search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "punishment"

    • திருநாவலூர் அருகே அண்ணன் கண்டித்ததால் தம்பி தற்கொலை செய்துகொண்டார்.
    • அண்ணன் டேவிட் பிரசாத் மேற்படிப்பு படிக்குமாறு தம்பியை கண்டித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராபர்ட் ராஜ் சேகர் மகன் பிரவினவா.(வயது 17) பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார் சம்பவத்தன்று பிரவினவா அண்ணன் டேவிட் பிரசாத் வயது 21 மேற்படிப்பு படிக்குமாறு தம்பியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவினவா அதே ஊரில் உள்ள ஏரிக்கரை பகுதியில் சென்று வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த சம்பவம் தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவுக்கு அலி சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டார்

    • கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டது.
    • தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கின்ற சத்யராஜ் வயது 34. இவர் கரூர் மாவட்டம் மாயனூர் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் மாயனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் சுரேஷ் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நிலையில் சுரேஷ் கடந்த 17.4.2014 ஆம் தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை சுரேஷுக்கு பரோல் விடுப்பு வழங்கப்பட்டு மூன்று ஆயுதப்படை காவலர்கள் வழி காவலாக நியமிக்கப்பட்டு பட்டுக்கோட்டை அருகே உள்ள சிராங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்த சுரேஷ் தப்பி ஓடிவிட்டார்.

    இதை அடுத்து வழி காவலர்களாக வந்த அந்த மூன்று ஆயுதப்படை காவலர்களும் இது பற்றி மதுக்கூர் காவல் நிலையத்தில் தெரிவித்தனர். இதை அடுத்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி சுரேஷ் என்கின்ற சத்யராஜை போலீசார் தேடி வருகின்றனர். ஆயுள் தண்டனை கைதி தப்பித்து ஓடிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியை பக்கத்து வீட்டு தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
    • சிறுமியின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி கஜூரிகாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணின் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் மகள் (5) சரிவர வீட்டு பாடம் செய்யவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், மகளின் கை மற்றும் கால்களை கயிறால் கட்டி வீட்டின் கூரையில் சுட்டெரிக்கும் வெயிலில் விட்டு சென்றுள்ளார்.

    வெயில் தாங்க முடியாமல் துடிக்கும் சிறுமியின் நிலையை பக்கத்து வீட்டு நபர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிறுமி வெயிலில் துடிக்கும் வீடியோவைக் கண்டு சிறுமியின் தாயை மக்கள் திட்டி தீர்க்கின்றனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரியவந்ததை அடுத்து, சிறுமியின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டு பாடம் செய்யாததால் பெற்ற பிள்ளைக்கே கொடூர தண்டனை வழங்கிய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூரில் கோர்ட்டை அவமதித்த டி.எஸ்.பி. பரமசாமியை கோர்ட்டு முடியும் வரை கோர்ட்டில் இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    விசாரணை அதிகாரியான அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி கோர்ட்டில் கடந்த 11-ந் தேதி ஆஜரானார். விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார்.

    அவரிடம் அரசு சிறப்பு வக்கீல் தொடர்ந்து சந்தேகங்களை கேட்டபோது ஆவேசப்பட்ட டி.எஸ்.பி. சத்தமாக பேசி உள்ளார்.

    அவரது செயல் மாவட்ட நீதிபதியிடம் உரிய விளக்கம் அளிக்காமல் சாட்சி கூண்டில் நின்று கண்ணிய குறைவாகவும், கோர்ட்டை அவமதிக்கும் வகையிலும் இருந்தது.

    இதனையடுத்து அவினாசி டி.எஸ்.பி. நடந்து கொண்ட விதம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த மேற்கு மண்டல ஐ.ஜி. மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    மேலும் கோர்ட்டில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு டி.எஸ்.பி.க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    இதனை தொடர்ந்து திருப்பூர் கோர்ட்டில் விளக்கம் அளிப்பதற்காக டி.எஸ்.பி. பரமசாமி வந்து இருந்தார். அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி அல்லியிடம் அளித்த விளக்கம் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கருதிய அவர் டி.எஸ்.பி. பரமசாமியை கோர்ட்டு முடியும் வரை கோர்ட்டில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி மாலை கோர்ட்டு நேரம் முடிந்த பின் டி.எஸ்.பி. பரமசாமி வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.  




    மில்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூரில் பணிபுரியும் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மணிமேகலை மற்றும் உறுப்பினர்கள் பிரதமருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் சுமங்கலி திட்டம் மற்றும் இதர திட்டங்களின் வாயிலாக விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்கள் அதிகபடியான நேரங்களில் குறைவான ஊதியத்தில் பணி புரிகின்றனர். பல இடங்களில் இளம் பெண்கள் வேலைக்காக கடத்தப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெண்கள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் வீட்டு வேலைக்காகவும், கட்டாய தொழிலாளியாகவும் மாற்றப்படும் நிலை உள்ளது. இவர்கள் பல சமயங்களில் பாலியல் அடிமைகளாக ஆளாக்கப்படுகின்றனர்.

    நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் வெளி நாடுகளில் இருந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் நீதி கிடைத்து விடுகிறது. மேலும் தவறு செய்தவர்களின் சொத்துகளும் முடக்கப்படுகிறது.

    எனவே இந்தியாவிலும் இது போன்று ஆள்கடத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களின் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை வழங்க சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    திருத்துறைப்பூண்டியில் ரூ.2 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மருந்துக்கடைக்காரருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரிய சிங்களாந்தி தமிழர் தெருவை சேர்ந்தவர் மாதவன் (37). வேன் டிரைவர். இவரிடம் வித்வான் மானைக்கால் பகுதியை சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளரான விஜயகுமார் ரூ.2 லட்சம் கடனாக பெற்றார். அதற்கு திருத்துறைப்பூண்டி ஐ.ஓ.பி. வங்கி செக் ஒன்றை கொடுத்தார். அதனை மாதவன் வங்கியில் செலுத்திய போது பணமில்லாமல் திரும்பி வந்தது.

    இதுகுறித்து மாதவன் திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் விஜயகுமார் செக் கொடுத்து மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

    விரைவு நீதிமன்ற நீதிபதி கண்ணன் வழக்கை விசாரித்து விஜயகுமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் ரூ.2 லட்சத்தை ஒரு மாதத்தில் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தர விட்டார்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். #Thirunavukkarasar #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் நேற்று தனித்தனியாக தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர்.

    அப்போது, திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    அராஜகமாக, காட்டுமிராண்டித்தனமாக போலீசார் நடந்து இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் நடந்த போராட்டத்தில் 5 கிலோமீட்டர் தூரம் வரை அமைதியாக வந்துள்ளனர்.

    குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு போலீசார் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் 12 பேர் இறந்துள்ளனர். ஜனநாயக நாட்டில் அறவழியில் நடந்த போராட்டத்திற்கு தீர்வு காணாமல் துப்பாக்கி குண்டுகள் மூலம் முடிவு கட்ட முயற்சி செய்து உள்ளனர். பாசிச ஆட்சி போல் இத்தனை பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு மூல காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறுகையில், “துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசு, காவல்துறை சேர்ந்து பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தி உள்ளது. காவல்துறை திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளது. காக்கை, குருவிகளை போல், மனிதர்களை படுகொலை செய்து உள்ளனர். இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்றார்.  #Thirunavukkarasar #SterliteProtest
    ×