search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nallakannu"

    தி.மு.க. பா.ஜ.க. கூட்டணிக்கு வாய்ப்பில்லை. மதவாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க.வினர் உறுதியுடன் இருக்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார். #Nallakannu
    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் மத்திய அரசை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவும்,தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் ஸ்டாலின் தி.மு.க வின் தலைவராகியிருப்பது பாராட்டுக்குரியது.



    தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. மதவாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க.வினர் உறுதியுடன் இருக்கிறார்கள். மதவாத சக்தியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அணி சேர்ந்து இருக்கிறோம். அது வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தையே மாற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளார்கள். பா.ஜ.க.வின் கொள்கைகள் நாட்டை பின் நோக்கி கொண்டு போகக்கூடியது. இதை அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்து மத்திய அரசை வீழ்த்த வேண்டும்.

    பல ஆண்டுகள் போராடி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு தண்ணீர் வந்தும் அதை சேமிக்க முடியவில்லை, கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. அதிக அளவு மணல் கொள்ளை, நீர் நிலைகள் முறையாக தூர்வாராதது ஆகியவற்றால்தான் தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை. இதற்கு முழு காரணம் அ.தி.மு.க அரசு தான். நீர் நிலைகள் தூர்வாருவது தொடர்பாக பொதுப்பணித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nallakannu

    தூத்துக்குடியில் மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர கைது நடவடிக்கையை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மனு கொடுத்தார். #Thoothukkudi #Sterlite
    தூத்துக்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகரில் கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து அன்றும், 23-ந் தேதியும் நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் நீதிமன்ற பிணையில் உள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் சாதாரண மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தினசரி நள்ளிரவு நேரங்களில் போலீசார் வீடுகளில் கதவுகளை தட்டி பெண்களை மிரட்டி ஆண்களை கைது செய்வது நியாயமற்றது ஆகும்.

    இயல்புநிலை படிப்படியாக திரும்பி வரும்போது இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கூடங்கள் விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் படிப்பு தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இயல்பு நிலை திரும்பி, மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. #Thoothukkudi #Sterlite
    தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மற்றும் கைது நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும் என்று நல்லக்கண்ணு தெரிவித்தார். #Thoothukudifiring #Nallakannu
    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அரசிதழில் வெளியிட்டு தற்போது முடிவுக்கு வந்தது. முதல் கட்டமாக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடவேண்டும். அதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மற்றும் கைது நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும். அங்கு அமைதியை நிலை நாட்ட தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.


    மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் நாட்டை பிளவுப்படுத்துவது பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தான். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் செய்த திருத்தம் தவறு. சாதி வெறி, மத வெறி சக்திகள் தான் தேச விரோத சக்திகள்.

    சிவகங்கை சம்பவத்தை உதாரணமாக கொண்டு உச்ச நீதிமன்றம் அந்த சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #Nallakannu
    விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து கமல் நடத்தும் மாநாட்டில் நல்லகண்ணு பங்கேற்கவில்லை என்று இந்திய கம்யூ. கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. #CauveryIssue #Nallakannu #kamalhaasan
    சென்னை:

    விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காவிரிக்காக தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் மாநாடு நடத்தப்படுகிறது.

    இதில் பங்கேற்பதற்காக அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கமல் அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்க இருப்பதாக கமல் தெரிவித்தார்.

    இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 19-ந்தேதி கூட்டம் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



    நேற்று முன்தினம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சிலர் தலைவர் நல்லகண்ணுவை அவரது இல்லத்தில் சந்தித்து காவிரி நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த நல்லகண்ணு தி.மு.க. தலைமையில் 9 அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை தெரிவித்துள்ளார்.

    இந்த சந்திப்பில் அவர் மாநாட்டில் பங்கேற்கவோ, தலைமை ஏற்கவோ ஒப்புதல் அளிக்கவில்லை என்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryIssue #Nallakannu #kamalhaasan

    ×