திருவெண்ணைநல்லூரில் நகை தொழிலாளி தூக்கு போட்டு சாவு

திருவெண்ணைநல்லூரில் நகை தொழிலாளி தூக்கு போட்டு இறந்தார்.உடல் நல குறைவால் கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
திருவெண்ணைநல்லூரில் நகை தொழிலாளி தூக்கு போட்டு சாவு
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் கம்பன் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 34). இவர் நகை செய்யும் தொழில் பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் உடல் நல குறைவால் கடந்த 3 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று இவரது தந்தை ரங்கநாதன் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் ரங்கநாதன் வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com