search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் குரங்கு அம்மையால் பீதியடைய தேவையில்லை- அரவிந்த் கெஜ்ரிவால்
    X

    டெல்லியில் குரங்கு அம்மையால் பீதியடைய தேவையில்லை- அரவிந்த் கெஜ்ரிவால்

    • இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.
    • பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது.

    கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் பரவி உள்ளது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

    டெல்லியில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு டெல்லியைச் சேர்ந்த அந்த நபருக்கு குரங்கு அம்மை பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், குரங்கு அம்மை பாதிப்பால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது:-

    டெல்லியில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணமடைந்து வருகிறார்.

    அதனால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. நிலையையும் கட்டுக்குள் உள்ளது. லோக் நாயக் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டை உருவாக்கியுள்ளோம். காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும் பாதுகாக்கவும் சிறந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×