search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி மாவட்டத்தில் 4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி
    X

    குரங்கம்மை பாதிப்பு

    குமரி மாவட்டத்தில் 4 பேருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி

    • குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது.
    • 4 பேருடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த 4 பேருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. மேலும் அவர்களுடைய உடலில் பல இடங்களில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுவதைப்போன்ற தடிப்புகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் 4 பேரும் சந்தேகத்தின் பேரில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள், 4 பேருக்கும் குரங்கம்மை நோய் அறிகுறிகள் இருப்பதால் அவர்களை தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் 4 பேருடைய ரத்த மாதிரிகளும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×