search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insulting court"

    திருப்பூரில் கோர்ட்டை அவமதித்த டி.எஸ்.பி. பரமசாமியை கோர்ட்டு முடியும் வரை கோர்ட்டில் இருக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த வன்கொடுமை வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    விசாரணை அதிகாரியான அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி கோர்ட்டில் கடந்த 11-ந் தேதி ஆஜரானார். விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார்.

    அவரிடம் அரசு சிறப்பு வக்கீல் தொடர்ந்து சந்தேகங்களை கேட்டபோது ஆவேசப்பட்ட டி.எஸ்.பி. சத்தமாக பேசி உள்ளார்.

    அவரது செயல் மாவட்ட நீதிபதியிடம் உரிய விளக்கம் அளிக்காமல் சாட்சி கூண்டில் நின்று கண்ணிய குறைவாகவும், கோர்ட்டை அவமதிக்கும் வகையிலும் இருந்தது.

    இதனையடுத்து அவினாசி டி.எஸ்.பி. நடந்து கொண்ட விதம் குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த மேற்கு மண்டல ஐ.ஜி. மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    மேலும் கோர்ட்டில் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு டி.எஸ்.பி.க்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    இதனை தொடர்ந்து திருப்பூர் கோர்ட்டில் விளக்கம் அளிப்பதற்காக டி.எஸ்.பி. பரமசாமி வந்து இருந்தார். அப்போது மாவட்ட முதன்மை நீதிபதி அல்லியிடம் அளித்த விளக்கம் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கருதிய அவர் டி.எஸ்.பி. பரமசாமியை கோர்ட்டு முடியும் வரை கோர்ட்டில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    அதன்படி மாலை கோர்ட்டு நேரம் முடிந்த பின் டி.எஸ்.பி. பரமசாமி வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்.  




    ×