search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி உடல்நிலை- ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராகுல் காந்தி நலம் விசாரிப்பு
    X

    கருணாநிதி உடல்நிலை- ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராகுல் காந்தி நலம் விசாரிப்பு

    தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். #Karunanidhi #DMK #Ramnathkovind #Rahulgandhi
    புதுடெல்லி : 

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரக தொற்று காரணத்தால் காய்ச்சல் உள்ளதாகவும், உடல் நலிவு ஏற்பட்டிருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி மற்றும் திருமாவளவன், ஜி.கே.வாசன், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட பலர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து அவரது உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தனர்.

    தமிழிசை சவுந்தரராஜன், வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்டோர் இன்று கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் நலம் விசாரித்துள்ளார்.

    ‘தொலைபேசி வாயிலாக கருணாநிதியின் உடல்நலன் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுடன் விசாரித்தேன். அவர் விரைவில் பூரண நலம் பெற்று பொதுவாழ்க்கைக்கு வர வேண்டும்’ என ட்விட்டரில் ராம் நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலன் குறித்து விசாரித்தார். 

    #Karunanidhi #DMK  #Ramnathkovind  #Rahulgandhi

    Next Story
    ×