என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மாநகராட்சியில் எந்தப் பணிகளும் நடைபெறுவதில்லை
- தி.மு.க. கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
- சாலை, கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை புகார்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் சாதாரண கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் ரத்தினசாமி, துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தி.மு.க., அதிமுக, பாமக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான திமுக கவுன்சிலர் தங்களது வார்டுகளில் சாலை, கால்வாய், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.
பாதாள சாக்கடை பணிகள் நிறைவடையாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குடிநீர் தொட்டி பம்பு ஆப்ரேட்டர்களுக்கு 3 மாதங்களாக சம்பளம் தராததால் தண்ணீர் விட மறுக்கின்றனர். இதனால் பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருவதாகவும் சரமாரி குற்றச்சாட்டுகள் எழுப்பினர்.
கவுன்சிலர்கள் வைத்த குற்ற சாட்டுகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றி தரப்படும் என மேயர் சுஜாதா, கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் உறுதி அளித்தனர்.






