search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry robbery"

    • டாக்டரின் ஆலோசனைக்கு பின் மாத்திரை வாங்க பொது மருத்துவ பிரிவு அருகே மூதாட்டி வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் லட்சுமி (72). இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற நேற்று வந்தார். டாக்டரின் ஆலோசனைக்கு பின் மாத்திரை வாங்க பொது மருத்துவ பிரிவு அருகே வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் லட்சுமிக்கு உதவுவது போல பேச்சு கொடுத்தார்.

    பின்னர் முதியோர் உதவி தொகை பெற்று தருவதாக கூறிய அவர் அதற்கு கழுத்தில் செயின் அணிந்து இருக்க கூடாது, அதனை கழற்றி கொடுங்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன் என்று கூறினார்.

    அதனை நம்பிய மூதாட்டி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை கழற்றி கொடுத்தார். ஆனால் அந்த நபர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை தாக்கி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    • விவசாயியை தாக்கி நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே ஏர்வாய்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிவேல் (வயது 34).விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி துர்கா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல், மணிலா, உள்ளிட்டவைகளை பயிரிட்டு தனது முழுநேர வேலையாக விவசாயம் பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று விவசாய நிலத்திற்கு சென்று வேலை பார்த்து விட்டு இரவு உணவு முடித்துவிட்டு தூங்க சென்றனர். இவர்கள் வீடு சிறிய அளவிலானது.

    அதனால் வீட்டிற்குள்ளே ஏற்பட்ட புழுக்கத்தால் இந்த தம்பதி வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு பின் பக்க கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளனர். நள்ளிரவில் அங்கு வந்த முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் வீட்டின் பின்புறம் நுழைந்து உள்ளே சென்றனர். பின்னர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மணிவேலை அந்த கும்பல் கட்டையால் தாக்கி அவரை கட்டி போட்டனர். இதை பார்த்த மணிவேல் மனைவி துர்கா திருடன்.. திருடன்.. என கத்தினார். உடனே அந்த மர்ம கும்பல் நீ சத்தம்போட்டால் உன் கணவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் துர்கா அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அந்த மர்ம கும்பல் துர்கா கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், மற்றும் பீரோவில் இருந்த தங்க நகை உள்ளிட்ட 6 பவுன் தங்க நகையை கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து மணிவேல் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகியோர் கச்சிராயபாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை தாக்கி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விவசாயியை தாக்கி நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • வளர்மதியின் பின்னால் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தான்.
    • செயினை பறிகொடுத்த வளர்மதி கூச்சல் போட்டு கொள்ளையனை பிடிக்க முயன்றார்.

    சென்னை:

    திருமுல்லைவாயலை சேர்ந்தவர் வளர்மதி. இவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் திருமுல்லைவாயல் நோக்கி பயணம் செய்தார்.

    பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை சென்றடைந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது வளர்மதியின் பின்னால் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தான்.

    பின்னர் மின்னல் வேகத்தில் ரெயிலில் இருந்த கீழே குதித்து தப்பி ஓடி விட்டான். டிப்-டாப் ஆக காணப்பட்ட அந்த வாலிபர் டி.சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ளார்.

    செயினை பறிகொடுத்த வளர்மதி கூச்சல் போட்டு கொள்ளையனை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    தப்பி ஓடிய கொள்ளையன் நடைமேடையையொட்டியுள்ள காலி இடம் வழியாக ஓடி ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறினான். இந்த காட்சிகள் ரெயில் நிலைய கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து கொள்ளையனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இச்சம்பவம் பெண் பயணிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்று காலை மீண்டும் கணவன், மனைவி இருவரும் நெய்வேலியில் உள்ள வீட்டிற்கு வந்தனர்.
    • வேல்முருகன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி சீனிவாச அவென்யூவில் வசித்து வருபவர் வேல்முருகன் (வயது 62). ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர்.

    இவர் நேற்று சென்னையில் இருந்த தனது மனைவியை அழைத்து வர சென்றார். இன்று காலை மீண்டும் கணவன், மனைவி இருவரும் நெய்வேலியில் உள்ள வீட்டிற்கு வந்தனர்.

    வீட்டின் முன்பக்க கதவு உடைந்து திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைந்து திறந்து இருந்தது.

    பீரோவில் உள்ள பாதுகாப்பு அறையை பார்த்தபோது, அதிலிருந்த 20 பவுன் நகை, 1/4 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இத்தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்த முக்கிய தடயங்களை சேகரித்தனர். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    • தேவகி திருவிழாவிற்காக அரக்கோணம் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார்.
    • தேவராஜ் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கனகம்மாசத்திரம்:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் தேவராஜ் (வயது 38). இவர் திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த வாரம் தேவராஜின் மனைவி தேவகி திருவிழாவிற்காக அரக்கோணம் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். வீட்டில் தேவராஜ் மற்றும் அவரது தாயார் சுசிலா மட்டும் இருந்து வந்தனர். இந்த நிலையில் வழக்கம்போல் கடந்த புதன்கிழமை தேவராஜ் வேலைக்கு சென்றார். அவரது தாயார் தேவகி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டில் மறைவான இடத்தில் வைத்து வெளியே சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் சாவியை எடுத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றனர். அந்த நேரத்தில் திருவிழாவிற்கு சென்ற தேவகி வீடு திரும்பினார். அப்போது வீட்டினில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து தேவகி தனது கணவர் தேவராஜுக்கு தகவல் தெரிவித்தார்.

    தேவராஜ் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டை திறந்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அடையாளம் தெரியாத நபர் சுந்தரராஜிக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.
    • சபலம் அடைந்த சுந்தரராஜை போனில் பேசிய நபர் கூடுவாஞ்சேரி சிற்பி நகர் பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார்.

    வண்டலூர்:

    சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 36), இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு வந்து வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேசியபோது அடையாளம் தெரியாத நபர் சுந்தரராஜிக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதில் சபலம் அடைந்த சுந்தரராஜை போனில் பேசிய நபர் கூடுவாஞ்சேரி சிற்பி நகர் பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுந்தரராஜ் மோட்டார் சைக்கிளில் கூடுவாஞ்சேரி சிற்பி நகர் பகுதிக்கு சென்றபோது அப்போது அங்கிருந்த 3 பேர் கொண்ட கும்பல் சுந்தரராஜை கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி விட்டு அவர் கையில் அணிந்திருந்த 2 தங்க மோதிரம், ஒரு லேப்டாப், ஒரு போன், ஒரு வாட்ச் மற்றும் சுந்தரராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து சுந்தரராஜ் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சியின் அடிப்படையில் 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    • நாகர்கோவிலில் சிந்து பதுங்கி இருப்பது தெரியவரவே, போலீசார் நாகர்கோவில் வந்து அவரை கைது செய்தனர்.
    • சிந்துவிடம் ஏமாந்தவர்கள், இது வெளியே தெரிந்தால், அவமானம் என கருதி புகார் எதுவும் கொடுக்காததால் அவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கேரளாவில் ஆண்களிடம் மயக்கும் விதத்தில் பேசி, அவர்களை தனியாக அழைத்துச் சென்று இளம்பெண் ஒருவர் நகை-பணம் பறிப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன.

    ஆனால் நகை-பணத்தை இழந்தவர்கள் யாரும் புகார் எதுவும் கொடுக்காததால், இந்த சம்பவம் குறித்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, இளம்பெண் ஒருவர் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி அருகே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார், நகை-பணத்தை பறிகொடுத்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் தன்னிடம் மயக்கும் வகையில் பேசியதாகவும் பின்னர் அவர், ஆட்டோவில் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும் அந்தப் பெண் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் தான் மயங்கி விட்டதாகவும், கண் விழித்து பார்த்தபோது நகை-பணத்துடன் பெண் மாயமாகி விட்டது தெரிய வந்ததாகவும் அவர் கூறினார்.

    இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திய போது, மோசடியில் ஈடுபட்ட பெண் வெட்டிக்காடு சிந்து (வயது 34) என தெரியவந்தது. அவர், நகை-பணத்துடன் தமிழகத்திற்கு தப்பி சென்று விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஹரிலால் தலைமையிலான போலீசார், தமிழகம் சென்று ரகசியமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் நாகர்கோவிலில் சிந்து பதுங்கி இருப்பது தெரியவரவே, போலீசார் நாகர்கோவில் வந்து அவரை கைது செய்தனர். அப்போது அவருடன் இருந்த முகமது ஹாஜா (29) என்பவரும் கைது செய்யப்பட்டார். வல்லகடவு பகுதியைச் சேர்ந்த இவர், தொழில்முறை கூட்டாளி என்பதும், சிந்துவுடன் சேர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று ஆட்டோவில் அழைத்துச் சென்றவருக்கு குளிர்பானத்தில் அவருக்கு தெரியாமல் தூக்க மாத்திரைகளை சிந்து கலந்து கொடுத்ததும் அவர் மயங்கியதும் முகமது ஹாஜாவை வரவழைத்து நகை-பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி உள்ளனர். நாகர்கோவில் வந்த அவர்கள், தங்கத்தை ஒரு நிறுவனத்தில் விற்று விட்டு கோவா சென்றுள்ளனர். அங்கு பணத்தை ஆடம்பரமாக செலவு செய்து விட்டு நாகர்கோவில் வந்த போதுதான் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். சிந்துவிடம் ஏமாந்தவர்கள், இது வெளியே தெரிந்தால், அவமானம் என கருதி புகார் எதுவும் கொடுக்காததால் அவர் தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் எத்தனை பேரிடம் இதுபோன்று கைவரிசை காட்டி உள்ளார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • செவ்வாய்ப்பேட்டை போலீசார் கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா (வயது 40). இவர் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இவர் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு சாவியை வராண்டாவில் உள்ள வாசிங்மெஷினில் வைத்து விட்டு சென்றார். மதியம் அவரது மகன் வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்த நிலையிலும், அதிலிருந்த பொருட்கள் சிதறியும் கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தாய் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, கவிதா அங்கு ஓடோடி வந்து பீரோவுக்குள் பார்த்தபோது, அதிலிருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. மர்மநபர்கள் வீட்டின் கதவை திறந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், நகைகளை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, அங்கு வந்த கைரேகை நிபுணர்களும், வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இ.எஸ்.ஐ ஊழியர் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது.
    • குத்தகை தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் வசித்து வந்தவர் சகாதேவன் (வயது 87). இவரது மனைவி ஜானகி (80). இவர்கள் அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து பராமரித்து அங்கேயே தனியாக வசித்து வந்தனர்.

    நேற்று மாலை அருகில் வசிக்கும் அவர்களது மகன் ஒருவர் சகாதேவனை பார்க்க வந்தார். அப்போது வீட்டின் வெளியே சகாதேவன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் தவறி கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்.

    ஆனால் வீட்டில் இருந்த தாய் ஜானகி மாயமாகி இருந்தார். அவரை தேடிவந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சகாதேவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைகை்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாயமான ஜானகியை உறவினர்கள் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை முந்திரி தோட்டத்தில் உள்ள முட்புதரில் ஜானகி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜானகி அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. அவரது கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு சகாதேவனையும், ஜானகியையும் கொடூரமாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    முதலில் சகாதேவனை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்ட ஜானகி அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய போது அவரையும் தாக்கி கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் ஜானகியின் உடலை முட்புதரில் வீசி விட்டு சென்றதால் அவர் கொலையுண்டது உடனடியாக தெரியவில்லை.

    மொத்தம் சுமார் 20 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் கொலையாளிகள் அள்ளி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. எவ்வளவு பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை.

    தம்பதி கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அங்கு வந்த மர்ம நபர்கள் யாரேனும் வயதான தம்பதியினர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை-கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தனிப்படை போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருன்றனர்.

    மேலும் முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளக்குறிச்சியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 24 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்
    • கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிதம்பரம்பிள்ளை தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகள் விஷ்ணு பிரியா (வயது 24) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை, இதேபோல் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்ந ஆசைத்தம்பி மனைவி சொர்ண புஷ்பம் என்பவர் அணிந்திருந்த 13 பவுன் நகை, வேறு ஒரு பெண்ணிடம் 4 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் 8 லட்சம் என கூறப்படுகிறது.

    இது குறித்து மூன்று பெண்களும் தனித்தனியாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் அதன்படி போலீசார் இந்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து பொதுமக்கள் முறையாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மர்ம நபர்கள் பெண்களிடம் நகையை திருடிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் மர்ம நபர்கள் நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விருத்தாசலத்தில் துணிகரம்: பஸ் அதிபர் வீட்டில் 45 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் ரோஜாபூ தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 63). பஸ் அதிபர். இவர் தனது குடும்பத்தி–னருடன் சென்னையில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க கடந்த 2 நாட்க–ளுக்கு முன்பு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இன்று அதிகாலை பஸ் அதிபர் ஜெயச்சந்திரன் வீடு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த–போது பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அவருக்கு மேலும் பதட்டம் அதிக–மானது.

    பீரோவை பார்த்த–போது அதில் இருந்த 45 பவுன் தங்க ஆபரணங்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்ப–ட்டிருந்தது. இதனால் பதறிபோன ஜெயச்சந்திரன் இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ளனர். கொள்ளை–யர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்க–ப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க–வில்லை. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க–ப்பட்டுள்ளது.

    நெல்லை அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை போனது.
    நெல்லை:

    நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சந்தோசம் (வயது 55).

    இவர்களது மகள் காந்திமதியை அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர். சமீபத்தில் காந்திமதி இறந்துவிட்டார். இதனால் சந்தோசம் தனது மகள் வீட்டுக்குச் சென்று அவரது குழந்தைகளை கவனித்து வருகிறார்.

    நேற்று காலை வழக்கம்போல தனது வீட்டில் வேலையை முடித்துவிட்டு கதவை பூட்டி விட்டு சந்தோஷம் தனது மகள் வீட்டுக்கு சென்றார். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைந்து கிடந்தது.

     இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க செயின் திருட்டு போயிருந்தது.

    இது தொடர்பாக சந்தோஷம் தாழையூத்து போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
    ×