search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pournami"

    • பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும்.
    • ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50-ன் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பவுர்ணமியில் விரதம் இருந்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம்.
    • 16 பேறுகளும் நம்மை வந்தடையும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு .

    ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. இந்த நாளில் நிலா தன் முழு பிரகாசத்துடன் பரிணமிக்கிறது. இதனால் வானத்தில் எழும் நேர்மறை அதிர்வலைகள் பூமியையும் தொடும். பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். பவுர்ணமி தினத்தில் அம்பிகை வழிபாடு உகந்தது. இந்த நாளில் செய்யப்படும் பூஜையால் அம்பிகையின் பரிபூரணமான அருளைப் பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. பவுர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதால் கூடுதல் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

    வீட்டிற்கு அருகில் இருக்கும் அம்பிகை ஆலயங்களில் நடைபெறும் அபிஷேகம், அன்னதானம், சிறப்பு பூஜைகள், விளக்கு பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். வீடுகளில் அவரவர் குலதெய்வ வழிபாட்டிற்கு பிறகு குங்குமம் அல்லது மஞ்சள் கொண்டு தெய்வ மந்திரங்களை 108 முறை சொல்லி அர்ச்சித்து வழிபாடு செய்யலாம். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறலாம். இதனால் ஆயுள் பலம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம், தனலாபம் கல்வியில் மேன்மை என நினைத்தவரம் கிடைக்கச் செய்வாள்.

    அதே போல் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்ட வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டு வீடுகளில் சத்ய நாராயண பூஜைகளும் செய்வதுண்டு. இந்த பூஜை செய்வதால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். 16 பேறுகளும் நம்மை வந்தடையும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு . பூஜைகள் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யலாம் என்ற போதிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரவல்லது. எல்லா பவுர்ணமிகளுமே சிறப்பு வாய்ந்தவை என்ற போதிலும் நம் வினைகளுக்கும், தேவைகளுக்கும் ஏற்ப குறிப்பிட்ட தினத்தில் வழிபாடு செய்து வர வாழ்வில் மேன்மை அடையலாம்.

    சித்ரா பவுர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றி வழிபட்டால் தானியம் கிடைக்கும்.

    வைகாசி பவுர்ணமியில் விரதமிருந்து விளக்கேற்றினால் திருமணம் கைகூடும்.

    ஆனி பவுர்ணமியில் விளக்கேற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

    ஆடி பவுர்ணமியில் விளக்கேற்றினால் வளமும் நலமும் அதிகரிக்கும்

    ஆவணி பவுர்ணமியில் விளக்கேற்றினால் செல்வம் பெருகும்.

    புரட்டாசி பவுர்ணமியில் விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் நிறையும்.

    ஐப்பசி பவுர்ணமியில் விளக்கேற்றினால் பசிப் பிணிகள் நீங்கும்.

    கார்த்திகை பவுர்ணமியில் விளக்கேற்றினால் புகழ் ஓங்கும்.

    மார்கழி பவுர்ணமியில் விளக்கேற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    தை பவுர்ணமியில் விளக்கேற்றினால் நன்மைகள் அதிகரிக்கும்.

    மாசி பவுர்ணமியில் விளக்கேற்றினால் துன்பங்கள் விலகும்.

    பங்குனி பவுர்ணமியில் விளக்கேற்றினால் தர்மம் செய்த பலன் கிட்டும்.

    இன்றைய தினம் நமது இல்லங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்வோம். இல்லங்களை தெய்வங்கள் குடிகொள்ளும் ஆலயமாக்குவோம். அனைத்து வளங்களும் கிடைக்கப்பெற்று வாழ்வில் வளம் பெறுவோம்.

    • இன்றைய பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
    • திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு தொடங்கி நாளை 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வரும் பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இதனால் வருகிற பவுர்ணமியின் போது திருவண்ணாமலைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • இந்த பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
    • பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு தொடங்கி மறுநாள் 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வரும் பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இதனால் வருகிற பவுர்ணமியின் போது திருவண்ணாமலைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
    • பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த சாப்டூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தின் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஆனி மாத பவுர்ணமி (3-ந்தேதி), நாளை (1-ந்தேதி) சனி பிரதோசத்தை முன்னிட்டு இன்று முதல் 4-ந்தேதி வரை பக்தர்கள் தசரினம் செய்ய வனத்துறை அனுமதி அளித்திருந்தது.

    இன்று காலை மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மலையடிவாரத்தில் திரண்டனர். 7 மணியளவில் பக்தர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள், பெண்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் மலையேறினர்.

    மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். சாமி தரிசனம் செய்ய செல்பவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. 60 வயது மேற்பட்டவர்களுக்கு மலையேற அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.

    அனுமதி நாட்களில் மழை அறிகுறிகள் இருந்தால் மலையேற தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நாளை சனி பிரதோசம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதையொட்டி அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் செய்து வருகின்றனர்.

    • மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.
    • பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷ (1-ந் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப்பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்து உள்ளது.

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு இம்முறை சதுரகிரிக்கு வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிதண்ணீர் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை செய்துள்ளது.

    • துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும்.
    • பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

    பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.

    ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும். ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது (ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பௌர்ணமியில் தேவி 'ஸ்ரீசந்திரிகா' என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும்.

    ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.

    திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஆரஞ்சு நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோசங்கள், பில்லி, சூனியம் தீரும்.

    புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும்.

    வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களிற்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களிற்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

    வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.

    சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும். நவக்கிரக தோசம் நீங்கும். கடன் தீரும். நோயில்லா வாழ்வு கிட்டும்.

    பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோசங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.

    விதியென்ற நமது வாழ்க்கை அமைப்பை மதி என்ற சந்திரனின் துணை கொண்டு நாம் மாற்றலாம். அதாவது 'விதியை மதியால் வெல்லாம்'.

    • பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும்.
    • அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.

    இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது.

    வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.

    பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு பதினெட்டு தடவை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமி பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன லாபத்தை அடைவார்கள்.

    நீண்ட நாட்களாக பிடித்துக் கொண்ட வறுமையிலிருந்து விடுபடுவார்கள். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் செய்து நிவேதிக்கலாம். வசதிக்கும், வாய்ப்புக்கும் ஏற்ப நிவேதனப் பொருளைக் கூட்டிக் கொள்ளலாம்.

    அளவற்ற கீர்த்தியையும் தனத்தையும் தரும் இந்த பவுர்ணமி பூஜையை விடாமல் செய்பவர்களுக்கு சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும்.

    தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின்

    தளர்வுகள் தீர்ந்துவிடும்

    மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்

    மகிழ்வுகள் வந்து விடும்

    சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை

    சிந்தையில் ஏற்றவனே

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான்

    வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்

    வாரியே வழங்கிடுவான்

    தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட

    தானென வந்திடுவான்

    காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்

    காவலாய் வந்திடுவான்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான்

    முழு நில வதனில் முறையடு பூஜைகள்

    முடித்திட அருளிடுவான்

    உழுதவன் விதைப்பான் உடைமைகள் காப்பன்

    உயர்வுறச் செய்திடுவான்

    முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து

    முடியினில் சூடிடுவான்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான்

    நான்மறை ஒதுவார் நடுவினில் இருப்பான்

    நான்முகன் நானென்பான்

    தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்

    தேவைகள் நிறைத்திடுவான்

    வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்

    வாழ்த்திட வாழ்த்திடுவான்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான்

    பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்

    பூரணன் நான் என்பான்

    நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை

    நாணினில் பூட்டிடுவான்

    காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்

    யாவையும் போக்கிடுவான்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான்

    பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்

    பொன் குடம் ஏந்திடுவான்

    கழல்களில் தண்டை கைகளில் மணியணி

    கனகனாய் இருந்திடுவான்

    நிழல் தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும்

    நின்மலன் நானென்பான்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான்

    சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான்

    சத்தொடு சித்தானான்

    புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்

    புண்ணியம் செய்யென்றான்

    பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்

    பசும்பொன் இதுவென்றான்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான்

    ஜெய ஜெய வடுக நாதனே சரணம்

    வந்தருள் செய்திடுவாய்

    ஜெய ஜெய க்ஷேத்திர பாலனே சரணம்

    ஜெயங்களைத் தந்திடுவாய்

    ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா

    செல்வங்கள் தந்திடுவாய்

    தனக்கிலை யீடு யாருமே என்பான்

    தனமழை பெய்திடுவான்

    • ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள்.
    • சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்.

    நிரஞ்சனா சிவலிங்கத்திற்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு இந்த பிறவியில் எண்ணற்ற புண்ணியங்கள் சேர்ந்து, தடைகள் விலகி சிறப்பு பெறுவர்.

    இந்த பிறவியில் மட்டும் அல்லாமல் இனி வரும் பிறவிகளிலும் மாபெரும் இராஜயோக அந்தஸ்தை பெறுவார்கள் – சொர்க்கம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மற்றவர்களின் பசியை போக்க இறைவன் மறைமுகமாக நமக்கு அன்னதானத்தின் மகிமையை உணர்த்துகிறார். அத்துடன் என்றென்றும் நமக்கு உணவு வழங்கிடும் சிவபெருமானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக அரிசி சாதத்தை படைத்து, அந்த அரிசி சாதத்தின் நிறமான வெண்மையை போல், இறைவன் மீது நாம் வைத்திருக்கும் பக்தியும், அன்பும் தூய்மையானது என்பதையும் அன்னாபிஷேகத்தின் மூலமாக இறைவனுக்கு தெரிவிக்கிறோம்.

    ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகத்தில் நாம் சமர்பிக்கும் அரிசி சாதத்தில் நமது பெயரும் இணைந்திருப்பதால், அந்த அபிஷேக அன்னத்தை சாப்பிடும் நமக்கு கோடி புண்ணியங்கள் சேருகிறது. சொர்க்கம்போல அந்தஸ்தான வாழ்க்கை நமது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும். அதனால்தான் சொல்வார்கள், "சோறு கண்ட இடம் சொர்கம்" என்று. அதாவது, சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்." அத்துடன் அந்த அன்னத்தை பிரசாதமாக சாப்பிடுவதற்கு நாம் எத்தனையோ பாக்கியம் செய்திருக்க வேண்டும். வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜிப்பவர்களும், சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது விசேஷம். சிவனுக்கு அன்னபிஷேகம் செய்யும் நாளன்று, சிவலாயத்திற்கு சென்று, சிவபெருமானுக்கு செய்யப்படுகிற அன்னாபிஷேகத்தை கண் குளிர தரிசித்து ஈசனின் அருளை பெற்றிடுவோம்.

    "வேண்டத்தக்கது அறிவோய் நீ

    வேண்ட முழுதும் தருவோய் நீ

    வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ

    வேண்டி என்னைப் பணிகொண்டாய்

    வேண்டி நீயாது அருள் செய்தாய் யானும்

    அதுவே வேண்டின் அல்லால் வேண்டும்

    பரிசொன்று உண்டென்னில்

    அதுவும் உன்தன் விருப்பன்றே"

    • அர்ஜுனனாகிய விஜயன் நாராயணருக்குக் கோவில் கட்டியதால் இவ்வூர் விஜய நாராயணம் என்று பெயர் பெற்றது.
    • கரையில் இருந்த வில்வ மரத்தினடியில் தோன்றிய சிவ லிங்கத்தை சப்த ரிஷிகள் பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.

    திருநெல்வேலியில் உள்ள வடக்கு விஜயநாராயணம் பகுதியில் ஸ்ரீ ஆதிநாராயணசாமி திருக்கோவில், ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவில், ஸ்ரீமனோன்மணீச்வரர் கோவில ஆகிய மூன்று சிறப்பான கோவில்கள் அமைந்துள்ளன.

    ஸ்ரீ ஆதிநாராயணசாமி:

    மகாபாரதப் போரில் வெற்றி பெறுவோமா என்ற தயக்கம் அர்ஜுனனுக்கு ஏற்பட்டபோது, ஸ்ரீவியாசரின் அறிவுரைப்படி இங்கு வந்து தவமிருந்து, ஸ்ரீநாராயணனின் அருள் பெற்று இக்கோவிலைக் கட்டி, 1008 அந்தணர்களைக் குடியமர்த்தி இவ்வூரை உருவாக்கினான். அர்ஜுனனாகிய விஜயன் நாராயணருக்குக் கோவில் கட்டியதால் இவ்வூர் விஜய நாராயணம் என்று பெயர் பெற்றது.

    ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோவில்:

    பிரம்ம தேவர் தாம் பூஜை செய்வதற்காக ஸ்ரீநாராயணரிடம் நேரில் பெற்ற பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார். மிகவும் அழகு மிக்க திருமேனியுடன் அருட்சக்தி மிக்கவராகக் காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீ மனோன்மணீச்வரர் கோவில்:

    திருக்கயிலையில் பார்வதி தேவி உலக நலனுக்காக சிவபெருமானைத் தியானித்து 1008 தேவ தாமரை மலர்களைத் தூவினாள். சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி அம்மலர்களை ஏற்றார். அவ்விடங்கள் 1008 சிவ க்ஷேத்திரங்கள் ஆகின. இதில் மனோன்மணி லிங்கம் தோன்றிய இடம் விஜயநாராயணம் ஆகும். எனவே இத்தலம் மனோன்மணீச்வரம் என அழைக்கப்படுகிறது. இது 1008 சிவ க்ஷேத்திரங்களில் 74-ஆவது க்ஷேத்திரமாகும்.

    இத்திருக்கோவில் இருக்குமிடம் முற்காலத்தில் வில்வ மரங்களும் மருதாணி மரங்களும் நிறைந்த காடாக இருந்தது. இதன் நடுவே ஒரு பொய்கையும் இருந்தது. இதன் கரையில் இருந்த வில்வ மரத்தினடியில் தோன்றிய அந்தச் சிவ லிங்கத்தை சப்த ரிஷிகள் பூஜித்து அருள் பெற்றுச் சென்றனர்.

    "பௌர்ணமி, சிவராத்திரி நாட்களில் இங்கு வந்து வணங்குகிறவர்களுக்கு கயிலையில் அருள்வதுபோல திருவருள் புரிகிறேன்" என்று சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறினாராம். பஞ்ச கயிலாயத்தில் கடைசித் திருக்கோவில் இதுவாகும். சிவராத்திரி அன்று வேடன் முக்தி பெற்ற திருத்தலமும் இதுவே ஆகும். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து வணங்குகின்றனர்.

    பௌர்ணமியன்று க்ஷேத்திர வலம் வந்து மனோன்மனீச்வரரை வணங்கினால் நோய் நொடிகள், கிரக தோஷங்கள் நீங்கி, கல்வி, செல்வம், உயர்ந்த பதவி, புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பெறலாம். இந்தப் பேறுகளை அடைய பௌர்ணமியன்று இக்கோவிலை வலம் வாருங்கள்.

    • சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும் இருப்பார்களாம்.
    • பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.

    திரியவே சதுர்த்தசியில் ஜெனனமானோன்

    தேசத்தில் தீமையது செய்வோனாவான்

    அரியவே பிறர்பொருளை யபகரிப்பான்

    அடுத்தவிட மெங்கையுமே கலகஞ்செய்வான்

    பிரியவே பிறர்களை தூஷணமே செய்வான்

    பேச்சிக்கு முன்னாகக் கோபங்கொள்வான்

    சூரியவே குரோதமது வுடையோனாகி

    குவலயத்தீ லுருப்பதெனக் கூறிடாயே.

    - அகத்தியர்.

    சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும், அடுத்தவர்களிடம் கலகம் செய்பவர்களாகவும், பிறர் மீது அவதூறு செய்பவர்களாகவும், அதிக முன்கோபமுடையவர்களாகவும், குரோத மனமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.

    பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

    கூறவே பௌர்ணமியில் ஜெனனமானோன்

    குணமுளான் புத்தியுள்ளான் பொருமையுள்ளான்

    நேறவே வாக்கதுவும் பிசக மாட்டான்

    நேர்மையுடன் யென்னாளுந் தயாளமுள்ளான்

    அன்றேல் களங்கமது யுற்றோனாகும்

    உக்கிரமுள்ள தெய்வத்தைப் பூசை செய்வான்

    பீறவே மந்திரத்தால் பலரைத்தானும்

    மேதினியில் கெடுப்பனென மகிழுவாயே.

    - அகத்தியர்.

    பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும், பொருமையுள்ளவர்களாகவும், வாக்குப் பிசகாதவர்களாகவும், நேர்மையும் தயாளகுணமும் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இந்த குணநலன்கள் இல்லை என்றால் எதிர்மறையாக களங்கம் கொண்டவர்களாகவும், உக்கிர தெய்வத்தை பூசை செய்பவர்களாகவும், மந்திரத்தால் பலரை கெடுப்பவர்களாக இருப்பார்கள் என்கிறார்.

    இந்த தகவல்கள் இறுதியானவையோ என்றோ அல்லது உறுதியானவையோ என்றோ அறுதியிட்டு கூறிடும் தகுதி எனக்கு இல்லை. எனவே இந்த தகவல்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

    • அண்ணாமலையார் வலம் எல்லா உலகங்களையும் வலம் வருவதற்கு சமமாகும்.
    • ஜீவா சமாதி அடைந்த சித்தர்களின் ஆசிர்வாதமும், குருவின் திருவருளும், இறைவனின் திருவருளும் ஒரே சமயத்தில் ஒருசேரக் கிடைக்கும் நாள் இந்த அமாவாசை தினமாகும்.

    ஞாயிறு கிரிவலம் பலன்கள்:

    ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஞயிற்று கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இன்றும் திருவண்ணாமலையில் மலையை சூரியன் குறுக்காகக் கடக்காமல் வலம் வந்து செல்வதைகாட்டுகின்றனர். சூரியன் மலையை வலம் வருவது உலகில் வேறு எங்கும் காண முடியாத காட்சி இது.

    இந்த ஞாயிறு கிரிவலம் செய்பவர்கள் சிவலோகமாம் திருக்கயிலாயத்தில் தேவர்களாய் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்களாம். ஞாயிறு கிரிவலம் செய்தால் குடும்பப் பிரச்சனை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வலி பிறக்குமாம்.

    திங்கள் கிரிவலம் பலன்கள்:

    திங்கட்கிழமை கிரிவலம் செய்யும் மானுடர்கள் ஏழுலோகத்தையும் ஆண்டு சிவஸ்வரூபத்தை அடைவர் என்று சொல்லப்படுகிறது. திங்கட்கிழமை கிரிவலத்தால் திருமணத்தடை அகலும் என்று நம்பப்படுகிறது. திங்கள் பௌர்ணமியில் திருவண்ணாமலையை வலம் வந்துதான் பிரம்ம சரஸ்வதி தேவியை மனம் செய்து கொண்டாராம். அதனால் அன்றைய

    தினம் கிரிவலம் செய்யின் எத்தகைய திருமணத்தடையும் அகன்று விடுமாம். திங்கட்கிழமை காலை 5.30 மணி முதல் 7.30 மணிக்குள்ளாக, அதாவது ராகு காலத்திற்கு முன் கிரிவலம் துவங்கி இடையில் ஏதேனும் ஒரு அம்மன் சந்நிதியில் ஏழைக் கன்னி பெண்களுக்கு பூச்சரம், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வளையல், வஸ்திரம் முதலான மங்களப் பொருட்களை தாம்பூலத்துடன் தானமாகக் கொடுக்கத் திருமணத் தடை நீங்குமாம்.

    திங்களும் பௌர்ணமியும் சேரும் தினத்தன்று நீதித்துறையில் உள்ளவர்கள் கிரிவலம் வந்தால் அவர்கட்கு வாக்கு வன்மையும் வழக்கு வெற்றியும் ஏற்படுமாம். தொடர்ந்து நீதிமன்ற படிக்கட்டுகளை மிதித்து அல்லலுறும் அன்பர்களுக்கும் நெடுநாளாய்த் தீர்வு காணப்படாமல் இருக்கும் வழக்குகள் நல்ல முறையில் தீர்வு ஏற்படுமாம்.

    செவ்வாய் கிரிவலம் பலன்கள்:

    செவ்வாய்க் கிழமைகளில் கிரிவலம் செய்வோமானால் கடன் தொல்லையும், வறுமையும் நீங்கி வளமான வாழ்க்கை நிலையைப் பெறலாம். விசாக நட்சத்திரம் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அண்ணாமலையைக் கிரிவலம் வந்தால் அண்ணாமலையார் தரிசனம் நிச்சயம் என்று கூறப்படுகிறது.

    செவ்வாய் கிரிவலத்தால் உத்தியோகம் நிமித்தமாய் ஏற்படும் பொறாமை, கலகம், அவமானம், பகையுணர்ச்சி ஆகியவைகள் நீங்கி உத்தியோக உயர்வு, இடமாற்றம், துன்பங்களில் இருந்து விடுதலை ஆகியவைகளைப் பெறுவார்களாம்

    புதன் கிரிவலம் பலன்கள்:

    புதன் கிழமையன்று கிரிவலம் செய்வருக்கு ஸ்ரீ பூத நாராயணப் பெருமாளே ஏதேனும் ஒரு வடிவில் துணை வந்து கிரிவலம் முழுவதும் வழிக்காட்டி செல்வாராம். இன்றைய கிரிவலத்தால் கலைகளெல்லாம் கசடற கற்கும் திறன் பெறுவார்களாம்.

    நியாயமான உத்தியோக உயர்வும் , தொழில் திறமையும் ஏற்படும். வாராக் கடனும் வசூலாகும். பெண்களுக்கு தீர்க்க சுமங்கலித்துவமும் சந்தான பாக்கியமும் இந்த புதன் கிரிவலத்தால் கிட்டும் என்று கூறப்படுகிறது.

    வியாழன் கிரிவலம் பலன்கள்:

    குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள். அன்றைய தின கிரிவலத்தின் போது தட்சிணாமூர்த்தி சுவாமிகள் யாரேனும் ஒரு குருவின் வடிவிலே வெளிப்பட்டுக் காட்சி தருவாராம். இந்த குரு தரிசனமானது மயான பூமிகளைக் கண்டால் ஏற்படும் பயத்தைப் போக்குமாம். இறந்தவர்களுக்கான இறுதி மரியாதையை செலுத்தத் தவரியவர்களுக்குப் பிராயச்சித்த கிரிவலம் இதுவே ஆகும்.

    வியாழன் கிரிவலத்தால் சகலவித திருமணத் தோஷங்களும் நீங்குவதுடனும், அவர்கள் அடுத்த பிறவியில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் குருவாக விளங்கும் சிறப்பைப் பெறுவார்களாம்.

    வெள்ளி கிரிவலம் பலன்கள்:

    ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு அளப்பரிய செல்வங்களை வழங்க வேண்டும் என்று திருமகளை வற்புறுத்தினார்களாம். ஆனால், திருமகளே அவர்களது பேராசைக்கு இணங்காமல் அவர்களிடம் இருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்து தைல எண்ணையில் தீபமாய் உறைந்து தீபமாக கிரிவலம் வந்தநாள் வெள்ளிக்கிழமை அதனால் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் இல்லறபெண்களுக்கு லக்ஷ்மி கடாட்சமும், இல்ல இன்பமும், அமைதியும் மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

    எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம் ஏவல் முதலான துன்பங்களை அகற்றி மனக்கோளாறுகளை

    நீக்கவல்லது இந்த வெள்ளி கிரிவலம்.

    சனி கிரிவலம் பலன்கள்:

    சனிக் கிழமை கிரிவலம் செய்பவர்களுக்கு நவக்கோள்களும் பதினொன்றாம் இடத்தில் இருந்து கொண்டு அதற்கான சிறப்புப் பலன்களை கொடுப்பார்கள்.

    இந்த சனி கிரிவலம் கண், காது, சுவாச வியாதிகள் ஆகியவற்றால் அவமதிப்படுவோருக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்க வல்லது. நரம்பு வியாதிகள், பக்கவாத வியாதிகள் ஆகியவற்றால் பாதிக்கபட்டவர்கள் இந்த கிரிவலத்தால் பயன்பெறலாம். இன்றிய தினம் கிரிவலப் பாதையில் எமலிங்க தரிசனம் செய்வதால் தீராத நோய்களும் தீர்ந்து மரண பயம் நீங்குமாம்.

    இவை மட்டுமன்றி, சிவராத்திரியிலும், வருடப்பிறப்பன்றும், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களிலும் இந்த திரு அண்ணாமலையை வலம் வருபவர்கள் மேலே கூறப்பட்ட நன்மைகளைவிட மிக அதிகமான பலன்களை அடைவார்களாம்.

    நாள்தோறும் கிரிவலம் வருபவருக்குக் கிடைக்கும் நன்மைகளை இங்கு பட்டியலிட முடியாது என்று அருணாசலபுராணம் கூறும்

    அமாவாசை கிரிவலம்:

    அமாவாசை என்பது பூமியில் நிலவு தென்படாத நாளென்றாலும் அதனுடைய ஆகர்ஷன சக்தியால் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நாளாகையால் இந்த அமாவாசை கிரிவலம் சிறப்பானதாகக் கூறப்படுகிறது

    ஜீவா சமாதி அடைந்த சித்தர்களின் ஆசிர்வாதமும், குருவின் திருவருளும், இறைவனின் திருவருளும் ஒரே சமயத்தில் ஒருசேரக் கிடைக்கும் நாள் இந்த அமாவாசை தினமாகும்.

    அமுதம் பெரும் பொருட்டு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய அதனில் எழுந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு இறைவனாகிய சிவா பெருமான் அரை மயக்கத்தில் இருந்தபோது உலகத்து ஞானிகளும், சித்தர்களும் அமரலோகத்து தேவர்களும் இறைவனாகிய சிவபெருமானைக் காண்பதற்கு கயிலாயத்தில் ஒன்றாகக் கூடிய அபூர்வமான நாள் இந்த அமாவாசை தினம்.

    இந்த அமாவாசை தினத்தில் தான் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒரு சில நிமிடங்கள் இணைந்து பிரியுமாம். அந்த சில நிமிடங்கள் புனித நிமிடங்களாகக் கருதப்படுகிறது. இதனை தெய்வ ரகசியம் என்று கூறுகிறார்கள்

    இப்படிப்பட்ட அற்புதமான அமாவாசை தினத்தன்று கிரிவலம் வரும்போது தேவர்களும்,சித்தர்களும், ஞானியர்களும் என்று அனைத்து தரப்பினரது ஆசிகளும் நமக்கு மானசீகமாகக் கிடைப்பதால் அமாவாசை கிரிவலம் மிகச் சிறப்பானது என்று கூறப்படுகிறது.

    எந்தெந்த மலைகளிளெல்லாம் சிவலிங்கம் இருக்கிறதோ அங்கெல்லாம் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை செய்தால் ஆயுள் விருத்தியும், ஐஸ்வர்ய விருத்தியும் ஏற்படையுமாம்.

    பௌர்ணமி கிரிவலம்:

    பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வருபவர்களுக்கு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இறைவன் அன்றைய தினம் சந்திரன் கதிர்கள் வாயிலாக உலகத்து உயிர்களுக்கெல்லாம் தமதருளை வழங்கிக் கொண்டிருப்பதால் அன்றைய கிரிவலம் சிறப்பு மிக்கது என்று கூறப்படுகிறது. சந்திரனில் பதினாறு பூரண கலைகளும் திருஅண்ணாமலைத் திருமேனியில் பட்டுப் பிரகாசித்துப் பிரதிபலித்து கிரிவலம் சிறப்பு மிக்கதாகக்

    கருதப்படுகிறது.

    பௌர்ணமி கிரிவலத்திற்கு புராண காலத்தில் கதைகளும் கூறபடுகின்றது.யார் ஒருவர் பௌர்ணமியன்று

    அருணாசலத்தில் கிரிவலம் வருகிறார்களோ அவர்களுக்கு திருவண்ணாமலைத் திருமேனியில் பிரகாசிக்கும் நிலவின் 16 கலைகளும் பராசக்தியின் 64 கலைகளும் 27 நட்சத்திர தேவியரின் பிரகாசமும் அருட்செல்வமும் கிடைக்கும் என்று

    கூறப்படுகிறது.

    பௌர்ணமியன்று கிரிவலம் வருபவர்களுக்கு பதினென் சித்தர்களின் ஆசியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அருணாச்சலத்தை தவிர, வேறு தலமில்லை, அருணனை தவிர வேறு தெய்வமும் இல்லை.

    அருணையின் கிரிப்ரட்சணம் மற்ற தவத்தைக் காட்டிலும் மிக மேலானது.

    அண்ணாமலையார் வலம் எல்லா உலகங்களையும் வலம் வருவதற்கு சமமாகும்

    ×