search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ordinance"

    உடனடி முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #SupremeCourt
    புதுடெல்லி:

    இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன்களிலும், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்றவற்றிலும் முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர்.

    இதனை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால் அவசர சட்டம் மூலம் உடனடி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை பெற்றது.



    இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமிய்யத் உல் உலமா என்ற இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

    முன்னதாக, மும்பையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மசூத் அன்சாரி உள்ளிட்ட 3 பேர் இணைந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #SupremeCourt
    உடனடி முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #MumbaiHC
    மும்பை:

    இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. செல்போன்களிலும், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் போன்றவற்றிலும் முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர்.

    இதனை தடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால் அவசர சட்டம் மூலம் உடனடி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான ஒப்புதலை பெற்றது.

    இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கவுன்சிலர் மசூத் அன்சாரி, அரசு சாரா அமைப்பான ரைசிங் வாய்ஸ் பவுண்டேசன் மற்றும் ஒரு வழக்கறிஞர் இணைந்து இந்த மனுவை அளித்துள்ளனர்.

    இந்த மனுவில், இஸ்லாமிய ஆண்களின் அடிப்படை உரிமைகள் இந்த சட்டத்தின் மூலம் மறுக்கப்படுவதால் உடனடி முத்தலாக் தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த மனு வருகிற 28-ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #TripleTalaqBill #TripleTalaqOrdinace #MumbaiHC
    முத்தலாக் பிரச்சனைக்கு அவசர சட்டம் கொண்டு வந்தது போல ராமர் கோவில் கட்டவும் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது. #BJP #ShivSena
    மும்பை:

    முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்ய வகை செய்யும் முத்தலாக் நடைமுறைக்கு எதிரான அவசர சட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்தது. இவ்விவகாரத்தை குறிப்பிட்டு சிவசேனா, முத்தலாக் விவகாரத்தை போல ராமர் கோவிலை கட்டவும் அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    சிவசேனா அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், முஸ்லிம் பெண்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. இதற்காக முத்தலாக் நடைமுறைக்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் திருமணமான முஸ்லிம் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதை சிவசேனா வரவேற்கிறது. ஆனால், மத்திய அரசு இந்த ஒரு நடவடிக்கையுடன் நின்று விடக்கூடாது. இதே வேகத்தை அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதிலும் காட்ட வேண்டும். இதற்காகவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். 

    என குறிப்பிடப்பட்டுள்ளது. 
    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதில் வீடு வாங்குகிறவர்களுக்கு நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்து உள்ளது. #UnionCabinet #Bankruptcy
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்து உள்ளது என்று கூறினார்.

    “திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு 14 உறுப்பினர்களை கொண்ட திவால் சட்ட குழு பரிந்துரைகள் செய்து உள்ளது. அதன் அடிப்படையில், வீடுகள் வாங்குவோருக்கான நிவாரண அம்சங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு ரவிசங்கர் பிரசாத், “இது ஒரு புதிய சட்டம். நான் எல்லாவற்றையும் இங்கு சொல்லி விட முடியாது. அரசியல் சாசன மரபு என்று ஒன்று இருக்கிறது. அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிற வரையில், அதன் விவரங்கள் குறித்து நான் பேச முடியாது” என பதில் அளித்தார்.

    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு கார்ப்பரேட் விவகாரங்கள் துறை செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் தலைமையிலான குழு செய்த பரிந்துரையில், வீடு வாங்குகிறவர்களை பாதுகாக்கிற விதத்தில் சில புதிய விதிகளை சேர்க்குமாறு கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

    குறிப்பாக, வீடு வாங்குபவர்கள் நிதி கடன் வழங்குபவர்களாக கருதப்பட வேண்டும், அப்படி கருதப்படுகிறபோது, அவர்கள் திவால் தீர்மான செயல்முறையில் பங்கேற்க அனுமதி கிடைக்கும்.

    இந்த பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததா என்பது தெரியவில்லை.

    மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரை செய்தது. அதுவும் என்னவாயிற்று என்பது தெரியவரவில்லை.

    பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

    * உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு டென்மார்க் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டு உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

    * நாட்டின் முதலாவது தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

    * மரபுசாரா எரிசக்தி துறையில், ஒத்துழைப்பதற்காக பிரான்ஸ், மொராக்கோ நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * பணியாளர் மேலாண்மை, பொது நிர்வாக துறைகளில் ஒத்துழைப்பதற்கு சிங்கப்பூருடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. 
    ×