search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meets"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான செல்வசேகரின் தாய் சகோதரிகளை சந்தித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலரும் காயமடைந்தனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக துணை முதல்லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். வன்முறை சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார். காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையையும் அவர் வழங்கினார்.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (29-ந்தேதி) தூத்துக்குடி வந்தார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த அவர் விமான நிலையத்தில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

    துப்பாக்கி சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் துப்பாக்கி சூட்டில் பலியான‌ சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தை சேர்ந்த செல்வசேகர் (40) வீட்டுக்கு சென்றார். அங்கு செல்வ சேகரின் தாய் மாசானம் அம்மாள் மற்றும் செல்வசேகரின் சகோதரிகள் 2 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது மாசானம் அம்மாள் தனது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை கேட்டு கொண்ட கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    அதன்பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். கவர்னர் வருகையை யொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். 
    தமிழக சட்டசபை நாளை மீண்டும் கூடுகிறது. மொத்தம் 23 நாட்கள் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சினையை எழுப்ப தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. #TamilnaduAssembly
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் ஜனவரி 8-ந் தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டசபை தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெற்றது.

    அதன்பின்னர், சட்டசபையின் சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 12-ந் தேதி கூடியது. அன்றைய தினம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக மார்ச் மாதம் 15-ந் தேதி சட்டசபை மீண்டும் கூடியது.

    அன்று பிற்பகல் சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர், பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்து முடிந்தது.

    இந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் கூடுகிறது. ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் தினமும் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    கேள்வி நேரம் முடிந்ததும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கும் முதல் நாளில் (நாளை) வனம் மற்றும் சுற்றுச்சூழல், தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க இருக்கின்றனர்.

    தொடர்ந்து, ஜூலை மாதம் 9-ந் தேதி மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 26-ந் தேதி காவல் மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. அன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க இருக்கிறார்.

    இடையில், ஜூன் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்கள் சட்டசபை கூட்டம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல், இந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) கேள்வி எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினையையும் எழுப்ப இருக்கிறது.

    எனவே, இந்த சட்டசபை கூட்டத் தொடரில், தினமும் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.   #TamilnaduAssembly
    கர்நாடக பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அவகாசம் வழங்கும்படி கேட்டுள்ளார். #KarnatakaElection #YeddyurappaMeetsGovernor
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 தொகுகிளில் பா.ஜ.க. வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், ஆட்சியமைக்க மெஜாரிட்டி இல்லை. இருப்பினும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கர்நாடக பிரகின்யவந்தா கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

    யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில், அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது. அதேசமயம் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கின்றன. யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்பதைப்பொருத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வு இருக்கும்.



    இந்த பரபரப்பான  சூழ்நிலையில், பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்தார். அப்போது, அவர் ஆட்சியமைக்க மேலும் அவகாசம் வழங்க கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார். அப்போது மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், அனந்தகுமார் ஆகியோரும் சென்றனர்.

    இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KarnatakaElection #YeddyurappaMeetsGovernor
    தமிழக சட்டசபை வரும் 29-ம் தேதி கூடுவதாகவும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNAssembly
    பெங்களூரு:

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. அன்று காலை 10.30 மணிக்கு 2018-19-ம் ஆண்டுக்கான அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடித்ததும், சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



    அதன்பின்னர் ஏப்ரல் 19-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பின்னர், 22ம் தேதி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்து பேசினார். அத்துடன் கூட்டத் தொடர் நிறைவடைந்தது. அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

    இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வரும் 29-ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடுவதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார். அப்போது, துறை வாரியாக நிதி ஒதுக்குவதற்கு மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். #TNAssembly

    சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது ஜூன் மாதத்துக்குள் கிளை மன்றங்களை அமைக்க அவர் உத்தரவிட்டார். #Rajinikanth
    ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்றுமுன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததால், அவர்களுடன் 10-ந்தேதி (நேற்று) ஆலோசனை நடத்தப்படும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று காலை 10.45 மணி முதல் 12 மணி வரை ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் ரஜினிகாந்த் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊராட்சி, ஒன்றியம், நகரம், மண்டல கிளை மன்றங்களை மிக விரைவில் செயல்படுத்த வேண்டும். 30 பேர் கொண்ட கிளை மன்றங்களை அமைக்க வேண்டும். ஒரு மாதத்துக்குள் 62 ஆயிரத்து 552 கிளை மன்றங்கள் திறக்கப்பட வேண்டும்.

    இந்த பணிகளை ஜூன் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். அவர் வழங்கிய அறிவுரைகள், ஆலோசனைகளால் 100 மடங்கு சக்தி அதிகரித்தது போல் நாங்கள் உணர்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Rajinikanth #tamilnews
    பனாமா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Panama
    பனாமா சிட்டி:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவுதமாலா, பனாமா மற்றும் பெரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல் கட்டமாக டெல்லியில் இருந்த புறப்பட்ட அவர், ஸ்பெயின் வழியாக கவுதமாலா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



    இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தில் இரண்டாம் கட்டமாக பனாமா நாட்டுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜுவான் கார்லோஸ் வரேலா ரோட்ரிக்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரது முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Panama
    ×