என் மலர்
உள்ளூர் செய்திகள்

கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் ராஜ் சத்யன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சிவகாசியில் மின்னொளி கபடி போட்டி
- சிவகாசியில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.
- இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
சிவகாசி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் இணைந்து சின்னமருது கபடி குழு மற்றும் பன்னீர்செல்வம் கபடி குழுவினர் நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கபடி போட்டியை சிவகாசி அருகே ரிசர்வ்லைன் மினி ஸ்டேடியத்தில் 2நாட்கள் நடத்தியது.
எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி சங்க துணைத் தலைவருமான ராஜ்சத்யன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு தொகை வழங்கினர்.
இந்த போட்டியில் விருதுநகர், மதுரை தேனி, திண்டுக்கல், நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் இருந்து 100 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் தமிழ்பாடி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முதல் பரிசாக 12 அடி கோப்பை மற்றும் ரூ.15ஆயிரமும், 2-ம் பரிசாக 10 அடி கோப்பை ரூ.12ஆயிரமும், 3-ம் பரிசாக 8 அடி கோப்பை ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது.
4-ம் பரிசாக 6 அடி கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம், 5-ம் பரிசு முதல் 8-ம் பரிசு வரை 4 அடி கோப்பை மற்றும் ரூ.4 ஆயிரம் 9-வது பரிசு முதல் 12-ம் பரிசு வரை 2 அடி கோப்பை மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய் ஆனந்த், வழக்கறிஞர் மாரீசுவரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ், லட்சுமி நாராயணன், ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






