search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public suffering"

    • தி.மு.க. கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
    • சாலை, கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை புகார்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் ரத்தினசாமி, துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தி.மு.க., அதிமுக, பாமக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான திமுக கவுன்சிலர் தங்களது வார்டுகளில் சாலை, கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.

    பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    குடிநீர் தொட்டி பம்பு ஆப்ரேட்டர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் தராததால் தண்ணீர் விட மறுக்கின்றனர். இதனால் பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருவதாகவும் சரமாரி குற்றச்சாட்டுகள் எழுப்பினர்.

    கவுன்சிலர்கள் வைத்த குற்ற சாட்டுகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் உறுதி அளித்தனர்.

    • பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி நடத்த வேண்டும். அன்றைய தினம் பொது விடுமுறையாக இருந்தால், அடுத்த வேலை நாளில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டும் என, கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.

    அதன்படி, கடந்த சில மாதங்களாக காரைக்காலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் மாதந்தோறும் பொதுமக்கள் குறை கேட்பு நாள் நடந்து வந்தது. அதேபோல், மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்து, காரைக் கால் மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங் களில் பணிபுரியும் ஊழி யர்கள் அரசு உத்தரவுப்படி காலை 8:45 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்றும், குறித்த நேரத்திற்கு பணிக்கு வராதவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    அந்தவகையில், மாதம் ஒரு முறை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது ஆனால் பல்வேறு அரசுத் துறைகளில் துறை அதிகாரி கள், ஊழியர்கள் காலை 10 மணிவரை வரவில்லை. அதேபோல், கோடை வெயி லில் பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை. பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தங்கள் புகார் களை வழங்கி சென்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சாலையோரங்கள் சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    • பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. 3 நாட்களாக மாலை நேரத்தில் பெய்து வரும் இந்த மழையால் மதுரை நகரின் பல பகுதிகளில் சாலை யோரம் மழை நீர் தேங்கி உள்ளது. பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் சாலையோரமும் மழை நீர் தேங்கி சேறு சகதியுமாக மாறிப்போய் உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    காளவாசல்

    இதேபோல காளவாசல் சிக்னல்-தேனி பிரதான சாலையில் சிறிய மழைக்கே தண்ணீர் குளம்போல் தேங்கி சகதியாக கிடப்பதால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் கடைவீதிகளில் உள்ள சாலைகளிலும் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் ஓட்டல்க ளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் மதுரை நகரின் பல்வேறு இடங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. ஆனால் மாநகராட்சி எந்த வித நடவடிக்கையும் எடுக் காமல் இருந்து வருகிறது.

    சித்திரை திருவிழா நடந்து வரும் நிலையில் இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். மெத்தனம் காட்டினால் விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    போக்குவரத்து நெருக்கடி

    மேலும் நகரின் குறுகிய சாலைகளில் கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களை அனுமதிப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை யும் போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.

    மதுரை மாநகரில் மழை பெய்தால் தண்ணீர் வடிய முடியாத சூழ்நிலை பல இடங்க ளில் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் நகரில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • இந்த தடையை தவிர்க்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் பட்டணம் காத்தான் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில்10-க்கும் மேற்பட்ட முறை குறைந்தது 5 நிமிடம் முதல் 10நிமிடங்கள் வரையும், சில நேரம் அரை மணி நேரத்திற்கு மேலாகவும் மின்தடை ஏற்படுகிறது.

    கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வீடுகளில் மக்கள் சிரமப்படுகின்றனர். பகல் நேரத்தில் இது போல் ஏற்படும் மின்தடையால் வணிக நிறுவனங்களில் தொழில் பாதிக்கப்படுகிறது.

    காலை நேரத்தில் பணிக்குச் செல்லும் போது ஏற்படும் மின்தடையால் உணவுகளை தயார் செய்ய முடியவில்லை என்றும், பெண்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.

    இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமிழந்து அவதிப்படுகின்றனர்.மின்வாரியம் முறையாக மின்சாரம் வழங்கவும் இந்த தடையை தவிர்க்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வடமதுரை பகுதியில் தாபா ஹோட்டல்கள் கூடாரங்களில் அமர்ந்து மதுகுடிக்கும் குடிமகன்கள் போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர்.
    • மது விற்பனை செய்யப்பட்ட ஹோட்டல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மது விற்பனை செய்து வருகிறது. மேலும் சில தனியார் பார்கள் லைசென்ஸ் எடுத்து மதுவிற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காலை 12 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே மது விற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இடங்களில் 24 மணிநேரமும் தடையில்லாமல் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வேலைக்கு செல்லாமல் கூலித்தொழிலாளர்கள் மது குடித்து மயங்குகின்றனர்.

    இதனால் அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபோதையில் குடிமகன்கள் ரகளையில் ஈடுபடுவதால் பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

    மேலும் போதை தலைக்கேறிய நிலையில் அவர்கள் குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர். திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் வடமதுரை பகுதியில் ஏராளமான தாபா ஹோட்டல்கள் உள்ளன. இங்கு குடும்பத்துடன் உண்ணும் உணவகம் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது.

    ஆனால் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடாரங்களில் அமர்ந்து மதுகுடிக்கும் குடிமகன்கள் போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது சிலர் மது குடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மது விற்பனை செய்யப்பட்ட ஹோட்டல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 95 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானாது
    • இரவு சாரல் மழை பெய்தது

    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். சாதாரணமாக 100 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகும்.

    ஆனால் இந்த ஆண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெயிலின் தாக்கம் இல்லாமல் மழையால் இதமான காலநிலை நிலவியது. மார்ச் மாதம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் இப்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நேற்று வேலூர் மாவட்டத்தில் 95.5 டிகிரி அளவுக்கு வெயில் பதிவானாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உணரப்பட்டது.

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். பொதுமக்கள் வெயிலை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று 95 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானாலும் இரவு 8 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. இதனால் பகலில் இருந்த வெப்பம் குறைந்து இதமான சூழல் நிலவியது.

    • ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக பொது மக்கள் கடைகளில் திருப்பி கேட்டு தகராறு செய்தனர்.
    • எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பால் பவுடர் சரியாக கலக்கப்படவில்லை. இதனால் பாக்கெட்டில் பவுடராக காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு பிரிவினர் போராட்டம் நடத்துவதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று ஆவின் நிர்வாகம் தரப்பில் சொன்னாலும் சென்னை உள்பட பல இடங்களில் ஆவின் பால் கொள்முதல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக தொழிலாளர்கள் பற்றாக் குறை, பால் கொள்முதல் குறைவு காரணமாக பால் வினியோகம் சென்னையில் தாமதமாகி வருகிறது. மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணையில் நீடித்து வரும் பிரச்சினையை சமாளிக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

    பால் தட்டுப்பாட்டை சமாளிக்க மகாராஷ்டிராவில் இருந்து பால் பவுடர், வெண்ணை கொள்முதல் செய்யப்பட்டு அதனை சமன்படுத்திய பால் (பச்சை பாக்கெட் பால்) தரத்திற்கு மாற்றி வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது.

    பால் கொள்முதல் குறைந்துள்ள நிலையில் அதனை ஈடு செய்ய ஆவின் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டது.

    சென்னையில் அம்பத்தூர் பண்ணையில் இருந்து நேற்று காலையில் வினியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார் எழுந்தது.

    பால் பவுடர் மற்றும் வெண்ணை சரியாக சமன் படுத்தப்படாததால் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட 60 ஆயிரம் பாக்கெட்டுகள் கெட்டுப்போனதாக முகவர்கள் தெரிவித்தனர்.

    எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பால் பவுடர் சரியாக கலக்கப்படவில்லை. இதனால் பாக்கெட்டில் பவுடராக காணப்பட்டது. இதை வாங்கி சென்ற பொது மக்கள் வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு கடைகளில் திருப்பி கொடுத்தனர்.

    அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், முகப்பேர், அண்ணாநகர், போரூர், பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வினியோகிக்கப் பட்ட ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக பொது மக்கள் கடைகளில் திருப்பி கேட்டு தகராறு செய்தனர்.

    இந்நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பால் வினியோகம் இன்று பாதிக்கப்பட்டது. அதி காலை 5 மணி வரை அம்பத்தூர் பண்ணையில் இருந்து பால் வினியோக வாகனங்கள் வெளியே செல்ல வில்லை. பால் அட்டைதாரர் களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சப்ளை செய்யப் பட்டது. ஆனால் கடை களுக்கு வழங்கப்படும் பால் பாக்கெட்டுகள் காலை 6 மணி வரை வெளியே செல்லவில்லை. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். கடைகளுக்கு 7, 8 மணிக்கு மேல் தான் பால் சப்ளை செய்யப்பட்டது. ஆவின் பால் கிடைக்காததால் தனியால் பாலை வாங்கி சென்றனர்.

    சென்னையில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் வினியோகம் தாமதத்தால் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சமன்படுத்தப்பட்ட பாலில் கொழுப்புசத்திற்கு இணையாக ஒரு சதவீதம் பால் பவுடர் கலக்கப்படும். அவ்வாறு கலக்கும் எந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக முறையாக கலக்கப்படவில்லை. இதனால் பால் கெட்டுப் போகாது. பால் கெட்டுப் போனதாக பொதுமக்கள் கூறியதால் அவர்களுக்கு மாற்று பாக்கெட் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. கடைகளுக்கு சப்ளை செய்த பாலில் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது.

    அதனை சரி செய்து பால் பதப்படுத்தி வினியோகம் செய்யும் பணி சீராக்கப்பட்டுள்ளது. எந்தி ரத்தை சரி செய்யும் பணி இரவு வரை நீடித்தது. அதனால் இன்று காலையில் பால் வினியோகம் செய்வதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. நாளை முதல் பால் வினியோகம் சீராகி விடும். தொழிலாளர்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்பத்தூர் பால் பண்ணையில் தினமும் 5 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
    • திருவாரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

    திருவாரூர்:

    தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை உள்ள 412 வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நான்கு வருடமாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பதவியிறக்கம் பெற்ற வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் போன்ற பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டவாறு பதவியிறக்கத்திலிருந்து பாதுகாத்திட வேண்டும், வருவாய் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் முதல் அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக வருவாய் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்தப் போராட்டத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் துறை பிரிவில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வருவாய் துறை சார்ந்த பணிகள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் உடனடியாக வருவாய் துறை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக மனித சங்கிலி தொடர் வேலை நிறுத்த போராட்டம் போன்றவற்றில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • தர்ப்பூசணி-பழஜூஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. கடந்த வாரம் வரை 30 முதல் 32 டிகிரி செல்சியசுக்கு பதிவான வெப்பத்தின் அளவு தற்போது 35 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகியுள்ளது. இந்த அளவு வெயிலையே பொதுமக்களால் தாங்க முடியவில்லை. பங்குனி தொடக்கத்திலேயே கடும் வெயில் சுட்டெரிப்பதால் சித்திரை மாதத்தில் இதை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும், பகல் நேரத்தில் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் தற்போதிருந்தே வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதை காண முடிகிறது.

    மதுரையில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. கோடை வெயிலை மக்கள் சமாளிப்பதற்காக தர்ப்பூசணி பழங்கள் அதிகளவில் மதுரைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சாலையோர கடைகள் மற்றும் பழக்கடைகளில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளை பொதுமக்கள் அதிகளிவில் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுவாக சித்திரை மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என்றனர்.

    • வழியை அடைத்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
    • இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வேலை, கல்வி உள்ளிட்ட பணிகளுக்காக திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். 

    இந்த நிலையில் பஸ் நிலையத்திற்குள் தாறுமாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்களுக்கு கடும் அவதி ஏற்படுகிறது. குறிப்பாக பஸ் நிலையத்திற்குள் கடைகள் அமைந்துள்ள பக்கவாட்டு பகுதியில் செல்லும் வழியை அடைத்து இருசக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதை தடுக்கவேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • உடுமலை பழனி ரோட்டில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
    • பல இடங்களில் பாதையில் பணி காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை பழனி ரோட்டில் இருந்து ஸ்ரீநகர் பூங்கா அருகே பாலம் கட்டுமானபணி காலதாமதமாவதால் குடியிருப்புகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.உடுமலை பழனி ரோட்டில் கழுத்தறுத்தான் பள்ளம் ஓடையில் கான்கிரீட் கரை அமைக்கும் பணி இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பாதையில் பணி காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டாள் சீனிவாசன் நகர், ஸ்ரீநகர். பெரியார் நகர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு செல்லும் மெயின் ரோட்டில் ஓடையன் குறுக்கே புதிதாக பாலம் கட்ட ஒரு மாதத்தின் முன் குழி தோண்டபட்டது. மேலும் மெயின் ரோட்டில் ஆபத்தான நிலையில் தோண்டப்பட்ட குழி எந்தவிதமான எச்சரிக்கை அறிவிப்பும் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலம் கட்டும் பணியை உடனடியாக துவக்கி விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • 10 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
    • காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

    புதுச்சேரி:

    வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, இன்று அதிகாலை முதல் லேசான தொடர் மழை காரைக்காலில் பெய்தது. தொடர்ந்து 10 மணிக்கு மேல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    அண்டை மாநிலமான தமிழகத்தில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காரைக்கால் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

    ×