search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry"

    • மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்டை போலீசார் கைது செய்தனர்.
    • கடந்த 15-ந் தேதி கிண்டியில் மாநகர பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் 3½பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலாளி. இவர் கடந்த 16-ந் தேதி மாலை மகளின் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக மனைவியுடன் ரூ.2½லட்சம் ரொக்கத்துடன் மாநகர பஸ்சில் (12ஜி) தி.நகருக்கு சென்றார்.

    பஸ்சில் இருந்து இறங்கிய இருவரும் பிரபல கடையில் நகை வாங்கிவிட்டு பணத்தை செலுத்த பையை பார்த்தபோது ரூ.2½ லட்சம் மாயமாகி இருந்தது.

    மாநகர பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    உதவி கமிஷனர் பாரதிராஜா, சப் - இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கிடமான 2 பெண்கள் விஜயகுமார் பயணம் செய்த பஸ்சில் பயணம் செய்தது தெரிந்தது.

    விசாரணையில் அவர்கள் பரமக்குடியை சேர்ந்த உறவினர்களான கவிதா மற்றும் ரேகா என்பது தெரிந்தது. மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்டை போலீசார் கைது செய்தனர்.

    இருவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பஸ்சில் தனியாக பயணம் செய்பவர்களை குறி வைத்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்தது தெரியவந்தது.

    அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த 15-ந் தேதி கிண்டியில் மாநகர பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் 3½பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றனர்.
    • திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி வடக்கு விதியைச் சேர்ந்த பூவழகன் (வயது66).

    இவர் தனது மனைவி ஜமுனா ராணிவுடன் மோட்டார் சைக்கிளில் திருச்செனம் பூண்டிக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து நேற்று மாலை மனைவியுடன் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    பூண்டி அருகே வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜமுனாராணியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர்.

    ஆனால் ஜமுனாராணி சுதாரித்து கொண்டதால் மர்மநபர்களால் நகையை பறிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.

    இது குறித்து அவர் பொது மக்களுக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் மர்மநபர்களை விரட்டி சென்றனர்.

    அவர்களில் ஒருவர் சிக்கினார், மற்றொருவர் தப்பியோடி விட்டார்.

    பின்னர் சிக்கிய வழிப்பறி கொள்ளையனை பொது மக்கள் திருக்காட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் திருச்சியை சேர்ந்த குமரேசன் (வயது 20 )அவருடன் வந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது தவ்பிக் என்பது தெரியவந்தது.

    இது குறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து குமரேசனை கைது செய்தனர்.

    மேலும் தப்பியோடிய முகமது தவ்பிக் தேடி வருகிறார்கள்.

    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 20 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 38). இவர் குடவாசல் தாலுக்கா ஓகை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சி அடுத்த மண்ணச்சநல்லூர் கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு மீண்டும் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1லட்சம் ரொக்க பணம் மற்றும் 20 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கபட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து முத்துக்குமரன் நாச்சியார் கோவில் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
    • நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்-ராஜபாளையம் மெயின் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் நிர்வாண சாமியார் ஒருவர் 30 நாள் புனித யாத்திரையாக ராமேஸ்வரம், கன்னியா குமரி செல்வதற்காக வந்த வழியில் இந்த கடைக்குள் சென்றுள்ளார்.

    அவர், கடை உரிமையாளரிடம் தான் ஹரித்துவாரில் இருந்து வருவதாகவும், இந்த பகுதியை கடக்க முயன்றபோது திடீரென எனக்கு கடவுள் அருள்வாக்கில் கேட்டதாகவும், அதில் உங்கள் நகைக்கடைக்கு சென்று உங்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு போ என கூறியதாகவும், அதனாலே தங்களது கடைக்கு தங்களை ஆசீர்வாதம் செய்வதற்காக வந்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் உரிமையாளரும், பணியாளர்களும் செய்வது அறியாது திகைத்துப் போய் நின்றனர். தொடர்ந்து நிர்வாண சுவாமியை கும்பிட்டு வரவேற்று அமர செய்தனர். அப்போது கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    தொடர்ந்து கடையின் உரிமையாளர், நிர்வாண சாமியாரின் வழிச் செலவுக்காக சிறிய தொகையை கொடுக்க, அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமி இது தனக்கு பூஜைக்கு உண்டான செலவு என்றும், என்னுடைய ஆசீர்வாதம் கிடைத்தால் நீ மிகப்பெரிய ஆளாய் வருவாய் எனக்கூறி நான் உனக்கு ஆசீர்வாதம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே கடையின் உள்ளே நகைகள் இருக்கும் பகுதிக்கு உரிமையாளரை போகுமாறு கூறினார். பின்னர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து உரிமையாளரின் தலையில் கை வைத்து மீண்டும் ஒரு முறை ஆசீர்வாதம் செய்தார். தொடர்ந்து, நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார். அதைக் கேட்ட உரிமையாளர் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை நிர்வாண சாமியாரிடம் கொடுப்பதற்காக எடுத்தார். அந்த செயின் வேண்டாம் பெரிய செயின் எடுங்கள் என்று நிர்வாண சாமியார் கையசைத்து கூறினார்.

    ஆனால் கடையின் உரிமையாளர் ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை மட்டும் நிர்வாண சாமியாரின் கழுத்தில் அணிவித்தார். அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமியார் தங்க செயின் மற்றும் பணத்தோடு வெளியே சென்றார். வட இந்திய சாமியார் தமிழகத்திற்கு வந்து பணம் மற்றும் நகையை லாவகமாக வாங்கிக் கொண்டு சென்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
    • கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஞானஅருள் நேசன் (வயது 47).

    விவசாயியான இவர் அவருடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு கோயம்புத்தூருக்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அவருடைய வீட்டின் ஞான அருள் பேசின் வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்து விட்டு அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வீட்டிற்கு வந்த ஞான அருள் நேசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

    அதிலிருந்து 2 பவுன் தங்க நகையும் மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

    அது சிறிது தூரம் வரை ஓடி சென்று விட்டு நின்றது.

    தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாலிபர்களை தாக்கி நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி தாலுகா கட்டனாங்குளம் பகுதியை சேர்ந்தவர் அகத்தீஸ்வரன்(வயது42). இவர் பிள்ளையார்குளம் கல் குவாரியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது அங்கு வந்த கல்லங்குளம் பகுதியை சேர்ந்த சோனை, ராமச்சந்திரன் உள்பட 6பேர் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.

    அப்போது முதலாளியிடம் சென்று பணம் கேளுங்கள் என்று அகத்தீஸ்வரன் அவர்களிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியால் அகத்தீஸ்வரனை தாக்கினர்.

    அதனை தடுக்க வந்த அகத்தீஸ்வரனின் சகோதரருக்கும் அடி-உதை விழுந்தது. மேலும் அவரிடம் இருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் அகத்தீஸ்வரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள துரைச்சாமி புரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (வயது58). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை காணாமல் போயிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் அருளப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
    • உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அடுத்த உத்தமதானபுரம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 40).

    இவர் மனைவி சாந்தி (38), குழந்தையுடன் வசித்து வருகிறார்.

    சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில், நேற்று காலை மனோகரன், மனைவி சாந்தியுடன் குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    பின், பீரோவில் இருந்த 6 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி ஓடினர்.

    பின்னர், மனோகரன் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்க்கும் போது நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

    தகவலறிந்த வலங்கமான் இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு பிரிவு போலீஸ் அறிவழகன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராணுவவீரர் வீட்டில் நகை-பணம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அண்ணாநகரைசேர்ந்தவர் ராமு(வயது35).இவர் ஜம்முகாஷ்மீரில் ராணுவவீரராக பணிபுரிந்து வருகிறார். மனைவி சுந்தரலேகா(29). இவர் கடந்த 23-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தையல் வகுப்பிற்கு சென்றுவிட்டார். 

    அவர் மாலையில்  வந்து பார்த்தபோது பூட்டிய வீட்டின் கதவு  திறந்திருந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன்நகை மற்றும் ரூ.30  ஆயிரம் ரொக்கம் கொள்ளைய
    டிக்கப்பட்டது தெரியவந்தது. 

    இது தொடர்பாக சுந்தரலேகா திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அந்த 
    பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். 

    அப்போது சுந்தரலேகா வீட்டிற்கு ராமுவின் அண்ணன் ராஜசேகர் மனைவி விஜயகுமாரி(எ)பேச்சிம்மாள், இவரது தோழி நாகதுர்கா இருவரும் வந்து சென்றது தெரியவந்தது. 

    இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமாரி, நாகதுர்க்காவிடம் விசாரணை நடத்திய போது இருவரும் சோ்ந்து ராமு வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நகை பணத்தை மீட்டனர்.

    பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே காணலாம்:
    இயற்கையாகவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுகிறது. பழங்காலத்தில் உடலில் காயங்களும், புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள்.

    பெண்கள் தங்க நகைகள் அணிவதற்குப்பின்னால் பல அறிவியல் மற்றும்  உடலியல் சார்ந்த நன்மைகள் அடங்கியுள்ளன. பெண்களின் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தங்க நகை அணிவது தீர்வாகிறது. தங்க நகைகளை பயன்படுத்துவதில் உள்ள அறிவியல் நன்மைகளை நாம் இங்கே காணலாம்:

    உடல் வெப்பத்தை சீராக்குகிறது:

    மனித உடலின் வெப்ப நிலை,  சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும். இதனால் சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. தங்க நகை அணியும்போது இயற்கையாகவே உடலின் வெப்பத்தை சீராக்குகிறது. உதாரணத்துக்கு, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும். தங்க நகை அணிவதன் மூலம் வெப்ப நிலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

    காயங்களுக்கான சிகிச்சை:

    இயற்கையாகவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கான பொருளாக தங்கம் பயன்படுகிறது. பழங்காலத்தில் உடலில் காயங்களும், புண்களும் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்க தங்க நகையை பயன்படுத்தினார்கள். இதன் மூலம் காயங்களும் குணமாகும், அவற்றால் ஏற்படும் நோய் தொற்றும் தடுக்கப்படும்.

    வாதத்தை தடுக்கும் மருந்து:

    வாத நோய் ஏற்படும்போது, விரல்களையும் கால்களையும் அசைப்பது சிரமமாக இருக்கும். தங்க நகை அணிவதன் மூலம் உடம்பில் நேர்மறை
    சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல், வாதத்தால் ஏற்படும் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தும். சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதனை பயன்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்கள்.

    மனக்கவலையை குறைக்கிறது:

    பெண்கள் அதிக அளவில்  மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். பதற்றமும், பயமும் ஏற்பட்டு நீண்ட கால கவலையாக உருவாகிறது. தங்க நகைகளை அணிவதன் மூலம், அவர்கள் உடலில் ‘நேர்மறை சக்தி’ பரவுகிறது. இதனால் உடலில் அமைதியான நிலை ஏற்பட்டு ரத்த நாளங்களை சீராக்குகிறது.சுவாசக் காற்றை உடல் உறுப்புகளுக்கு சரி சமமாக அனுப்பி நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.

    சருமத்தின் பராமரிப்பு:

    சருமம் வயதாவதை தடுக்கும் எதிர்ப்பு சக்தியாக தங்கம் செயல்படுகிறது. பல அழகுசாதனப் பொருட்களிலும், சரும பராமரிப்புப் பொருட்களிலும் தங்கத்தை பயன்படுத்துகிறார்கள்.

    மருத்துவ பயன்பாடு:

    புற்றுநோயை கண்டுபிடிக்கவும் தங்கம் உதவுகிறது. மது போன்ற உடலுக்கு தீங்கு தரும் பொருட்களுக்கு அடிமையாவதைத் தடுக்க தங்கம் பயன்
    படுத்தப்படுகிறது. தங்க நகை அணிவதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகி,  நரம்புகள் வலுவாகிறது. உதாரணத்திற்கு காதில் உள்ள நரம்பு கண்களுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் காதில் தங்க நகை அணிவதால் கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.

     அதுபோல, தங்க மூக்குத்தி அணிவதன் மூலம் குறிப்பிட்ட நரம்பு வலுவாகி பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் வயிற்றில் தங்க ஒட்டியானம் அணிவதால் வயிற்றுப் பகுதியில் நரம்புகள் வலுவாகி குழந்தை நலமாக பிறப்பதற்கு உதவுகிறது.
    மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    மதுரை

    மதுரை நாகமலை புதுக்கோட்டை, பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சந்திரபாண்டி (வயது 42). இவர் சமயநல்லூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். 

    இந்த நிலையில் சந்திரபாண்டி சம்பவத்தன்று காலை மாமனார் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். எனவே அவரது தாயார் வீட்டை பூட்டிவிட்டு ரூமில் படுத்து தூங்கினார். 

    அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் 85 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளை அடித்து தப்பிச்சென்றனர்.  


    இதுதொடர்பாக சந்திரபாண்டி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். 


    இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலிபரிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை கரிமேடு, மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (33). சம்பவத்தன்று இவர் இரவு திலகர் திடல், நாயக்கர் புது தெருவில் நடந்து சென்றார்.   அங்கு வந்த ஒரு வாலிபர்   கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,420-ஐ  பறித்து தப்பினார். 

    இது குறித்த புகாரின் பேரில் திலகர் திடல்   போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து  விசாரணை நடத்தினர். அவர் கரிமேடு, ராஜேந்திரா மெயின் ரோடு, தக்காளி ராஜ்குமார் (35) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 

    இதனைத் தொடர்ந்து  அவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ஆனையூர், மல்லிகை நகர், ரேக்ளான் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் நேற்று இரவு செல்லூர் கே.வி. சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கணேசனிடம் 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனை  பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில்,  செல்லூர்   போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×