search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில் 9-ந் தேதி மாநில அளவிலான கபடி போட்டி - திருப்பூர் பெண்கள் அணி பங்கேற்பு
    X

    மாவட்ட பெண்கள் கபடி போட்டியில் வென்ற வீராங்கனைகளுடன் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக்கழக பொருளாளர் ஜெயசித்ரா ஏ.சண்முகம் மற்றும் பலர் உள்ளனர்.

    விழுப்புரத்தில் 9-ந் தேதி மாநில அளவிலான கபடி போட்டி - திருப்பூர் பெண்கள் அணி பங்கேற்பு

    • பெண்கள் ‘சாம்பியன் ஷிப்’ போட்டி கடந்த 5-ந் தேதி திருப்பூர் சிட்கோவில் நடைபெற்றது.
    • கபடி போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன.

    திருப்பூர் :

    விழுப்புரத்தில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் திருப்பூர் பெண்கள் அணி பங்கேற்க உள்ளது.

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகத்தின் சார்பில் மாவட்ட பெண்கள் 'சாம்பியன் ஷிப்' போட்டி கடந்த 5-ந் தேதி திருப்பூர் சிட்கோவில் நடைபெற்றது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. போட்டியை கபடி கழக கவுரவ உறுப்பினர் பிரேமா மணி தொடங்கி வைத்தார். இதில் உடுமலை வி.ஆர்.டி.ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் இடத்தை பிடித்து பரிசாக ரூ.10 ஆயிரத்தையும், 2-ம் இடத்தை திருப்பூர் வி.போர்ட்ஸ் அணி பிடித்து ரூ.7 ஆயிரத்தையும், கொழுமம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 3-ம் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரத்தையும், திருப்பூர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் அணி 4-ம் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரத்தையும், கோப்பைகளையும் பரிசாக பெற்றனர்.

    பரிசுகளை மாவட்ட கபடிக்கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக்கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் மற்றும் மணி மஹால் உரிமையாளர் ஆகியோர் வழங்கினர். மாவட்ட பெண்கள் அணிக்கு தேர்வுக்குழுத்தலைவர் வி.டி.ருத்ரன், ஒருங்கிணைப்பாளர் கே.வாலீசன் ஆகியோர் தலைமையில் 12 கபடி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட இணைச்செயலாளர் செல்வராஜ் கலந்துகொண்டார்.

    வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில் மாநில அளவிலான கபடி 'சாம்பியன் ஷிப்' போட்டி நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாவட்ட பெண்கள் 'சாம்பியன் ஷிப்' போட்டியில் வெற்றி பெற்ற உடுமலை வி.ஆர்.டி பெண்கள் அணியை சேர்ந்த கதிஜாபீவி, புவனேஸ்வரி, ஜீவிதா, ஸ்ரீபிரியா, காவ்யாஸ்ரீ, உடுமலை கமலம் கல்லூரியை சேர்ந்த பவித்திரா, திருப்பூர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அணியை சேர்ந்த காயத்திரி, அஸ்வதி, திருப்பூர் வி போர்ட்ஸ் அணியை சேர்ந்த ஆனந்தி, புவனேஸ்வரி, திருப்பூர் டால்பின் அணியை சேர்ந்த ரோகிணி, திருப்பூர் குமரன் கல்லூரியை சேர்ந்த ஜெயபாரதி, பயிற்சியாளர் செந்தில், மேலாளர் வெங்கடேஷ், உதவி பயிற்சியாளர் வாசு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இ்த்தகவலை திருப்பூர் மாவட்ட கபடிக்கழக செயலாளர் ஜெயசித்ரா ஏ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×