search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monkeypox"

    • குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக விமான நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • வெளிநாடுகளில் இருந்து வருவோர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை நோய் இந்தியாவின் கேரளாவிலும் பரவி வருகிறது.

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு முதன்முதலாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.

    இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து மேலும் 4 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்களையும் சேர்த்து குரங்கு அம்மை நோயாளிகள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    இதையடுத்து குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து கேரளா வருவோர் கண்காணிக்கப்பட்டனர். இதற்காக விமான நிலையங்களில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வெளிநாடுகளில் இருந்து வருவோர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கேரளாவின் நெடும்பாசசேரி விமான நிலையத்தில் வந்து இறங்கிய வாலிபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த அந்த வாலிபர் உடனடியாக ஆலுவாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.

    • டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு.
    • டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.

    புதுடெல்லி:

    ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் இதுவரை 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ளது.

    தற்போது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் என்றும், அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த 35வயது நபர் உள்பட 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது.

    புதுடெல்லி:

    குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த 14-ம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவின் கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அதில் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டார்.

    இதற்கிடையே, வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு இறந்த முதல் நபர் என அவர் கருதப்பட்டுள்ளார். கேரளாவில் 3, டெல்லி, ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு எந்தவித பயணமும் மேற்கொள்ளவில்லை. அவர் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் கொப்புளங்களும் இருப்பதால் அவரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தொற்றின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது.
    • இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    சிம்லா:

    தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து கேரளா மாநிலம் திரும்பிய 3 பேருக்கு ஏற்கனவே இந்த நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு இதன் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது. தற்போது இமாசலபிரதேச மாநிலம் சோலான் மாவட்டம் பாடி பகுதியில் வசித்து வரும் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    அவரை பரிசோதித்ததில் குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவில் தான் அவர் குரங்கு அம்மை நோய் உள்ளதா? என்பது தெரிய வரும்.

    • இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.
    • பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது.

    கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் பரவி உள்ளது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

    டெல்லியில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு டெல்லியைச் சேர்ந்த அந்த நபருக்கு குரங்கு அம்மை பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், குரங்கு அம்மை பாதிப்பால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது:-

    டெல்லியில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்.

    அதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. நிலையையும் கட்டுக்குள் உள்ளது. லோக் நாயக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டை உருவாக்கியுள்ளோம். காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும் பாதுகாக்கவும் சிறந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உலகம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கியுள்ளது.
    • உலக நாடுகளை மிரட்டி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.

    ஜெனீவா:

    ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அதனாம் டெட்ரோஸ் கூறுகையில், இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளது.
    • வாஷிங்டனில் அமெரிக்க குடியுரிமை அல்லாத ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

    குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பரவியது. தற்போது ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளது. அதே போல் வாஷிங்டனில் அமெரிக்க குடியுரிமை அல்லாத ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

    இரு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது ஆராயப்பட்டு வருகிறது.

    • சம்பந்தப்பட்ட நபர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை.
    • நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதியானது. இதன்மூலம், குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட 3-வது நபர் இவராவார்.

    மலப்புரத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஜூலை 6-ம் தேதி தென் மாநிலத்திற்கு வந்ததாகவும், அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

    • குரங்கு அம்மை நோய் 60க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
    • குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

    ஜெனீவா:

    ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது.

    குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில குரங்கு அம்மைநோய் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப் பட்டு உள்ளது.

    இந்நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை.
    • தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு.

    கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் காலை மற்றும் மாலை என 2 வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன.

    இந்த மாதத்தில் பயணிகளுக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அல்லது கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

    யாருக்காவது தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஒரு படுக்கை வசதியுடன் கூடிய அறை கோவை விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கேரளாவில் 2வது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு.
    • இந்தியா வரும் சர்வதேச பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்த அறிவுரை

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு கேரளா வந்த கன்னூர் மாவட்டத்தை நபரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துஐற அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பணியாற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த இயக்குநர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கூட்டத்தில் நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் மருத்துவ விளக்கக் காட்சிபடி இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

    • துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு 40 வயதான நபர் ஒருவர் கேரளா வந்தார்.
    • அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

    அங்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நோய் தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு 40 வயதான நபர் ஒருவர் கேரளா வந்தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உமிழ் நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதன்முடிவுகள் வந்த பிறகே அவருக்கும் நோய் பாதிப்பு இருக்கிறதா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே கேரள சுகாதாரத்துறையினர் அங்குள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    ×