search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway stations"

    • பிரெய்லி வரை படத்தில் ‘கியூ ஆர் கோடுகள்’ கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்து தகவல்களை ஒலிக்கச் செய்து, போக விரும்பும் இடத்தின் வழியை தெரிந்துகொள்ளலாம்.
    • பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, நடைமேடைகளை பாதுகாப்பான இடமாக மாற்ற நடைமேடைகளின் ஓரத்தில் தொட்டு உணரும்படியான டைல்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை கோட்டத்தில் முதல் முறையாக பார்வை குறைபாடுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில் பிரெய்லி வரைபடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இவற்றை 'பெருநிறுவன சமூக பொறுப்பு' திட்டத்தின் கீழ் சென்னை சென்ட்ரலில் ரேனால்ட் நிசான் நிறுவனமும், சென்னை எழும்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் நிறுவனமும் அமைத்து உள்ளன.

    இந்த வரைபட வசதி, பார்வை குறைபாடுள்ள பயணிகள், மற்றவர்கள் உதவியில்லாமல் தாங்களே ரெயில் நிலையத்திற்குள் தேவைப்படும் இடங்களுக்கு சென்று அதன் வசதிகளை பயன்படுத்திக்கொள்ள உதவும்.

    மேற்கண்ட ரெயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ள 3x3 அடி அளவுள்ள இந்த பிரெய்லி வரைபடம் அந்தந்த ரெயில் நிலையங்களின் மேற்பார்வையை அளிக்கும். மேலும் அடிப்படை வசதிகளை பட்டியலிட்டு, பயணிகள் போக விரும்பும் டிக்கெட் கவுண்டர்கள், நடைமேடைகள், பாதசாரி பாலங்கள் மற்றும் பல இடங்களை அடைய வழியை காட்டுகிறது.

    இந்த பிரெய்லி வரை படத்தில் 'கியூ ஆர் கோடுகள்' கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்து தகவல்களை ஒலிக்கச் செய்து, போக விரும்பும் இடத்தின் வழியை தெரிந்துகொள்ளலாம்.

    பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, நடைமேடைகளை பாதுகாப்பான இடமாக மாற்ற நடைமேடைகளின் ஓரத்தில் தொட்டு உணரும்படியான டைல்கள் பதிக்கப்பட்டுள்ளன.

    பார்வை குறைபாடுள்ள பயணிகளின் பாதுகாப்புக்காக சென்னை கோட்டம் முழுக்க பாதசாரி பாலங்களின் படிக்கட்டுகளில் பிரெய்லி பொறிக்கப்பட்டுள்ள துருப்பிடிக்காத இரும்பிலான கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பார்வையற்ற பயணிகளுக்கு பிரெய்லி வரைபட பலகை சேவையை பின்வரும் காலங்களில் அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அவர்களின் பயணத்தை பாதுகாப்பாகவும், இனிதாகவும் மாற்ற சென்னை கோட்டம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

    • மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்கள் ஸ்டால்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
    • மனு விண்ணப்பங்களை நாளைக்குள் அலுவலகத்தில் அளிக்கலாம்.

    மதுரை

    மதுரை கோட்ட ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க "ஒரு நிலையம்- ஒரு பொருள்" திட்டத்தின் கீழ் இலவச இடம் தரப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

    இதன்படி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூர், நெல்லை, திருமங்கலம், திண்டுக்கல், மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் முறையே கடலை மிட்டாய், மக்ரூன், கருவாடு, பனை பொருட்கள், கைலி, சின்னாளபட்டி சேலைகள், சுங்குடி சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த 2-ந் தேதி வரை 10 நாட்களில் திருச்செந்தூர், நெல்லை ரெயில் நிலையங்களில் ரூ.2லட்சத்து 81 ஆயிரத்து 960 மதிப்பு உள்ள பனை பொருட்கள் விற்பனை ஆகி உள்ளன. மதுரையில் ரூ.1லட்சத்து 84ஆயிரத்து 660 மதிப்பு உள்ள சுங்குடி சேலைகள் விற்கப்பட்டுள்ளன.

    மீதம் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் ரூ.6லட்சத்து 91ஆயிரத்து 473 மதிப்பு உள்ள பொருட்கள் விற்கப்பட்டு உள்ளன.

    ராமேசுவரம், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, பழனி, பரமக்குடி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர், கொடை ரோடு, திருமங்கலம், ஒட்டன்சத்திரம், அம்பாசமுத்திரம், மணப்பாறை, புனலூர், கொட்டாரக்கரா, மதுரை, நெல்லை, திருச்செந்தூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் முறையே கடல்பாசி, சேவு, பத்தமடை பாய், கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம், கைத்தறி சேலை, ஆயத்த ஆடை, பேப்பர் பொருட்கள், விவசாய விளை பொருட்கள், மூங்கில் இருக்கைகள், மண்பாண்ட பொருட்கள், பலாப்பழம், செட்டிநாடு கொட்டான், பால்கோவா, பன்னீர் திராட்சை, மல்லிகை மலர், வெண்ணை, மர விளையாட்டு பொருட்கள், முறுக்கு, மிளகு, முந்திரி, சுங்குடி சேலை, பனை பொருட்கள், சின்னாளபட்டி சேலை, மக்ரூன், கடலை மிட்டாய், கருவாடு, கைலி போன்ற பொருட்களை வருகிற 8-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு மீண்டும் விற்பனை செய்ய விருப்ப மனு கோரப்பட்டு உள்ளது.

    கைவினை மற்றும் கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்போர், பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள், பதிவு பெற்ற சிறு தொழில் நிறுவனம், பழங்குடி கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி கூட்டமைப்பில் பதிவுபெற்ற நெசவாளர் ஆகியோர் விருப்ப மனு விண்ணப்பங்களை www.sr.indianrail.gov.in இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விருப்ப மனு விண்ணப்பங்களை நாளை (5-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம்.

    அன்று மாலை 3.30 மணிக்கு தகுதி பெற்ற நபர் அல்லது நிறுவனம் தேர்வு செய்து அறிவிக்கப்படும். விவரங்களுக்கு 9003862967 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • பொதுமக்கள் ரெயில்வேயுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    • மறு உத்தரவு வரும் வரை பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

    வட மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் பாரத்பந்த் காரணமாக ரெயில் நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாரத் பந்த் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும், மறு உத்தரவு வரும் வரை பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

    ரெயில் பயனாளிகள் மற்றும் ரெயில்வே சொத்துக்களின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கு, பயணிகள் மற்றும் பொதுமக்கள் ரெயில்வேயுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி தரக்கூடாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த ரெயில்வே நிர்வாகம் லைசென்ஸ் வழங்குகிறது. ஈரோடு ரெயில் நிலையத்தில் உணவகம் நடத்த பி.கே.அமினா என்பவருக்கு ரெயில்வே நிர்வாகம் லைசென்ஸ் வழங்கியது. லைசென்ஸ் காலம் முடிவடைந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டது.

    இந்தநிலையில், மீண்டும் லைசென்சை புதுப்பிக்கக்கோரி அமினா, ரெயில்வே துறையை நாடினார். அவரது கோரிக்கையை ரெயில்வே நிர்வாகம் எதிர்த்தது. இதைத்தொடர்ந்து அவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர், ‘ரெயில் நிலையங்களில் உணவகம் நடத்த குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி தரக்கூடாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். மனுதாரருக்கு ஏற்கனவே ஒருமுறை லைசென்ஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 
    ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மீண்டும் தவறு செய்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை என்றும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. #RailwayStation #Selfie #Fine
    சென்னை:

    இளைஞர்களிடம் செல்போன் மூலம் ‘செல்பி’ எடுக்கும் மோகம் அதிகரித்தப்படி உள்ளது.

    ‘செல்பி’ எடுத்து அவற்றை உடனுக்குடன் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்பவர்கள், ஓடும் ரெயிலிலும் வாசலில் நின்று பயணம் செய்து கொண்டே செல்பி எடுக்க தவறுவதில்லை.

    சில பயணிகள் ரெயில் நிலையங்களில் தூரத்தில் ரெயில் வரும் போது, அந்த காட்சியை பின்னணியாகக் கொண்டு செல்பி எடுக்கிறார்கள். இத்தகைய செல்பி மோகத்தால் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் அடிக்கடி விபத்து நடக்கிறது.

    இந்த செல்பி விபத்துகளை தடுக்க தென்னக ரெயில்வே சில திட்டங்களை அமல்படுத்தியது. அதற்கு பலன் கிடைக்காததால், ஓடும் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரெயில் பெட்டிகளின் வாசல்களிலும், ரெயில் என்ஜின் முன்பும் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. சேலம் டிவிசனில் இந்த அபராத திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அதில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் வயதானவர்களும் கூட செல்பி மோகத்தில் சிக்கியுள்ளனர்.

    ரெயில் பயண நினைவுகளை படமாக்க சிலர் செல்பி எடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். முதலில் பயணிகளை எச்சரிக்கை செய்யவும், பிறகு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரே பயணி மீண்டும், மீண்டும் செல்பி எடுத்து பிடிபட்டால் அவருக்கு அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அந்த சுற்றறிக் கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக் கையைத் தொடர்ந்து நேற்று முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

    முதல் நாள் என்பதால் நேற்று செல்பி எடுத்த பயணிகள் எச்சரித்து விடுக்கப்பட்டனர். இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.#RailwayStation #Selfie #Fine
    ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. #RailwayStation #Selfie #Fine
    மதுரை:

    நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்பி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதனை ஒரு விதமான மனநோய் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த மனநோய் ரெயில் பயணிகளையும் விட்டுவைக்கவில்லை.

    தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கேமராக்கள், வீடியோ கேமராக்களுக்கு பதிலாக செல்போன்கள் மூலம் இத்தகைய காட்சிகளை படமாக்கி மலரும் நினைவுகளாக்க முயலுகின்றனர். ஆனால் சிலர் பாலங்களில் ரெயில் செல்லும் போதும், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்பி’ எடுக்கின்றனர்.

    இதனால், ரெயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனை தடுக்க, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை கோட்டத்தில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் ‘செல்பி’ எடுப்பவர்கள், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க பறக்கும் படை டிக்கெட் பரிசோதகர்கள் தயாராக உள்ளனர். ஆனால், இது குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் ரெயில் நிலையங்களில் வைக்கப்படவில்லை.  #RailwayStation #Selfie #Fine
    உத்தரபிரதேசத்தில் கோவில்கள், ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #UttarPradesh #HighAlert
    லக்னோ:

    பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் அடிக்கடி கொடூர தாக்குதல் களை அரங்கேற்றி வருகிறது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்பே மூளையாக செயல்பட்டு இருந்தது.

    இந்த அமைப்பின் தளபதிகளில் ஒருவரான மவுலானா அம்பு ஷேக் என்ற பெயரில் பிரோஸ்பூரில் உள்ள வடக்கு ரெயில்வே அலுவலகத்துக்கு கடந்த மாதம் 29-ந் தேதி கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் உத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் மற்றும் ஹபூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

    மேலும் பகவான் கிருஷ்ணர் அவதரித்த இடமான மதுரா மற்றும் காசி விசுவநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த தாக்குதல்கள் ஜூன் 8-ந் தேதி (நாளை) முதல் 10-ந் தேதிக்குள் நடைபெறும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

    பயங்கரவாதிகளின் இந்த மிரட்டல் கடிதம், உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கடிதத்தில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமின்றி பிற முக்கியமான பகுதிகளிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பஸ், ரெயில் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    இது குறித்து மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் குமார் கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பித்து உள்ளோம். ஆனால் லஷ்கர்- இ-தொய்பா தளபதி அம்பு ஷேக் குறித்து உளவுத்துறை யினருக்கு எதுவும் தெரியவில்லை. எனவே இது வெறும் புரளியாகவும் இருக்கலாம்’ என்று தெரிவித்தார். #UttarPradesh #HighAlert
     #tamilnews 
    ×