search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "picketing"

    • குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் 3-வது வார்டான கல்லாங்குத்து பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான சாலை வசதி இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கல்லாங்குத்து பகுதியில் சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    குடி தண்ணீருக்காக அவர்கள் நீண்டதூரம் செல்ல வேண்டி யிருந்தது. குடிநீர் பிரச்சி னையை சரிசெய்ய அதிகாரி களிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இதை கண்டித்தும், குடிநீர், சாலை வசதியை செய்து தரக்கோரி இன்று அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர், வார்டு கவுன்சிலர் முத்துகுமார் தலைமையில் தேனூர் பஸ் நிறுத்தம் முன்பு திரண்டர். அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சோழவந்தான்- தேனூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    மறியல் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது.
    • இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே செல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, சீரமை க்காமல் உள்ளது. இந்த சாலையை, உடனே சீரமைக்க வலியுறுத்தி, புதுச்சேரி அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.க்களிடம், கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது, அந்த சாலை மிகவும் மோசமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளதால், அரசின் அலட்சியப்போக்கை கண்டித்து, கிராம மக்கள் காரைக்கால்-கும்பகோணம் செல்லும் பிரதான தேசிய நெடு ஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம், திருநள்ளாறு, அம்பகரத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிராம மக்கள் ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கும் பணியினை தொடங்க வேண்டும். இல்லையேல், மீண்டும் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால், காரைக்கால்-கும்பகோணம் வழியே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்ப ட்டது.

    • இந்த ரெயில்வே கேட் வழியாக உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். தினமும் அந்த வழியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
    • இந்த ரெயில்வே கேட் தினமும் 15-க்கும் அதிகமான முறை மூடப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூரை அடுத்த வேங்காம்பட்டி பகுதியில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது.

    200 கிராமங்கள்

    இந்த ரெயில்வே கேட் வழியாக வேங்காம்பட்டி, வாழ குட்டைப்பட்டி, ஏரியூர், செவந்தாம்பட்டி, பாலம்பட்டி, நெ. 3 குமாரபாளையம், கரட்டுப்பாளையம், ஆலாம்பாளையம், பொன்பரப்பிபட்டி, மின்னக்கல், மூக்குத்தி பாளையம் உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். தினமும் அந்த வழியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த ரெயில்வே கேட் தினமும் 15-க்கும் அதிகமான முறை மூடப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக பணிகளுக்கு செல்வோர், விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர், ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த பகுதியில் நீண்ட காலமாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மல்லூர் பேரூராட்சியில தீர்மானம் நிறைவேற்றியும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    போராட்டம்

    இதனை கண்டித்து வருகிற 23-ந் தேதி சுற்று வட்டார கிராம மக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை அய்யனார் தலைமையில் வேங்காம்பட்டி ரெயில்வே கேட் அருகே ரெயில் மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. 

    • அனுமதி இல்லாமல் இங்கு விளம்பர போர்டு வைக்க கூடாது.
    • இதில் கோபம் கொண்ட அவர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு விதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திராவ் இவருடைய மகன் கார்த்திக்ராவ்(23).இவர் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார் .

    இவர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக காம்பவுண்ட் அருகே இந்து மக்கள் முன்னனி ஆட்டோ ஸ்டால் என புதிய ஒரு பிளக்ஸ் போர்டை மாநகராட்சி அனுமதி இல்லாமல் வைத்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஊழியர் ரஞ்சித் குமார் அனுமதி இல்லாமல் இங்கு விளம்பர போர்டு வைக்க கூடாது என கார்த்திக்ராவிடம் கூறியுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கார்திக்ராவிடம் பிளக்ஸ் போர்டை கழட்டுமாறு கூறியுள்ளனர் .

    இதில் கோபம் கொண்ட கார்த்திக்ராவ் திடீரெனசாலை மறியலில் ஈடுபட்டார் இது குறித்து ஊழியர் ரஞ்சித்குமார் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் கார்த்திக்ராவ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிைறயில் அடைத்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்சங்கங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காமராஜர் சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தன், ஆட்டோ தொழிற்சங்க செல்வம் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி முன்னிலை வகித்தனர். 240 நாட்கள் நிறைவடைந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், கட்டிட தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆட்டோ,லோடு வேன்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம், ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்சங்கங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காமராஜர் சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தன், ஆட்டோ தொழிற்சங்க செல்வம் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி முன்னிலை வகித்தனர். 240 நாட்கள் நிறைவடைந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், கட்டிட தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆட்டோ,லோடு வேன்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம், ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஆடுதுறை வாய்க்காலில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
    • கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள உள்ளிக்கடை ஊராட்சி, விசித்திரராஜபுரம் கிராமத்தில் காலனி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. நீண்ட நாட்களாக சீர் செய்ய கோரியும், இந்த சாலையை சீரமைக்க யாரும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை உடன் சீர் செய்ய வேண்டும் எனவும், சாலையில் மேற்புறம் உள்ள ஆடுதுறை வாய்க்காலில் தடுப்புச் சுவர் அமைத்திட வேண்டும் எனவும் இதற்கான நிதியை கூடுதலாக ஒதுக்ககோரி அந்த பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம வாசிகள் கும்பகோணம்- திருவையாறு நெடுஞ்சாலையில் விசித்திர ராஜபுரம் கிராமத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சிவகுமார், சுதா, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர், விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சு வார்த்தையில் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
    • கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும், அரசு வெளியிட்டுள்ள அரசாணை 152-ன்படி சுகாதார பணியாளர்களை அரசு தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி மாவட்டத்தில் திருப்பூர் மாநகரம், அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    கவர்னரின் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. யின் சார்பில் 500 தொழிலாளர்கள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நாட்டாமங்கலம் கூட்டுரோட்டில திரண்டனர்.
    • இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.

    விழுப்பபுரம்:

    செஞ்சி அருகே உள்ள வல்லம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக சுமார் 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் நாட்டா மங்கலம் கூட்டு ரோட்டில திரண் டனர். அங்கு ஆர்ப்பாட்டத்திற்காக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் அ.தி.மு.க.பிரமுகர்கள் பேசிக்கொண்டு இருந்தனர் .அப்போது நாட்டாமங்கலம் கூட்டு ரோட்டிற்கு வந்த தி.மு.க.வினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்டதற்கு இனிப்பு வழங்க முற்பட்டனர்.

    அவர்கள் அ.தி.மு.க.வினர்ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த இடத்தில் பட்டாசு வெடித்ததுடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த இடத்தை கடந்து சென்று பஸ் நிலையத்தில் இனிப்பு வழங்கினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது. நாங்கள் ஏற்கனவே அனுமதி பெற்று ஆர்ப்பா ட்டம் செய்யும் இடத்தில் தி.மு.க.வினருக்கு எப்படி அனுமதி வழங்கலாம் என போலீசாரை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

     கடலூர்:

    கடலூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் வி.சி‌.க சார்பில் 60 அடி கொடிக்கம்பம் அமைத்து கொடியேற்று விழா துணை மேயர் தாமரைச்செல்வன் ஏற்பாட்டின் பேரில் விசிக தலைவர் திருமாவளவன் கொடி ஏற்ற இருந்தார். அந்த பகுதியில் வி.சி.க. கொடியேற்ற விழாவிற்கு பா,ம,க, மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து விசிக கொடியேற்றி விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் பாமக மற்றும் விசிகவினரிடையே இரண்டு முறை சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக வினர்கள் கட்சிக்கொடி ஏற்றுவதற்கு வருவாய் துறை மற்றும் போலீசார் அனுமதி அளித்தனர். இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரை ச்செல்வன் தலைமையில் 60 அடி உயரத்தில் கட்சி கொடியேற்று விழா இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றுவதற்கு வருகை தர இருந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடி கம்பம் வைப்பதால் அருகாமையில் உள்ள அதிக திறன் கொண்ட மின் பாதை செல்வதால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வி.சி.க கொடிக்கம்பம் வைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமக மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் புதுவை மாநில அமைப்பாளர் கணபதி, முன்னாள் மாநில துணை பொது செயலாளர் தாமரைக்கண்ணன், மாணவரணி கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் அங்கிருந்து அவர்கள் கலந்து சென்றனர். இதனை தொடர்ந்து கொடி ஏற்றுவதற்கு பா.ம.க வினய் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகவும், பதற்ற மாகவும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், கொடியேற்று விழா நடைபெறுவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக கொடியேற்று விழாவை தள்ளி வைக்குமாறு அறிவுறுத்தினர்‌. அதன்படி நீண்ட நேரம் பேச்சு வார்த்தையில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் போலீ சாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கொடி க்கம்பம் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் துணை மேயர் தாமரைச்செல்வன், அங்கு தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.

    பா.ம.க - வி.சி.க வினர் மறியல் போராட்டம்

    நள்ளிரவில் வி.சி.க வினர் கட்சி கொடி ஏற்றியதால் பதட்டம்- போலீஸ் குவிப்புஇதில் கொடியேற்று விழா நடைபெறுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருப்பதாக போலீசார் தற்காலிகமாக கொடியேற்றி விழாவை தள்ளி வைக்க வேண்டும். மேலும் கொடியேற்றுவதற்கு அனுமதி வழங்கி உள்ளதால் போராட்டத்தை கலைக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அமைக்கப்பட்ட 60 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்ற வேண்டும் என திட்டவட்டமாக தெரிவி த்தனர். இதன் காரணமாக தாமரைச்செல்வன் நள்ளிரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்றினார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் போலீசார் அவர்களை அவசர அவசரமாக அங்கிருந்து உடனடியாக கலைந்து செல்லுமாறு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். மேலும் திடீரென்று கட்சி கொடி ஏற்றியதால் மேலும் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது‌. இதன் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டு வருகின்றது. 

    • சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அடுத்த செம்மண் திட்டு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அங்குள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதை அடுத்து அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு செம்மண் திட்டு பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று காலை 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சாலையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் இன்று காலை இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • மதுரையில் கழிவு நீரை அகற்ற கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பெரிய கண்மாய்கள் நிரம்பி, மறுகால் பாய்ந்தன.

    கூடல் புதூர் ஆபீசர்ஸ் டவுன், குலமங்கலம் மெயின் ரோடு மற்றும் மீனாம்பாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அவை வெளியேறி செல்வதற்கான கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. அதனை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை. அங்கு தண்ணீர் தொடர்ந்து தேங்கி நிற்கிறது.

    இதன் காரணமாக அங்கு வசிக்கும் பொது மக்கள் கொசு தொல்லை உள்பட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர்.

    இதை கண்டித்து 4-வது வார்டு, கனகவேல் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று காலை குலமங்கலம் மெயின் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கோஷம் எழுப்பினர்.

    மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    ×