search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother complaint"

    பண்ருட்டியில் பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி லிங்க்ரோடு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகள் மாரிமுத்து (வயது 16). இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். 

    தற்போது காலாண்டு விடுமுறையையொட்டி அந்த தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. நேற்று காலை சிறப்பு வகுப்புக்கு செல்வதற்காக மாரிமுத்து வீட்டில் இருந்து சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் மாரிமுத்துவை தேடினர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இது குறித்து மாரிமுத்துவின் தாய் காமாட்சி பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் விஷ்ணுபிரியா வழக்குபதிவு செய்து மாயமான மாரிமுத்துவை தேடி வருகிறார்.
    சேதராப்பட்டில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் காலனியை சேர்ந்தவர் கோபி. கூலித்தொழிலாளி. இவரது மகள் சுஷ்மிதா. (வயது 19). இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-வது ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்து சுஷ்மிதா தனது தோழிகளுடன் வீட்டுக்கு செல்ல சேதராப்பட்டு பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது சுஷ்மிதா திடீரென மாயமானார்.

    வெகு நேரமாக சுஷ்மிதா வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கு தேடியும் சுஷ்மிதா இல்லை.

    இதையடுத்து அவரது தாய் ஜோதி தனது மகள் மாயமானது குறித்து சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து சுஷ்மிதா காதல் வலையில் விழுந்து காதலனோடு சென்றாரா? அல்லது அவரை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபர் குறித்து மாணவியின் தாய் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். அவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தினமும் கல்லூரிக்கு வீட்டில் இருந்து பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

    கடந்த 20-ந்தேதி காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய அந்த மாணவி வீட்டில் இருந்தார். இரவு உணவிற்கு பிறகு தனது அறைக்கு அவர் தூங்கச் சென்றுவிட்டார். நள்ளிரவில் அந்த மாணவியின் தாயார் விழித்துப்பார்த்த போது மகள் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகளை தேடிபோது அவர் வீட்டில் இருந்து வெளியேறி சென்று இருந்தது தெரியவந்தது. இது பற்றி தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்தார். அவர்களும் அந்த மாணவியை பல இடங்களிலும் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதற்கிடையில் மாணவியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார். அந்த புகாரில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் என்ற வாலிபர் தனது மகளை காதலித்து வந்ததாகவும், அவர் கடத்திச் சென்றுவிட்டதாகவும் கூறி உள்ளார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குபதிவு செய்து பிரவீனையும், அந்த மாணவியையும் தேடி வருகிறார்கள்.

    இதேபோல் ராஜாக்கமங்கலம் மணியன்விளை பகுதியை சேர்ந்தவர் செல்ல சிவலிங்கம். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 23). இவர் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டுச் சென்றார். ஆனால் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு, தோழிகள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். 

    இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யம்பெருமாள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
    10-ம் வகுப்பு மாணவியை கடத்திய என்ஜினீயரிங் மாணவர் மீது தாய் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி இலங்காமணிபுரத்தைச் சேர்ந்த பெண், கன்னியாகுரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்கள்.

    இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் தாயின் பராமரிப்பிலும், மகன் தந்தை பராமரிப்பிலும் இருந்து வருகிறார்கள். மகள் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    மாணவி மாயமான அதே நாளில் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஒருவரும் மாயமாகி உள்ளார். இதனால் அவர் தான் மாணவியை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என மாணவியின் தாயார் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 21-ந் தேதிபள்ளிக்கு சென்ற எனது மகள் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை தேடி பள்ளிக் கூடத்துக்கு சென்றேன். ஆனால் அவள் பள்ளிக்கு வரவில்லை என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனது மகள் மாயமான சமயத்தில் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் என்ஜினீயரிங் மாணவர் ஒருவரும் மாயமாகி உள்ளார். அந்த மாணவர் எனது மகளுடன் பழகி வந்துள்ளார். அவர் தான் எனது மகளை கடத்திச் சென்று இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன். எனவே அவரிடம் இருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவி மற்றும் என்ஜினீயரிங் மாணவரை தேடி வருகிறார்கள்.

    என்ஜினீயரிங் மாணவருக்கு 16 வயது ஆகிறது. மாயமான 2 பேரும் மைனர் என்பதால் அவர்கள் 2 பேரையும் மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    தேனி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் அனுமந்தன்பட்டி கோனார் தெருவை சேர்ந்தவர் கோபால் மகள் சரண்யாதேவி(வயது22). தேனி பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். மில்வேன் மூலம் வேலைக்கு சென்றுவந்துள்ளார். சம்பவத்தன்றும் வழக்கம்போல் சரண்யாதேவி மில்வேலைக்கு சென்றுள்ளார்.

    இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சரண்யா தேவியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் உத்தமபாளையம் அருகே கே.கே.பட்டியை சேர்ந்தவர் மலர்ராஜ் மகள் மலர்பிரியா(வயது21). கம்பத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மலர்பிரியா வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி அருகே மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான மாணவியை மீட்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடியை அடுத்த மாரியம்மன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி மாது (45). இவரது மனைவி விஜயா(39). குடும்பத்தோடு திருப்பூருக்கு சென்ற இத்தம்பதியர் அப்பகுதியிலேயே தங்கி நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார்.

    திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த அவர்களது 17 வயது மகள், 11ம் வகுப்பு தேர்வெழுதியுள்ளார். சொந்த ஊருக்கு வந்த போது கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அந்த மாணவி மாயமானர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், மாயமான தனது மகளை மீட்டுக் கொடுக்கக்கோரி, தொழிலாளி மாது மனைவி விஜயா, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், மாயமான மாணவியை மீட்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெள்ளகோவிலில் பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வரகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியில் திருப்பூர் வீரபாண்டிபிரிவை சேர்ந்த மணிகண்டன் தனது மனைவி ராணி, 17 வயது மகனுடன் தங்கி அம்மிக்கல், ஆட்டுக்கல் கொத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மாணவியும், மணிகண்டனின் மகனும் பழகி வந்தனர்.

    இந்நிலையில் 6-ந்தேதி காலை கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற மகள் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. 

    இந்நிலையில் மணிகண்டனும் குடும்பத்துடன் மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து பெண்ணின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.

    இதனையடுத்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி ராணி மற்றும் அவர்களது 17 வயது மகனையும் தேடி வருகிறார்கள். பள்ளி சிறுமியை மீட்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    வீட்டில் இருந்த கல்லூரி மாணவி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் ஓம்சக்தி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன். இவருடைய மகள் திவ்ய பாரதி (வயது 20).

    இவர், கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15-ந் தேதி திவ்ய பாரதி வீட்டில் தனியார் இருந்தார்.

    அவருடைய பெற்றோர் கடைக்குச் சென்று இருந்தனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் திவ்யபாரதி இல்லை. அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் பலன் கிடைக்கவில்லை.

    இது குறித்து கேணிக்கரை போலீசில், திவ்யபாரதியின் தாயார் பாண்டியம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சிவரத்தினம் வழக்குப்பதிவு செய்து மாயமான திவ்ய பாரதியை தேடி வருகிறார்.

    ×