search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கம்மை"

    • டெல்லியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்தியாவில் இதுவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருந்தது தெரியவந்தது. டெல்லியில் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது.
    • இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 13 ஆக உயர்ந்து உள்ளது.

    புதுடெல்லி:

    குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டது.

    முதல் முதலில் கேரள மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருந்தது.

    அதன்பின் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் குரங்கம்மை பரவியது. குறிப்பாக டெல்லியில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் டெல்லியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எல்.என்.ஜெ.பி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    குரங்கம்மை பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் டெல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 13 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    • குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது.
    • 4 பேருடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் அவர்களுடைய உடலில் பல இடங்களில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுவதைப்போன்ற தடிப்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் 4 பேரும் சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், 4 பேருக்கும் குரங்கம்மை நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் 4 பேருடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளது.
    • வாஷிங்டனில் அமெரிக்க குடியுரிமை அல்லாத ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

    குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பரவியது. தற்போது ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளது. அதே போல் வாஷிங்டனில் அமெரிக்க குடியுரிமை அல்லாத ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.

    இரு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது ஆராயப்பட்டு வருகிறது.

    • இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
    • உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.

    லண்டன்:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் குரங்கம்மை பாதிப்பு 500-ஐ கடந்துள்ளது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு குரங்கு அம்மையால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது.

    • உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
    • இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது.

    லண்டன்:

    ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில்பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.

    இதை தொடர்ந்து உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

    பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    லண்டன்:

    கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் மட்டும் 71 பேருக்கு புதிதாக குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    புதிய பாதிப்புகள் காணப்பட்டாலும், பொதுமக்களுக்கு ஆபத்து குறைவே என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. மேலும் நோய் பாதித்தவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

    மேலும் பெரிய அம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அறிகுறியுடன் கூடிய தொற்று மற்றும் கடுமையான பாதிப்புக்கான ஆபத்து குறையும்.
    ×