றி எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ, அமைச்சர் உதயநிதியோ மற்ற தி.மு.க.வினரோ சிந்திக்கவில்லை. இவர்களின் ஒரே சிந்தனை செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். செந்தில்பாலாஜி எதையாவது சொல்லி விட்டால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதிப்பு வந்துவிடும் என்று முதல்-அமைச்சர் பதற்றமாக உள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 57 சதவீத மின் கட்டணம் உயர்ந்துள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு 53 ஆண்டுகால வரலாறு உண்டு. மிகப்பெரிய சோதனைகளை எல்லாம் வென்றுள்ளோம். எனவே யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. 1½ கோடி தொண்டர்களின் விருப்பம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதாகும். எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராகவும், கட்சியின் தலைவராகவும் ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சி.எஸ்.கண்ணபிரான் உடனிருந்தார்.

    • அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது
    • தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. தமிழகத்தில் விஷசாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:- தி.மு.க.ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கள்ளசாராயம், போலி மது, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. திருப்பூரில் பனியன் தொழில் நலிவடைந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்திக்கடவு-அவினாசி திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4-வது குடிநீர் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. 4-வது திட்ட குடிநீரை செயல்படுத்தினால் அ.தி.மு.க. அரசுக்கு பெயர் கிடைத்து விடும் என்று காலதாமப்படுத்துகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் பிரச்சினைகளால் சிக்கி தவிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் வெகுண்டெழுந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்துக்கு விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, அம்மா பேரவை மாநில இணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    • தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் தலைமை தாங்கினார்.
    • தலைமை கழக பேச்சாளர் புரட்சித்தம்பி, அமைப்பு செயலாளர் புத்திசந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க தொழிற்சங்கம் சார்பில், மே தினவிழா பொதுக்கூட்டம், பெரிச்சிபாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணபிரான் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மகே ஷ்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் புரட்சித்தம்பி, அமைப்பு செயலாளர் புத்திசந்திரன் உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

    ஏற்றுமதி வர்த்தகத்தில், எண்ணற்ற பெருமைகளை பெற்ற திருப்பூர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தியாவின் ஏழை நகரமாக மாறிவிட்டது. வீட்டு வாடகை கொடுக்க முடியாமல், தொழிலாளர்கள் வருத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர் தி.மு.க., ஆட்சி அமையும் போதெல்லாம், திருப்பூர் வறுமையால் பாதிக்கப்படுகிறது. ஆட்சி வருவதற்கு முன்னதாகவே வறுமை வந்துவிடுகிறது. திமுக அரசு உயர்த்தி உள்ள வரி உயர்வால், பொதுமக்கள், தொழில் நடத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சுத்திகரிப்பு தொழில்நு ட்பத்தை செயல்படுத்த, 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கி, திருப்பூருக்கு உயிர் கொடுத்தவர் அம்மா. அதன் மூலம் திருப்பூர் தொழில் வளம் பெற்று திருப்பூர் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தனர். தற்போது, பஞ்சு நுால் விலை உயர்வால், தொழில் நடத்தியவர்கள் கடனாளியாக மறிவிட்டனர். நிலைமை சரியாக, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில் தென்னம்பாளையம் பகுதி செயலாளரும் மாமன்ற எதிர்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி, பகுதி செயலாளர்கள் கருணாகரன், கண்ணன், கேசவன், ஹரிஹரசுதன், திலகர் நகர் சுப்பு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்..பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் கலைமகள் திரு.கோபால்சாமி,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் குமார்நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ,சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது :- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை வலுவாக வழிநடத்தியது போல அதை விட 4 மடங்கு மக்களை கவர்ந்து எளிமையின் அடையாளமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த கூட்டத்தின் நோக்கம் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஒரு பூத்திற்கு 200 புதிய உறுப்பினர்களை சேர்ப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். இதில் மகளிர் சுயக்உதவிகுழுவில் இருந்து 25 பேரும், இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு 25 பேரும், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். மன்றத்திற்கு உள்பட ஒரு பூத்திற்கு 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன. இந்த பணிகளை வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் 1 மாத காலம் முழுமையாக, விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டிபாலு, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், சுப்பு, பாலசுப்பிரமணியம், பி.கே.முத்து, ஹரிஹரசுதன், 15 வேலம்பாளையம் பகுதி அவைத்தலைவர் வி.கே.பி.மணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிச்சாமி, அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வார்டு செயலாளர்கள் தங்கராஜ், கனகராஜ், விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ஐஸ்வர்ய மகாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டர்கள் திரளான கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

     வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் மூலனூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய நகர பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு பேசியதாவது :- வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வருகைதர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய நகர பேரூராட்சி பகுதியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடி பூத்துக்கும் 18 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து அதில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள் ஆகியோரை இடம்பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன் உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றி,ய நகர ,கிளைக்கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வின் 1.5 கோடி தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம்.
    • தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க.வினர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டா டினர். அவை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக தீர்ப்பு குறித்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கூறியதாவது:- எத்தனையோ சோதனைகளை சந்தித்து, அ.தி.மு.க. என்றால் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை தீர்ப்பின் மூலம் காட்டியுள்ளார்கள்.அ.தி.மு.க. கொடி, அ.தி.மு.க.வின் 1.5 கோடி தொண்டர்கள் இனி எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம். வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இனி யாரும் கூக்குரல் இட முடியாது.புதிய தெம்போடு தி.மு.க.வை விரைவில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அ.தி.மு.க. ஆட்சியை அமைக்க மக்கள் தயாராவார்கள்.

    தென்மாவட்டங்கள் எப்போதுமே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உள்ளது. இப்பொழுதும் இப்படிதான் உள்ளது. இதுவே இறுதியான தீர்ப்பு தான். இனிமேல் இரட்டை தலைமை என்ற பேச்சுக்கு இடமே இல்லை. எப்பொழுதும் ஒற்றை தலைமைதான்.அ.தி.மு.க.வினர் மட்டும் எதிர்பார்த்த தீர்ப்பு அல்ல , நாட்டு மக்களும் எதிர்பார்த்த தீர்ப்பு.கட்சி இன்னார் தான் வழிகாட்ட வேண்டும் என நீதிமன்றம் சொன்ன பிறகும் சசிகலா கட்சி கொடியை கட்டிக்கொண்டு இருந்தால் அது தவறு தான். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    தி.மு.க. விற்கு எதிராக இனி கடுமையாக அ.தி.மு.க. களத்தில் போராடும். இதுவரை தலைமை குழப்பில் இருந்த நிலையில் இனி எடப்பாடி பழனிசாமி தான் என்றபோது கடுமையாக போராடுவோம். தி.மு.க. லஞ்சம் ஊழலை கைவிட வேண்டும்.ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தாலும் அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும். தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அரணாக இருப்பார். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திர சேகர்,பகுதிச் செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, ஹரிஹரசுதன், கே.பி.ஜி.மகேஷ்ராம், திலகர் நகர் சுப்பு ,பி. கே .முத்து ,தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், நிர்வாகிகள் ஆண்டவர் பழனிச்சாமி, ஜவகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சனிக்கிழமை முதல் வருகிற 15-ந் தேதி வரை அவரவர் இல்லத்தில் தேசிய கொடி பறக்கவிட வேண்டும்.
    • இரவில் தேசிய கொடி இறக்க தேவையில்லை.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை அவரவர் இல்லத்தில் தேசிய கொடி பறக்கவிட வேண்டும்.

    திருப்பூர் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட அமைப்பு செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, சார்பு அணி செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, நகர, ஒன்றிய, பேரூராட்சி, வார்டு, ஊராட்சி மற்றும் கிளை செயலாளர்கள், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வழக்கறிஞர் பிரிவு, இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர், அவரவர் வீடுகளிலும், வாகனங்களிலும் தேசிய கொடியை பறக்க விட்டு நாட்டு பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும்.

    தேசிய கொடியை நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை இரவில் இறக்க தேவையில்லை. பறந்தவாறே இருக்கட்டும் என்று அதற்கேற்றவாறு விதிகள் திருத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கயில் அவர் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.
    • 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து வரவேற்பு அளிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது. வருகிற 8-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவருக்கு திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் சார்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரளாக வந்து வரவேற்பு அளிக்க வேண்டும். பொதுச்செயலாளராக பொறுப்பேற்று முதன் முறையாக திருப்பூர் மாவட்டத்துக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, பாலசுப்பிரமணியம், காங்கயம் நகர செயலாளர் வெங்கு என்கிற மணிமாறன், சார்பு அணி செயலாளர்கள் கண்ணபிரான், சிட்டி பழனிசாமி, ஆண்டவர் பழனிசாமி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    ×