search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukkudal"

    • தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து துரைசாமி, ஆதிமூலம் கருத்துரை வழங்கினர்.
    • நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடலில் உள்ள பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரிய பொறுப்பாளர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மாலதி வரவேற்றார்.

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் பார்வதி, மனோன்மணி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து துரைசாமி, ஆதிமூலம் கருத்துரை வழங்கினர்.

    பொறுப்பாளர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து வான்முகில் ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் பேசினார். பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஒருங்கிணைப்பாளர் மாரியம்மாள் பேசினார்.

    இம்முகாமில் பொறுப்பாளர் தேர்வு நடைபெற்றது. நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. பயிற்சியின் இறுதியில் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் நன்றி கூறினார். தொழிலாளர்கள் பலர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

    • சேரன்மகாதேவி பதிவு மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 40 ஆண்டுகளாக முக்கூடல் கீழவீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
    • பாப்பாகுடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏகமனதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது முடியாத நிலையில் உள்ளது.

    முக்கூடல்:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பதிவு மாவட்டம் முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 40 ஆண்டுகளாக முக்கூடல் கீழவீதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக முக்கூடல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் பல போராட்டங்கள், சமாதான கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவை நடத்தினர்.

    பாப்பாகுடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஏகமனதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது முடியாத நிலையில் உள்ளது.

    சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு அரசு மற்றும் தனியார் இடங்களை பார்வையிட்டும் அதனையும் விரைவாக தேர்வு செய்யாமல் அதிகாரிகள் இழுத்து அடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இதனால் முக்கூடல் வட்டார பொதுமக்கள் நலன் கருதி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முக்கூடல் நகர வியாபாரிகள் சங்கம் சார்பில் அகிம்சை வழியில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் முக்கூடலில் உள்ள கீழ பெரிய வீதி, மேல பெரிய வீதி உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    • கடந்த சில நாட்களாக வியாகம்மாளின் மகன்களும், மகள்களும் அவரிடம் சொத்து பிரித்து தருமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
    • முக்கூடல் போலீசார் மூதாட்டி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை வடக்கு தெருவை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மனைவி வியாகம்மாள்(வயது 80).

    இவர்களுக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வியாகம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக வியாகம்மாளின் மகன்களும், மகள்களும் அவரிடம் சொத்து பிரித்து தருமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதில் மனம் உடைந்த வியாகம்மாள் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.

    • 8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும்.
    • முக்கூடலை சேர்ந்த நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வது இவ்வூரில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.

    முக்கூடல்:

    முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்திப் பெற்ற முத்துமாலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் 11 நாட்கள் விழா நடக்க இருப்பதால் நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் தீர்த்தவாரியும், அம்பாள் சப்பர பவனியும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 1-ம் திருநாள் ஹரிராம் சேட் நற்பணி மன்றம் மற்றும் நாடார் இளைஞர் அணி சார்பாக விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலையில் அம்பாளுக்கு பூஜையும், பகல் 12 மணிக்கு பகல் பூஜையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து முக்கூடல் நகரை சுற்றி தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் ரத பவனியும் இரவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பால் குடம்

    8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். 9-ம் திருநாள் அன்று இரவு அம்பாள் சப்பர பவனி உடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், பல மேளதாளங்களுடன் விமரிசையாக நடைபெறும்.

    10-ம் திருநாள் அன்று தாமிரபரனி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணை கவரும் பல நிறுவனங்களின் ஸ்டால்களும், மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    மேலும் காலை 4 மணி அளவில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். 11-ம் திருநாள் அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறும். இவ்விழாவில் வெளி ஊர்களில் வசிக்கும் அதாவது மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கூடலை சேர்ந்த நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வது இவ்வூரில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.

    முக்கூடல் ஊர் மக்கள் மட்டுமின்றி இந்த ஊரை சுற்றி உள்ள பல கிராமங்களை சேர்ந்தவர்கள் விரதமிருந்து இந்த கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். கொடியேற்று விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காவல்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை, அறநிலைய த்துறை ஆகிய அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எல்.வேல்சாமி, செயலாளர் எஸ். சந்திரன், துணைத் தலைவர் மாரியப்பன், பொருளாளர் முத்தரசன், மற்றும் முக்கூடல் இந்து நாடார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • செந்தில் விநாயகர் மற்றும் திருமுருகன் திரு உருவ மூர்த்திகளும் முக்கூடல் இரு ரதவீதிகளிலும் உலாவரும் வைபவம் நடைபெற்றது
    • விழாவில் பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

    முக்கூடல்:

    முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முக்கூடல் இந்து நாடார்களுக்கு பாத்தியதை பட்ட ஸ்ரீசெந்தில் விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடைபெற்றது.

    அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6-க்குள் தேவி உபாசகர் ஜய்யப்பன் அர்ச்சகர் தலைமையில் இந்து நாடார் சமூதாய அர்ச்சகர்களால் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்நடத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து விமான கலசத்தின் மூலம் விநாயகர் மற்றும் முருகனுக்கு புனித நீரால் அபிஷேகமும் நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு 10முக்கூடல் ஸ்ரீ மணிக்கு மேல் 11 மணிக்கு சுக்ர தரையில் அஷ்டபந்தனம் மருந்து சார்துதல் வைபவம் நடைபெற்றது.

    பின்னர் செந்தில் விநாயகர், மற்றும் திருமுருகன் திரு உறுவ மூர்த்திகளும் முக்கூடல் இரு ரதவீதிகளிலும் உலாவரும் வைபவமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

    முக்கூடல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி பூங்காநகரை சேர்ந்தவர் கோமதி நாராயணன்(வயது56). இவர் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். தற்போது 10‍-ம் வகுப்பு தேர்வுக்கான பறக்கும் படையில் கோமதிநாராயணன் இடம்பெற்றிருந்தார்.

    இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்த முதல் நாளான நேற்று கோமதி நாராயணன் மாதாபட்டிணம் மற்றும் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். எஸ்.எஸ்.எல்.சி. முதன்முறையாக நேற்று மதியம் தொடங்கியது. இதனால் பணி முடிந்து மாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.

    பாப்பாக்குடி அருகே புதுக்கிராமம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கோமதிநாராயணன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி வரும் வழியிலேயே கோமதிநாராயணன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேர்வு கண்காணிப்பு பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி ஆசிரியர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ×