search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "power outages"

    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வந்தது.
    • குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்திருந்தது.

    அதேவேளையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளி காற்று வீசி வருகிறது. இன்றும் பலத்த சூறாவளி காற்று வீசியது. குறிப்பாக குன்னூர், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுவது, வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன.

    காற்றின் வேகத்தால் ஊட்டி அருகே உள்ள கோவில்மேடு பகுதியில் வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து, கூரை ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு தரையில் கிடக்கின்றன. 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளன.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொலக்கம்பை, சேலாஸ், கோடேரி, கைகாட்டி, வண்டிச்சோலை, பாரத் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தது.

    குறிப்பாக காமராஜர் புரம் பகுதியில் ஊராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளின் மேற்கூரையும் காற்றில் பறந்தன. குன்னூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்துள்ளன.

    உபதலை, மேல்பாரத் நகர், சப்ளை டிப்போ, பழைய அருவங்காடு உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    மரங்கள் விழுந்த பகுதிகளில் குன்னூர் தாசில்தார் கனி சுந்தரம் மேற்பார்வையில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரங்களை அகற்றி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    சின்ன வண்டிச்சோலை பகுதியில் 3 மின் கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் 5 மணி நேரம் போராடி சீரமைத்தனர்.

    காத்தாடி மட்டம் அருகே சாலையில் நின்றிருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது மரத்தின் கீழே இருந்த கோவில் சேதம் அடைந்தது. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் தொடர்ந்து விழுந்து வருவதால், அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

    குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வீசிய சூறவாளி காற்றுக்கு, பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கொய்மலர் சாகுபடி குடில்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தன. பல இடங்களில் குடில்களின் பிளாஸ்டிக்குகள் கிழிந்துள்ளதால் மலர் சாகுபடி தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொய்மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு, கோத்தகிரியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேற்கூரை காற்றில் பறந்தது. இந்த பணிமனை தற்போது தான் புதிதாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வீசி வரும் சூறவாளி காற்றுக்கு மாவட்டம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன.

    இதேபோல் 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் காற்றில் பறந்து சேதம் அடைந்துள்ளது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் 5 இடங்களில் டிரான்ஸ்பார்மர்களும் கீழே விழுந்து சேதம் அடைந்துள்ளன. ஊட்டி, குன்னூர், மஞ்சூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் உள்பட பல்வேறு இடங்களில் 150க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஆங்காங்கே விழுந்து மின் வினியோகம், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று தொடர்ந்து வீசுவதால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    கொழும்பு:

    இலங்கை முழுவதும் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மின் வினியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வினியோகத்தை சீர் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் மின்சார அமைப்பு தெரிவித்தது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, அதிலிருந்து மீண்டு வந்தது. இதற்கிடையே இலங்கையில் மின் வினியோக பாதையில் கோளாறு காரணமாக மின்தடை ஏற்படுகிறது.

    ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தற்போது மின் தடையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
    • காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பாக்கம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை மறுநாள்( 9 -ந் தேதி ) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ராமரெ ட்டிக்குளம், வெள்ளா ழங்கு ப்பம், மிட்டாம ண்டகப்பட்டு, ஆலமரத்து க்குப்பம், வடுக்கு ப்பம் உள்ளிட்ட 10 கிரா மங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
    • வாதானூர், குரான்பாளையம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்கள்

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்ட மங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் குமளம் பீடர் உயரழுத்த மின்பாதையில் பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை 7-ந் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இதனால் பண்ணக்குப்பம், ஆழியூர், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், சேஷாங்கனூர், பி.எஸ்.பாளையம், வாதானூர், குரான்பாளையம், ஆண்டிப்பாளையம், திருமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினி யோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சிவகுரு அறிவித்துள்ளார்.

    • உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது.
    • காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து கெங்கராம்பாளையம் செல்லும் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (2-ந் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    இதனால் ஆழியூர், பள்ளிநேலியனூர், பள்ளிச் சேரி, எல்.ஆர்.பாளையம், கெங்கராம்பாளையம், மல்ராஜன் குப்பம், கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், பள்ளி கொண்டாபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் எம்.சிவகுரு அறிவித்துள்ளார்.

    • சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    கடலூர்:

    சிதம்பரம் 110/33 கி.வோ. துணை மின்நிலையத்தில் நாளை, சனிக்கிழமை முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டிகேட், சி.முட்லூர். கீழ்அனுவம்பட்டு, வக்காரமாரி, மணலுார், வல்ல ம்படுகை, தில்லை நாயகபுரம், கீழமூங்கிலடி பின்னத்தூர், கிள்ளை, பிச்சாவரம், கனகரபட்டு, நடராஜபுரம், கவரப்பட்டு, கே.டி.பாளை, சிவபுரி மாரியப்பாநகர், அண்ணாமலை நகர்,பெராம்பட்டு, கீரப்பாளையம்,எண்ணாநகரம்,கன்னங்குடி,வயலூர், சிலுவைபுரம், மேலமூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.  இத்தகவலை சிதம்பரம் மின் வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது .

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள காரணை பெருச்சானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தினால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம் முகையூர், ஆ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர்,சி.மெய்யூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், பில்ராம்பட்டு, பரனூர், சித்தாமூர், காடகனூர் ஆகிய ஊர்களில் மின்விநியோகம் இருக்காது . இத்தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது.
    • ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி, ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் தியாக துருகம் - திருக்கோவிலூர் சாலையில் உள்ள   குடியி ருப்புகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் அவதி அடைந்தனர். விவசாயிகள், தங்களது பயிருக்கு முறை யாக தண்ணீர் பாய்ச்ச முடி யாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி, ரிஷிவந்தியம் சனிமூலை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ரிஷிவந்தியம் சப்-இன்ஸ்பெக்டர் நந்த கோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மின்தடை குறித்து மின்வாரியத்தில் பேசி நடவடிக்கை எடுப்ப தாக போலீசார், உறுதி யளித்தனர். இதையடுத்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தூக்கமின்றி தவிப்பு.
    • பொதுமக்களின் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.

    தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வபோது மின்வெட்டு ஏற்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு உட்பட்ட உதண்டி, பனையூர், அக்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இதேபோல், நேற்று இரவு 8 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவை கடந்தும் வராததால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

    மின்சாரம் துண்டிக்கப்பட்ட காரணத்தால் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தூக்கமின்றி தவித்து வருகின்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பொதுமக்களின் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

    • திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது.
    • ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் பகுதிகளில் மின்தடை அதிக அளவில் ஏற்படு கிறது. இதனால் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் இரவு 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் ஒரு மணி நேரத்தில் 9 முறை மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுபோன்று திடீர் திடீரென மின்சாரம் நிறுத்தப்படுவதும் பின்னர் மின்வினியோகம் வழங்கப்படுவதால் மின்சாதன பொருட்கள் சேதமடைகிறது. இது தொடர்பாக மின்வாரி யதுறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டால் சரியான தகவல் தெரிவிப்பதில்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 மணி நேரம் தொடர்ந்து மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.

    • செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
    • 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சேர்ந்த கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 16 -ந்தேதி( செவ்வாய்கிழமை )காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பா ளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமா ல்காப்பேரி, நவமால்மருதூர், சேஷங்கனூர், பண்ண க்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, கோ ண்டூர், வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தா ம்பாளையம், குயிலாப்பா ளையம், தாண்ட வமூர்த்திகுப்பம், அம்மண ங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், திருமங்கலம், இரசப்புத்தி ரபாளையம் உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

    கள்ளக்குறிச்சி:

    எறையூர் துணைமின்நிலையத்தில் அவசர பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எறையூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி, அயன்குஞ்சரம். பாளையகுஞ்சரம், கூத்தனூர், நரிப்பாளையம், பெரியகுறுக்கை, வடுகப்பாளையம்,எறையூர், வடகுறும்பூர், எஸ்.மலையனூர், எல்லைகிராமம், கூவாடு, தேன்குணம், நெய்வனை, எதலவாடி மற்றும் பில்ராம்பட்டு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்துறை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    ×