search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Zealand"

    நியூசிலாந்து மசூதிகளில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகள், தங்கள் நாட்டின் பாரம்பரிய நடனத்தின் மூலம் அஞ்சலி செலுத்தினர். #MosqueShooting #NewZealandShooting #JesindaAndern
    வெலிங்டன்:

    நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். அமைதி பூங்காவான நியூசிலாந்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த நிலையில் கிறைஸ்ட்சர்ச் நகரை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், தங்கள் நாட்டின் பாரம்பரிய நடனத்தின் மூலம் துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.



    பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், தாக்குதல் நடந்த மசூதிகள் அருகே, ‘ஹக்கா’ எனப்படும் பாரம்பரிய நடனத்தை உணர்ச்சி பெருக்குடன் ஆடி தங்களின் வேதனை மற்றும் இரங்கலை வெளிப்படுத் தினர்.

    பயங்கரவாத்துக்கு எதிரான பாடல் வரிகளுக்கு மாணவ- மாணவிகள் பலர் கண்ணீர் சிந்தியபடியும், ஆக்ரோஷமாகவும் நடனமாடினர். #MosqueShooting #NewZealandShooting #JesindaAndern
    நியூசிலாந்தில் 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் வங்காளதேச வீரர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தமிம்இக்பால் தெரிவித்துள்ளார். #NZMosqueAttack #tamimiqbal

    கிறிஸ்ட்சர்ச்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குவதாக இருந்தது.

    இந்த நிலையில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட இந்த சம்பவத்தில் 49 பேர் பலியானார்கள். தொழுகைக்காக திரண்டு இருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடந்தது. வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தொழுகைக்காக அந்த மசூதிக்கு சென்றனர். நல்ல வேளையாக அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். இதை தொடர்ந்து 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து வங்காளதேச பேட்ஸ்மேன் தமிம் இக்பால் கூறியதாவது:-

    இந்த சம்பவத்தில் வங்காள தேச வீரர்கள் அனைவருமே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். என்னால் இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. நாங்கள் அனைவரும் தற்போது ஓட்டலில் நலமாக உள்ளோம்.


    சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம்தான் நாங்கள் இருந்தோம். இது ஒரு மோசமான பயங்கரம் நிறைந்த அனுபவம் ஆகும். எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #NZMosqueAttack #tamimiqbal

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதைத் தொடர்ந்து அந்த அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #NewZealandMosqueAttack #BangladeshCricketTeam
    கிறிஸ்ட்சர்ச்:

    வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இரு அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

    இந்நிலையில், இன்று தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு சென்றனர். அப்போது மசூதிக்குள் ஒரு மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், கிரிக்கெட் வீரர்களை அதிகாரிகள் அவசரம் அவசரமாக வெளியே அழைத்து வந்தனர். வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, மைதானத்தை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்குச் சென்றனர்.

    வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அணியின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். இருப்பினும், இந்த சம்பவத்தால் வீரர்கள் மனதளவில் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார். வீரர்கள் யாரும் ஓட்டலை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    மசூதிக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே, நாளை நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்வதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நியூசிலாந்து சுற்றுப்பயணமும் முடிவுக்கு வந்துள்ளது. #NewZealandMosqueAttack #BangladeshCricketTeam
    வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvsBAN
    வெலிங்டன்:

    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 211 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. டெய்லர் இரட்டை சதமும், நிக்கோலஸ் செஞ்சுரியும் (107 ரன்) அடித்தனர்.

    221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்து இருந்தது.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 61 ஓவர்களில் 211 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் மகமதுல்லா அதிகபட்சமாக 67 ரன் எடுத்தார். வாக்னர் 5 விக்கெட்டும், பவுல்ட் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை வென்றது. அந்த அணி முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்னில் வென்று இருந்தது. ஏற்கனவே ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 16-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. #NZvsBAN
    வங்காளதேசம் அணிக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியில் ரோஸ் டெய்லரின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 432 ரன்கள் குவித்தது. #BANvsNZ #RossTaylor

    வெலிங்டன்:

    நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

    முதல் 2 நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 211 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

    முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவர் 212 பந்துகளில் 200 ரன் குவித்தார். அவரது 3-வது இரட்டை சதமாகும். நிக்கோலஸ் சதம் அடித்தார். அவர் 107 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 74 ரன்னும் எடுத்தனர்.

    221 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காள தேசம் அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 80 ரன்னில் 3 விக்கெட் இழந்தது. #BANvsNZ

    நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. #NZvBAN
    வங்காள தேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் ஒரு நாள் தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 டெஸ்ட் தொடரில் ஹேமில்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்னில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழையில் ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இதே போல இன்றைய 2-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் நாளைய ஆட்டம் 30 நிமிடம் முன்னதாக தொடங்கும். #NZvBAN
    வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியதன் மூலம், நான்காவது முறையாக வங்காளதேசம் அணி வாஷ் அவுட் ஆகி உள்ளது. #NZvBAN
    டுனிடின்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டத்தில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்தது.

    முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் 69 ரன்னும், நிக்கோலஸ் 64 ரன்னும், தற்காலிக கேப்டன் டாம் லாதம் 59 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய வங்காளதேச அணி 61 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது. சபிர் ரஹ்மான் மட்டும் நிலைத்து ஆடி 102 (12பவுண்டரி, 2 சிக்சர்) ரன்கள் குவித்தார். ஆனால், அந்த அணி 47.2 ஓவரில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து வென்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதன்மூலம் நியூசிலாந்து மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் வங்காளதேச அணி 3-0 என்ற கணக்கில் 4வது முறையாக வாஷ்அவுட் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2007, 2010, 2016ம் ஆண்டுகளில் இதேபோன்ற படுதோல்வியை சந்தித்தது. #NZvBAN
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 233 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. #NZvBAN
    நேப்பியர்:

    வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. முகமது மிதுன் அதிகபட்சமாக 62 ரன்னும், முகமது சைபுதீன் 41 ரன்னும் எடுத்தனர். போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும் பெர்குசன், ஹென்றி தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். 233 ரன் இலக்குடன் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது. #NZvBAN
    ஆக்லாந்தில் நேற்று நடந்த 2-வது 20-வது ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலுக்கு வழங்கப்பட்ட எல்.பி.டபிள்யூ. அவுட் சர்ச்சையை கிளப்பியுள்ளது. #Mitchell #NZvIND
    ஆட்டத்தின் 6-வது ஓவரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்டயாவின் பந்து வீச்சை, டேரில் மிட்செல் (1 ரன்) எதிர்கொண்ட போது பந்து அவரது காலுறையில் பட்டது. இந்திய வீரர்கள் அவுட் கேட்டு குரல் எழுப்பியதும், நடுவர் கிறிஸ் பிரவுன் (நியூசிலாந்து நாட்டவர்) விரலை உயர்த்தினார். ஆனால் பந்து பேட்டில் பட்டது என்று உறுதியாக நம்பிய டேரில் மிட்செல், டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தார். இதையடுத்து ரீப்ளேயில், ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் பந்து பேட்டின் விளிம்பில் உரசியதற்கான அடையாளம் தெரிந்தது. ஆனால் ‘ஸ்னிக்கோ’ மீட்டரில் பந்து பேட்டில் பட்டதற்கான அதிர்வு தென்படவில்லை. அதே சமயம் இந்த பந்து அவரது காலுறையில் படாமல் இருந்திருந்தால் ஸ்டம்பை தாக்கியிருக்கும் என்பதும் காட்டப்பட்டது.

    இதனால் குழம்பி போன 3-வது நடுவர் ஷான் ஹாக் (நியூசிலாந்து), டேரில் மிட்செல் அவுட் என்று தீர்ப்பு அளித்தார். தனக்கு எதிராக தீர்ப்பு வந்ததும் டேரில் மிட்செலும், எதிர்முனையில் நின்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவர்கள் கள நடுவர்களிடம் முறையிட்டும் பலன் இல்லை. இந்த மாதிரியான சூழலில் அடுத்த பந்து வீசப்படாத நிலையில் எதிரணி கேப்டன் அப்பீலை வாபஸ் பெற்றால் சம்பந்தப்பட்ட பேட்ஸ்மேனை தொடர்ந்து விளையாட வைக்கலாம்.

    இதையடுத்து வில்லியம்சனும், டேரில் மிட்செலும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் பேசி பார்த்தனர். நடுவர்களும் ரோகித் சர்மாவிடம் விவாதித்தனர். இதனால் களத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதன் பின்னர் டோனி குறுக்கிட்டு ரோகித் சர்மாவிடம் ஏதோ சொல்லி அந்த இடத்தை விட்டு நகர வைத்தார். நடுவர்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியாது என்பது போல் ரோகித் சர்மா கூறியதால், சில நிமிடங்களுக்கு பிறகு டேரில் மிட்செல் அதிருப்தியுடன் வெளியேறினார்.

    இந்த சம்பவத்தால் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கேள்விக்குறியாகி உள்ளது. இது நடுவரின் மோசமான தீர்ப்பு என்று வர்ணனையாளர்கள் விமர்சித்தனர்.

    சர்ச்சை குறித்து இந்திய வீரர் கலீல் அகமது பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘மிட்செல் விவகாரத்தில் 3-வது நடுவரின் முடிவுக்காக காத்திருந்தோம். ஏனெனில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. நடுவர் என்ன சொன்னாரே அதை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டோம்’ என்றார். #Mitchell #NZvIND
    நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி நாளை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NZvIND
    ஆக்லாந்து:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. மூன்று 20 ஓவர் தொடரில் வெல்லிங்டனில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன் முலம் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் நாளை (8-ந்தேதி) நடக்கிறது.

    முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரோகித்சர்மா தலைமையிலான அணி நாளை பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீண்டும் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது.

    வெல்லிங்டன் போட்டியில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறையும் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நாளைய போட்டியில் இதை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    டோனி, தவான் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் மற்ற வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். பந்து வீச்சும் ஏமாற்றத்தை அளித்தது. வேகப்பந்து வீரர்கள் ரன்களை வாரி கொடுத்தனர். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் நாளைய ஆட்டத்துக்கான அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 2-வது 20 ஓவர் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது. ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததற்கு பதிலடி கொடுத்து 20 ஓவர் தொடரை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது.

    அந்த அணியின் தொடக்க வீரர் டிம் செய் பெர்ட் இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளினார். இதே போல முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 10-வது போட்டியாகும். இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 2-ல், நியூசிலாந்து 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #NZvIND
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டியில் இருந்து நியூசிலாந்து தொடக்க வீரர் குப்தில் விலகியுள்ளார். #NZvIND #MartinGuptill
    இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி நடக்கிறது. இந்த தொடரில் இருந்து நியூசிலாந்து தொடக்க வீரர் குப்தில் விலகியுள்ளார்.

    முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் குணமடையவில்லை. இதனால் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையததால் 20 ஓவர் போட்டியில் அவர் ஆடவில்லை. அவருக்கு பதிலாக நீசம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். #NZvIND #MartinGuptill
    சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என்று இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறினார். #NZvIND
    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    நியூசிலாந்தை வீழ்த்திய பின்னர் இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    ‘டாஸ்’ போடுவதற்கு முன்பு ஆடுகளத்தை (பிட்ச்) பார்த்தபோது ஈரப்பதம் காணப்பட்டது. இதனால் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் உலக கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், ஒரு அணியாக இது போன்ற கடினமான சீதோஷ்ண நிலையை எப்படி சமாளிப்பது என்பதை சோதித்து பார்க்க விரும்பினோம். அதனால் தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தேன். ஒரு வேளை இது தொடரை நிர்ணயிக்கும் ஆட்டமாக இருந்திருந்தால், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருப்பேன். பந்து ‘ஸ்விங்’ ஆகும்போது எந்த மாதிரி பேட் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். 4 விக்கெட்டுகளை வேகமாக இழந்த நிலையில் அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு இது போன்ற சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது தெரிந்து இருக்கும். முதல் 30 ஓவருக்குள் ரன்ரேட் மோசமாக இருந்தது. அதன் பிறகு 250 ரன்களை தாண்டியது நல்ல அறிகுறியாகும்.

    நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. அவர்களை 4-1 என்ற கணக்கில் வென்றது மிகப்பெரிய சாதனையாகும். கடந்த முறை இங்கு 0-4 என்ற கணக்கில் தோற்றோம். இப்போது சிறப்பாக விளையாடி சாதித்து காட்டியிருக்கிறோம்.

    விஜய் சங்கரின் பேட்டிங் அருமையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆகி விட்டார். அவர் ஆடிய விதத்தை பார்க்கும் போது, 50 ரன்களோ ஏன் 100 ரன்கள் கூட எடுத்திருக்கலாம். கேதர் ஜாதவ் 2-வது சுழற்பந்து வீச்சாளராக இருக்கும் போது, அணிக்கு சமச்சீர் தன்மை வந்து விடுகிறது. என்னை பொறுத்தவரை அவரை முறையான ஒரு சுழற்பந்து வீச்சாளராகவே பார்க்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் 6 அல்லது 7 ஓவர்கள் பந்து வீசுவதோடு விக்கெட்டும் வீழ்த்துகிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார். #NZvIND
    ×