குண்டடம் வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அழைப்பு

தொண்டர்கள் திரளான கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் பொள்ளாச்சி  ஜெயராமன் எம்.எல்.ஏ.,  பேசிய காட்சி.
கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசிய காட்சி.
Published on

 வெள்ளகோவில் :

வெள்ளகோவிலில் மூலனூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. ஒன்றிய நகர பூத் கமிட்டி மற்றும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு பேசியதாவது :- வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வருகைதர உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து ஒன்றிய நகர பேரூராட்சி பகுதியில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடி பூத்துக்கும் 18 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து அதில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்கள் ஆகியோரை இடம்பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேசசுதர்சன் உள்ளிட்ட மாவட்ட ,ஒன்றி,ய நகர ,கிளைக்கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com