search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "victims family"

    நியூசிலாந்தில் மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை தெலுங்கானா உள்துறை மந்திரி சந்தித்து ஆறுதல் கூறினார். #NewZealandAttack #TelengaHomiMinister
    ஐதராபாத்:

    நியூசிலாந்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மசூதிகளில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.



    இந்நிலையில், நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த ஒசைர் காதரின் குடும்பத்தினரை தெலுங்கானா உள்துறை மந்திரி முகமது மஹ்மூத் அலி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஒசைர் காதரின் உடலை விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு கடிதம் எழுதி உள்ளார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அகமது இக்பால் ஜகாங்கிரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் ஐதராபாத்தைச் சேர்ந்த பர்ஹாஸ் அசன் என்பவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் குடும்பத்தினர் ஏற்கனவே நியூசிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #NewZealandAttack #TelengaHomiMinister

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான செல்வசேகரின் தாய் சகோதரிகளை சந்தித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறை, துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். பலரும் காயமடைந்தனர்.

    அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக துணை முதல்லமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். வன்முறை சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டார். காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையையும் அவர் வழங்கினார்.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (29-ந்தேதி) தூத்துக்குடி வந்தார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த அவர் விமான நிலையத்தில் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

    துப்பாக்கி சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் துப்பாக்கி சூட்டில் பலியான‌ சாயர்புரம் அருகே உள்ள பேய்க்குளத்தை சேர்ந்த செல்வசேகர் (40) வீட்டுக்கு சென்றார். அங்கு செல்வ சேகரின் தாய் மாசானம் அம்மாள் மற்றும் செல்வசேகரின் சகோதரிகள் 2 பேரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது மாசானம் அம்மாள் தனது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கவர்னரிடம் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை கேட்டு கொண்ட கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    அதன்பிறகு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். கவர்னர் வருகையை யொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். 
    ×