என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் கபடி போட்டி
- கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்
- 30 அணியினர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்தப் போட்டிக்கு நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கபடி போட்டியை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர், முன்னால் அமைச்சர் மாவட்ட தடகள சங்க தலைவருமான கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.
மாவட்ட தடகள சங்க உறுப்பினர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட கபடி கழகம் தலைவர் எஸ். பி. சீனிவாசன் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் புலவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கபடி போட்டியில் வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30 அணியினர் கலந்து கொண்டனர்.
முதல் பரிசை கண்ணாலபட்டிக்கும், இரண்டாவது பரிசை கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா அணியும், மேலூர் எம்.பி.ஸ்டார் அணி மூன்றாம் பரிசு பெற்றது வெற்றி பெற்ற அணியினருக்கு விழா குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டன.