பல்லடத்தில் மாநில அளவிலான கபடி போட்டி - செல்வராஜ் எம்.எல்.ஏ.,துவங்கி வைத்தார்

அனுப்பட்டி கிராமத்தில், மாநில அளவிலான கபடி போட்டி துவக்க விழா நடைபெற்றது. கபடி போட்டி அமைப்பாளர்கள், வீரர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கபடி போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,செல்வராஜ் துவக்கி வைத்த காட்சி.
கபடி போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,செல்வராஜ் துவக்கி வைத்த காட்சி.
Published on

 பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், மாநில அளவிலான கபடி போட்டி துவக்க விழா நடைபெற்றது.

கபடி போட்டியை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,செல்வராஜ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் சேர்மன் வக்கீல் குமார், திருப்பூர் மாநகர செயலாளர் டி.கே. டி.நாகராஜன், செயற்குழு உகாயனுர் கனகராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் ராஜேஸ்வரன், சாமிநாதன், துரைமுருகன்,பழனிசாமி, கபடி போட்டி அமைப்பாளர்கள், வீரர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com