search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chaturdashi"

    • சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும் இருப்பார்களாம்.
    • பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.

    திரியவே சதுர்த்தசியில் ஜெனனமானோன்

    தேசத்தில் தீமையது செய்வோனாவான்

    அரியவே பிறர்பொருளை யபகரிப்பான்

    அடுத்தவிட மெங்கையுமே கலகஞ்செய்வான்

    பிரியவே பிறர்களை தூஷணமே செய்வான்

    பேச்சிக்கு முன்னாகக் கோபங்கொள்வான்

    சூரியவே குரோதமது வுடையோனாகி

    குவலயத்தீ லுருப்பதெனக் கூறிடாயே.

    - அகத்தியர்.

    சதுர்த்தசி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்களாகவும், பிறருடைய பொருளை அபகரிப்பவர்களாகவும், அடுத்தவர்களிடம் கலகம் செய்பவர்களாகவும், பிறர் மீது அவதூறு செய்பவர்களாகவும், அதிக முன்கோபமுடையவர்களாகவும், குரோத மனமுடையவர்களாகவும் இருப்பார்களாம்.

    பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கான பலன்கள்...

    கூறவே பௌர்ணமியில் ஜெனனமானோன்

    குணமுளான் புத்தியுள்ளான் பொருமையுள்ளான்

    நேறவே வாக்கதுவும் பிசக மாட்டான்

    நேர்மையுடன் யென்னாளுந் தயாளமுள்ளான்

    அன்றேல் களங்கமது யுற்றோனாகும்

    உக்கிரமுள்ள தெய்வத்தைப் பூசை செய்வான்

    பீறவே மந்திரத்தால் பலரைத்தானும்

    மேதினியில் கெடுப்பனென மகிழுவாயே.

    - அகத்தியர்.

    பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமுள்ளவர்களாகவும், புத்தியுள்ளவர்களாகவும், பொருமையுள்ளவர்களாகவும், வாக்குப் பிசகாதவர்களாகவும், நேர்மையும் தயாளகுணமும் கொண்டவர்களாகவும் இருப்பார்களாம். இந்த குணநலன்கள் இல்லை என்றால் எதிர்மறையாக களங்கம் கொண்டவர்களாகவும், உக்கிர தெய்வத்தை பூசை செய்பவர்களாகவும், மந்திரத்தால் பலரை கெடுப்பவர்களாக இருப்பார்கள் என்கிறார்.

    இந்த தகவல்கள் இறுதியானவையோ என்றோ அல்லது உறுதியானவையோ என்றோ அறுதியிட்டு கூறிடும் தகுதி எனக்கு இல்லை. எனவே இந்த தகவல்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.

    ×