search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kabaddi tournament"

    • ராமநாதபுரம் அருகே கிராமிய கபடி போட்டி நடந்தது.
    • பால்க்கரை கிராம மக்கள் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து கிராமிய கபடி போட்டியை நடத்தியது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் அருகில் உள்ள பால்க்கரை கிராமத்தில் சமூக ஆர்வலர் அலெக்சின் 12-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலெக்சின் வெள்ளி நிலா, காந்தாரி அம்மன் கபடி கழகம், பால்க்கரை கிராம மக்கள் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து கிராமிய கபடி போட்டியை நடத்தியது. இதில் முதல் பரிசு

    ரூ. 50 ஆயிரத்தை அலெக்சின் வெள்ளி நிலா பால்க்கரை அணியும், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரத்தை ஆய்க்குட்டி தேசிய பறவை அணியும், 3-ம் பரிசு ரூ.30 ஆயிரத்தை சாமிப்பட்டி லவ் பேர்ட்ஸ் அணியும் பெற்றன.

    இதில் ராமநாதபுரம் ஒன்றிய சேர்மன் கே.டி.பிரபாகரன், ஆர்.எஸ்.மடை ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார், ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் வக்கீல் முத்து முருகன், அ.மு.மு.க. ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், பால்க்கரை கிராமத்தை சேர்ந்த பொறியாளர் சிங்கப்பூர் சிவசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர பொருளாளர் பாலமுருகன், தங்க நகை தயாரிப்பாளர் சிவக்குமார், ராஜீவ்காந்தி, பால்க்கரை கேங்குராஜ், நவநீதன், முனியப்பா,தினேஷ்,வைசவா,கூரி,ரவி பத்மநாபன்,அஜித்குமார், சசிகுமார், இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • துணை சபாநாயகர்ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த சார்காசிமேடு கிராமத்தில் அம்பேத்கர் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் வாணிதாசன் விளையாட்டுக் கழகம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு புதுவை துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

    புதுவை கபடி சங்க செய்தி தொடர்பாளர் பூபாலன் சங்க கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு புதுவை மாநில கபடி சங்க பொதுச் செயலாளர் ஆரிய சாமி, பொருளாளர் கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போட்டி யில் சுமார் 52 அணிகள் பங்கேற்று ஆட உள்ளனர்.

    இதற்கான இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை நடைபெறு கிறது. இதற்கான ஏற்பாடுகளை சார்க்காசி மேடு வாணிதாசனார் கபடி கழக நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் செய்து வருகின்றனர்.

    • நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுக்கா மாடப்பள்ளி ஊராட்சி அருகே உள்ள களரூர் கிராமத்தில் இரண்டு நாள் மின்னொளியில் கபடி போட்டி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு எம். கண்ணன், பி. ராமகிருஷ்ணன் ஆர்.கர்ணன் ஆர்..கோவிந்தராஜ் கே.பாலாஜி திருமலைவாசன் தலைமை வகித்தனர். கபடி போட்டியை ஏ.நல்லதம்பி எம்எல்ஏ வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார், கபடி போட்டி 15க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு மோதின.

    இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு ரூ 25 ஆயிரத்து 70, இரண்டாவது பரிசு ரூ 20 ஆயிரம் மூன்றாவது பரிசு ரூ15 ஆயிரம் உட்பட 5 பரிசுகளை திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.சி. கார்த்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், பஞ்சாட்சரம் பெருமாள் குணசேகரன் சிவக்குமார் மன்னன் விஜயா சின்னத்தாய், வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கே கோமதி கார்த்திகேயன் ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு, முன்னாள் கவுன்சிலர் சிவலிங்கம், ராமச்சந்திரன், கூட்டுறவு துணைத் தலைவர் சாமிக்கண்ணு, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபா வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

    • சிவகாசியில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.
    • இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

    சிவகாசி

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் இணைந்து சின்னமருது கபடி குழு மற்றும் பன்னீர்செல்வம் கபடி குழுவினர் நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கபடி போட்டியை சிவகாசி அருகே ரிசர்வ்லைன் மினி ஸ்டேடியத்தில் 2நாட்கள் நடத்தியது.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி சங்க துணைத் தலைவருமான ராஜ்சத்யன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு தொகை வழங்கினர்.

    இந்த போட்டியில் விருதுநகர், மதுரை தேனி, திண்டுக்கல், நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் இருந்து 100 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் தமிழ்பாடி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முதல் பரிசாக 12 அடி கோப்பை மற்றும் ரூ.15ஆயிரமும், 2-ம் பரிசாக 10 அடி கோப்பை ரூ.12ஆயிரமும், 3-ம் பரிசாக 8 அடி கோப்பை ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது.

    4-ம் பரிசாக 6 அடி கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம், 5-ம் பரிசு முதல் 8-ம் பரிசு வரை 4 அடி கோப்பை மற்றும் ரூ.4 ஆயிரம் 9-வது பரிசு முதல் 12-ம் பரிசு வரை 2 அடி கோப்பை மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய் ஆனந்த், வழக்கறிஞர் மாரீசுவரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ், லட்சுமி நாராயணன், ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
    • 30 அணியினர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்தப் போட்டிக்கு நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    கபடி போட்டியை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர், முன்னால் அமைச்சர் மாவட்ட தடகள சங்க தலைவருமான கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட தடகள சங்க உறுப்பினர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கபடி கழகம் தலைவர் எஸ். பி. சீனிவாசன் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் புலவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கபடி போட்டியில் வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 அணியினர் கலந்து கொண்டனர்.

    முதல் பரிசை கண்ணாலபட்டிக்கும், இரண்டாவது பரிசை கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா அணியும், மேலூர் எம்.பி.ஸ்டார் அணி மூன்றாம் பரிசு பெற்றது வெற்றி பெற்ற அணியினருக்கு விழா குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டன.

    • புதுவை மாநில கபடி சங்கம் சார்பில் முகாம்கள் நடத்தி கபடி வீராங்கனைகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு அதன்படி 12 கபடி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • ஆசிய கோல்டு மெடலிஸ்டும் அணியின் மேலாளருமான ஜெயக்குமார் உடன் சென்றனர்.

    புதுச்சேரி:

    ஹரியானா மாநிலத்தில் 69-வது தேசிய சீனியர் மகளிர் கபடி போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த போட்டியில் பங்கேற்க புதுவை மாநில கபடி சங்கம் சார்பில் முகாம்கள் நடத்தி கபடி வீராங்கனைகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு அதன்படி 12 கபடி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்க செல்லும் வீராங்கனைகளை புதுவை பஸ் நிலையத்தில் புதுவை மாநில கபடி சங்க தலைவர் விஜயலட்சுமி ஜெயராமன் தலைமையில் பொதுச் செயலாளர் ஆரியசாமி, பொருளாளர் கபிலன், துணைத் தலைவர் மலையான் மற்றும் கபடி சங்க நிர்வாகிகள் பாஸ்கர், மருது,பாபு மற்றும் பலர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    ஹரியானா செல்லும் 12 கபடி வீராங்கனைகளுடன் பயிற்சியாளர் கதிரவன், ஆசிய கோல்டு மெடலிஸ்டும் அணியின் மேலாளருமான ஜெயக்குமார் உடன் சென்றனர்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை புதுவை மாநில கபடி சங்க மக்கள் தொடர்பு அலுவலர் பூபாலன் செய்திருந்தார்.

    • அனுப்பட்டி கிராமத்தில், மாநில அளவிலான கபடி போட்டி துவக்க விழா நடைபெற்றது.
    • கபடி போட்டி அமைப்பாளர்கள், வீரர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், மாநில அளவிலான கபடி போட்டி துவக்க விழா நடைபெற்றது.

    கபடி போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,செல்வராஜ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் சேர்மன் வக்கீல் குமார், திருப்பூர் மாநகர செயலாளர் டி.கே. டி.நாகராஜன், செயற்குழு உகாயனுர் கனகராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் ராஜேஸ்வரன், சாமிநாதன், துரைமுருகன்,பழனிசாமி, கபடி போட்டி அமைப்பாளர்கள், வீரர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நண்பர்கள் கபாடி குழு சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி நடை பெற்றது.
    • இதில் பெண்கள் பிரிவில் 30 அணிகளும், ஆண்கள் பிரிவில் 105 அணிகளும் கலந்து கொண்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி, நண்பர்கள் கபாடி குழு சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபாடி போட்டி நடை பெற்றது. இதில் பெண்கள் பிரிவில் 30 அணிகளும், ஆண்கள் பிரிவில் 105 அணிகளும் கலந்து கொண்டனர்.

    நாமக்கல், சேலம், ஈரோடு, சென்னை, கரூர், கடலூர், திருச்சி, மதுரை, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி என தமிழக முழுவதும் இருந்து ஏராள மான அணிகள் கலந்து கொண்ட ன.

    இதில் பெண்கள் பிரிவில் ஈரோடு மாவட்டம் அந்தி யூரைச் சேர்ந்த சக்தி அணி யினர் முதல் பரிசு பெற்ற னர். அதை தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான கபாடி போட்டியில் ஈரோடு மாவட்டம், கோபி செட்டி பாளையம், ஏ.எம்.கே.சி. அணியினர் முதல் பரிசும், குமாரபாளையம் சேவ ற்கொடி யோர் பேரவை அணியினர் 2-ம் பரிசும் சங்ககிரி சுவாமி அகாடமி அணியினர், 3-ம் பரிசும் குமாரபாளையம் ராஜா பிரதர்ஸ் அணியினர் 4-ம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினரை பலரும் பாராட்டினர்.

    • பெண்கள் ‘சாம்பியன் ஷிப்’ போட்டி கடந்த 5-ந் தேதி திருப்பூர் சிட்கோவில் நடைபெற்றது.
    • கபடி போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன.

    திருப்பூர் :

    விழுப்புரத்தில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் திருப்பூர் பெண்கள் அணி பங்கேற்க உள்ளது.

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகத்தின் சார்பில் மாவட்ட பெண்கள் 'சாம்பியன் ஷிப்' போட்டி கடந்த 5-ந் தேதி திருப்பூர் சிட்கோவில் நடைபெற்றது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. போட்டியை கபடி கழக கவுரவ உறுப்பினர் பிரேமா மணி தொடங்கி வைத்தார். இதில் உடுமலை வி.ஆர்.டி.ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் இடத்தை பிடித்து பரிசாக ரூ.10 ஆயிரத்தையும், 2-ம் இடத்தை திருப்பூர் வி.போர்ட்ஸ் அணி பிடித்து ரூ.7 ஆயிரத்தையும், கொழுமம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 3-ம் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரத்தையும், திருப்பூர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் அணி 4-ம் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரத்தையும், கோப்பைகளையும் பரிசாக பெற்றனர்.

    பரிசுகளை மாவட்ட கபடிக்கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக்கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் மற்றும் மணி மஹால் உரிமையாளர் ஆகியோர் வழங்கினர். மாவட்ட பெண்கள் அணிக்கு தேர்வுக்குழுத்தலைவர் வி.டி.ருத்ரன், ஒருங்கிணைப்பாளர் கே.வாலீசன் ஆகியோர் தலைமையில் 12 கபடி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட இணைச்செயலாளர் செல்வராஜ் கலந்துகொண்டார்.

    வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில் மாநில அளவிலான கபடி 'சாம்பியன் ஷிப்' போட்டி நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாவட்ட பெண்கள் 'சாம்பியன் ஷிப்' போட்டியில் வெற்றி பெற்ற உடுமலை வி.ஆர்.டி பெண்கள் அணியை சேர்ந்த கதிஜாபீவி, புவனேஸ்வரி, ஜீவிதா, ஸ்ரீபிரியா, காவ்யாஸ்ரீ, உடுமலை கமலம் கல்லூரியை சேர்ந்த பவித்திரா, திருப்பூர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அணியை சேர்ந்த காயத்திரி, அஸ்வதி, திருப்பூர் வி போர்ட்ஸ் அணியை சேர்ந்த ஆனந்தி, புவனேஸ்வரி, திருப்பூர் டால்பின் அணியை சேர்ந்த ரோகிணி, திருப்பூர் குமரன் கல்லூரியை சேர்ந்த ஜெயபாரதி, பயிற்சியாளர் செந்தில், மேலாளர் வெங்கடேஷ், உதவி பயிற்சியாளர் வாசு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இ்த்தகவலை திருப்பூர் மாவட்ட கபடிக்கழக செயலாளர் ஜெயசித்ரா ஏ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    • ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கான மண்டல அளவிலான கபடி போட்டி இன்று தொடங்கியது.
    • தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மதுரை

    மதுரை ெரயில்வே காலனி செம்மண் திடலில் ெரயில்வே பாதுகாப்பு படை சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான 31-வது கபடி போட்டி இன்று தொடங்கியது. தொடக்க விழாவில் மதுரை கோட்ட ெரயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    மதுரை கோட்ட பாதுகாப்பு படை அதிகாரி அன்பரசு பேசினார். கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ்பாபு கொடியசைத்து கபடி போட்டியை தொடங்கிவைத்தார். இதில் சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 ரெயில்வே கோட்டங்களை சேர்ந்த அணி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    ெரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையேயான கபடி போட்டியில் இன்று லீக் சுற்றுகள் நடக்கிறது. சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக ஆரம்பம் முதலே ஆட்டத்தில் அனல் பறந்தது.

    இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். மதுரை ெரயில்வே காலனி சிமெண்ட் திடலில் நாளை(4-ம் தேதி) இறுதிப்போட்டி நடக்க உள்ளது. இதில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணி மற்றும் வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளார்.

    • கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. மகளிர் காண கபடி விளையாட்டு போட்டி காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது.

    போட்டியை கதிர் ஆனந்த் எம்.பி., கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    4 பிரிவுகளாக கபடி போட்டி நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 8அணிகளும், கல்லூரி பிரிவு சார்பில் 5, அணிகளும் பொது பிரிவில் 2 அணிகள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவில் 2 அணிகள் என மொத்தம் 17 அணிகள் பங்கேற்றன.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா, கவுன்சிலர் விமலா சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது.
    • இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் ஜாகீர் அம்மாபாளைத்தில் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி கடந்த 14, 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைப்பெற்றது. இந்த போட்டியை தி.மு.க மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முன்னாள் துணை மேயரும், மெய்யனூர் பகுதி செயலாளருமான கவுன்சிலர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதில் தி.மு.கவினர் மற்றும் ஜெ.ஏ.பி போர்ட்ஸ் கிளாப் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    ×