search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeweler"

    • கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
    • நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்-ராஜபாளையம் மெயின் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் நிர்வாண சாமியார் ஒருவர் 30 நாள் புனித யாத்திரையாக ராமேஸ்வரம், கன்னியா குமரி செல்வதற்காக வந்த வழியில் இந்த கடைக்குள் சென்றுள்ளார்.

    அவர், கடை உரிமையாளரிடம் தான் ஹரித்துவாரில் இருந்து வருவதாகவும், இந்த பகுதியை கடக்க முயன்றபோது திடீரென எனக்கு கடவுள் அருள்வாக்கில் கேட்டதாகவும், அதில் உங்கள் நகைக்கடைக்கு சென்று உங்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு போ என கூறியதாகவும், அதனாலே தங்களது கடைக்கு தங்களை ஆசீர்வாதம் செய்வதற்காக வந்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் உரிமையாளரும், பணியாளர்களும் செய்வது அறியாது திகைத்துப் போய் நின்றனர். தொடர்ந்து நிர்வாண சுவாமியை கும்பிட்டு வரவேற்று அமர செய்தனர். அப்போது கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    தொடர்ந்து கடையின் உரிமையாளர், நிர்வாண சாமியாரின் வழிச் செலவுக்காக சிறிய தொகையை கொடுக்க, அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமி இது தனக்கு பூஜைக்கு உண்டான செலவு என்றும், என்னுடைய ஆசீர்வாதம் கிடைத்தால் நீ மிகப்பெரிய ஆளாய் வருவாய் எனக்கூறி நான் உனக்கு ஆசீர்வாதம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே கடையின் உள்ளே நகைகள் இருக்கும் பகுதிக்கு உரிமையாளரை போகுமாறு கூறினார். பின்னர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து உரிமையாளரின் தலையில் கை வைத்து மீண்டும் ஒரு முறை ஆசீர்வாதம் செய்தார். தொடர்ந்து, நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார். அதைக் கேட்ட உரிமையாளர் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை நிர்வாண சாமியாரிடம் கொடுப்பதற்காக எடுத்தார். அந்த செயின் வேண்டாம் பெரிய செயின் எடுங்கள் என்று நிர்வாண சாமியார் கையசைத்து கூறினார்.

    ஆனால் கடையின் உரிமையாளர் ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை மட்டும் நிர்வாண சாமியாரின் கழுத்தில் அணிவித்தார். அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமியார் தங்க செயின் மற்றும் பணத்தோடு வெளியே சென்றார். வட இந்திய சாமியார் தமிழகத்திற்கு வந்து பணம் மற்றும் நகையை லாவகமாக வாங்கிக் கொண்டு சென்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவெண்ணைநல்லூரில் நகை தொழிலாளி தூக்கு போட்டு இறந்தார்.
    • உடல் நல குறைவால் கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் கம்பன் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 34). இவர் நகை செய்யும் தொழில் பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் உடல் நல குறைவால் கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று இவரது தந்தை ரங்கநாதன் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ரங்கநாதன் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.
    • கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    மதுரை

    மதுரை புட்டு தோப்பு சொக்கன்பட்டறை தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 45). இவர் அங்குள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் பாண்டியராஜன் தூத்துக்குடியில் இருந்து 6 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு நள்ளிரவில் மதுரைக்கு திரும்பினார்.

    அவர் புட்டுத்தோப்பு மெயின் ரோடு ஒயின்ஷாப் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக பாண்டியராஜன் கரிமேடு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.41 லட்சம் மோசடி: மதுரை நகை வியாபாரி, மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • அவர்களுக்கு 56.876 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் கொடுத்தேன். கடனுக்கு நகை தாருங்கள். நாங்கள் அதனை விற்று சில மாதங்களில் பணம் செலுத்தி விடுகிறோம்’ என்று தெரிவித்தனர்.

    மதுரை

    சேலம் சீலநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் குமார் (41). இவர் மதுரை மாநகர குற்றபுலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    அதில் நான் சேலம் மாவட்டத்தில் வெள்ளி ஆபரண நகைக்கடை நடத்தி வருகிறேன். மதுரை பி.பி.குளம், ரத்தினசாமி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் பிரசன்ன வெங்கடேசன், அனந்த லட்சுமணன் ஆகியோர் என்னை தேடி வந்தனர். அவர்கள், நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறோம். நீங்கள் கடனுக்கு நகை தாருங்கள். நாங்கள் அதனை விற்று சில மாதங்களில் பணம் செலுத்தி விடுகிறோம்' என்று தெரிவித்தனர்.

    நான் அவர்களுக்கு 56.876 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள், இதுவரை பணத்தை திருப்பி செலுத்தவில்லை. நகைகளையும் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் குப்புசாமி மேற்பார்வையில், மாநகர குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா வழக்குப்பதிவு செய்து, நகை வியாபாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் பிரசன்ன வெங்கடேசன், அனந்த லட்சுமணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரியில் கவரிங் நகை வியாபாரியிடம் பறக்கும்படையினர் ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்து திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    ஆறுமுகநேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆறுமுகநேரி கடலோர சோதனை சாவடியில் எட்டயபுரம் தனித்தாசில்தார் ராஜலெட்சுமி, ஆறுமுகநேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை நடத்தினர். விசாரணையில் உடன்குடி அருகே உள்ள மெய்யூரை சேர்ந்த முகமது மகன் கவரிங் நகை வியாபாரியான ஷாகு பையிர் (வயது 41) என்பதும், ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது.

    மேலும் கார் வாங்குவதற்காக சென்னையில் உள்ள தனது சகோதரரிடம் இந்த பணத்தை வாங்கிவருவதாகவும் அவர் கூறினார். ஆனால் முறையான ஆவணங்கள் இல்லாததால் பறக்கும்படையினர் இந்த பணத்தை பறிமுதல் செய்து திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
    ×