என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு: ஓடும் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிய கொள்ளையன்

- வளர்மதியின் பின்னால் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தான்.
- செயினை பறிகொடுத்த வளர்மதி கூச்சல் போட்டு கொள்ளையனை பிடிக்க முயன்றார்.
சென்னை:
திருமுல்லைவாயலை சேர்ந்தவர் வளர்மதி. இவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயிலில் திருமுல்லைவாயல் நோக்கி பயணம் செய்தார்.
பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை சென்றடைந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது வளர்மதியின் பின்னால் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் செயினை பறித்தான்.
பின்னர் மின்னல் வேகத்தில் ரெயிலில் இருந்த கீழே குதித்து தப்பி ஓடி விட்டான். டிப்-டாப் ஆக காணப்பட்ட அந்த வாலிபர் டி.சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ளார்.
செயினை பறிகொடுத்த வளர்மதி கூச்சல் போட்டு கொள்ளையனை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
தப்பி ஓடிய கொள்ளையன் நடைமேடையையொட்டியுள்ள காலி இடம் வழியாக ஓடி ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறினான். இந்த காட்சிகள் ரெயில் நிலைய கேமராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து கொள்ளையனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் பெண் பயணிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.